எட்டுத்தொகைக்குள் ஒன்று கலித்தொகை திணையிலக்கியப் பாடல்களுள் செறிவானவற்றைத் தொகையென்பர் தொகைகளுள் கலகத்தோடு வரும் தொகை கலித்தொகை முன்னைய வாழ்க்கையும் நினைத்துக் கொண்டு வரும் பாடல்.இப்பாடல்களை நடன ஓவியமாக அரங்கேற்றலாம். கலித்தொகையிலே 51 வது பாடலைப் பாருங்கள். ஊரின் நினைவு கண்முன்னே ஓடிவரும். ஊரின் மண்மணம் கமழும் இப்பாடலைப் படித்து முடித்த பின்பு,இப்பவெல்லாம் காதலையா பண்ணுறாங்க கண்ணறாவியாக் கிடக்கு. ஆனால் காதலுக்கு விளக்கம் சொல்லும் மூன்றாம் பால் இப்பாடல்
சுடர் தொடீஇ! கேளாய் - தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி ,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்!

ஒளிவீசும் வளையல்களை அணிந்திருக்கும் என் தோழியே கேளடி ஒரு நாள் தெருவில் நாம் விளையாடிக்கொண்டிருக்கும் போழ்து
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
நாம் செய்த மணல் வீட்டைக் காலால் சித்ததோடு மட்டும் நில்லாமல் வரிந்து கட்டிய
கோதை பரிந்து, வரிப் பந்து கொண்டு ஓடி,
மயிரையும் இழுத்து, ஓலையால் செய்த எங்கள் வரிப்பந்தையும் எடுத்துக்கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
நோகடித்த அந்தச் சிறுபயல், விடலையான அந்த ஒருநாள்
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
அம்மையும் நானும் திணையில் இருக்கும் போது, தெரியாதவன் போல் வீட்டுக்காரரே
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை
தாகமாய் இருக்கிறது தண்ணீர் தருவீர்களா என வந்தவனுக்கு அம்மா
'அடர் பொன் சிரகத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
செம்பில் தண்ணீரை வார்த்து,எடியேய் பிள்ள இந்தா
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்; என, யானும்
தண்ணீரை கொண்டுபோய் கொடு என்று சொல்ல நானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
அவன் நோக்கம் அறியாது செல்ல, தண்ணீரை வாங்குவது போல் என்
வளை முன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு,
கையை செம்போடு சேர்த்து அழுத்தினான் நான் திடுக்கிட்டு
'அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!' என்றேனா,
அம்மாஅ இவனைப் பாருங்கோ என்று குளற
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
அம்மாவும் அலறி அடிச்சுக்கொண்டு ஓடிவர, நான்
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
அவனுக்கு விக்குது என்றேனா! அம்மாவும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
அவர் முதுகை வருடி ஏனப்பு தண்ணிய பாத்துக் கொடிச்சிருக்கலாமே என்னவும்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம்
என்னை அவன்(அவர்) கண்ணால் கொல்வான் போல் பார்த்துச்
செய்தான், அக் கள்வன் மகன்!
சிரித்தான் என்னை கொள்ளை கொண்டவன்
இன்று இவர்கள் இன்புற்று வாழ்கின்றனர். கூடல் கொள்வதால் இத்திணை குறிஞ்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக