கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 6 ஜூன், 2012

குதிரை மறம்!

பாடியவர்: பொன் முடியார் திணை:
நொச்சி துறை: குதிரை மறம்! 

பருத்தி வேலிச் சீறூர் மன்னன் 
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.


பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய மன்னனின் குதிரை
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி,
உழுந்தின் தோலை உண்டு தளர்ந்த நடையோடு வறியதானாலும் கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ
கடலைக் கிழித்துக்கொண்டு ஓடும் கலத்தைப்போல பகைப்படையை பிளந்து போரைச் செய்ய
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின், நெய்வார்த்து மிதித்த உணவை உண்ட ஒழுங்காக அலங்கரிக்கப்பட்ட
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, பெருமன்னர்களின் கிண்கிணி மாலை அணிந்த குதிரைகள்
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
முருகன் கோயிலில் புழங்கும்
கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
கலங்களை தொடாத மகளிரைப்போல தீட்டுப்பெற்றனவோ!

குறிப்பு:சிறிய மன்னன் குதிரை போர்செய்ய. தின்று கொழுத்த குதிரை அடிவாங்கியது உவமானம்-குதிரை,உவமேயம்-மன்னன்

கருத்துகள் இல்லை: