ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய் - சீரிய
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டுபோல் நிற்க பணி
(ஒளவையார்)
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
நீர்ந்தாரின் தீர்ந்தன்(று) உலகு
(திருவள்ளுவர்)
-:ஆள்வினை உடமை:-
ஒருவர் தாம் எடுத்துக்கொள்ளும் பணியை நிறைவேற்றாது இடையில் விட்டுவிட்டால் உலகம் அவரைப் போற்றாது மறந்துவிடும். ஆகவே மேற்கொள்ளும் செயலை இடையீடின்றி முடிப்பதற்கு முயலவேண்டும்.
வீழ்ந்த
தமிழன்
கதையை
விம்மி விம்மிப்
பாடிக்
கொண்டிருக்கிறது
மேடையில்
வெட்கங் கெட்ட
வில்
(காசியானந்தன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக