கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 24 நவம்பர், 2007

'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர்


தென்மொழியும் ஆங்கிலமும் வடமொழியும் முற்றும்
செறிவான இலக்கியமும் இலக்கணமும் கற்றும்
பன்மொழியும் பழமொழியும் பல்காலும் ஆய்ந்தும்
பன்மொழிக்கு நன்மொழியாம் பைந்தமிழில் தோய்ந்தும்
தொன்மொழியின் சொற்பிறப்பை அடிவேரைக் காட்டி
தொடர்புடைய மொழி இனத்தை ஒப்பிட்டுக் காட்டி
முன்மொழிக்கும் முதன்மொழியாம் முத்தமிழ்தான் என்றே
முனைப்புடனே பாவாணர் முழக்கமிட்டார் நன்றே!

ஒரு சொல்லை கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள்
அருவியெனப் பொழிகின்ற அனைத்து மொழிப் பெருஞ்செல்வ
தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய்
ஆய்தமிழுக் காட்பட்டோர் வாழ இனும் வழியில்லையோ
அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய்
தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே.

- பாவாணர் மணிவிழாக்குழு, மதுரை -
குறைமதியார் தேக்கிவைத்த கறையிருளை
நீக்கவந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார்!
தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய்,
ஆர்த்திலங்கு சீர்த்தியினார்!
நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால்
புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி!
அமைந்தொளிரும் குடவிளக்கு!
மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால்
மிடிமை வாய்ப்பட்ட கடமைக் காவலர்!
- முனைவர் மு. தமிழ்க்குடிமகன் -
மொழிக்கென்றே தோன்று மொழிமீட்பர் நங்கள்
மொழிக்கென்றே ஆராய்ந்த முப்பர் - மொழிக்கென்றே
ஈகியாய் வாழ்ந்த இனமானப் பாவாணர்
ஆகியாய் வாழ்வார் அரண்.
வேர்கண்டார் வேரின் விளக்கமும் தாம்கண்டார்
கூர்கொண்ட வேரின் குலம்கண்டார் - யார்கண்டார்
தொல்லாசன் சொல்லெல்லாம் தோய்பொருள என்றதனைச்
சொல்லரிய மெய்ப்பாய்ச் சொல.
_______
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
வாயிறு வண்டமிழ் வாழவாழ் நம்மொழி
ஞாயிறு போல்விளங்க லான்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
எங்கணும் தங்கிய இன்றமிழ் நேயருள்
தங்கிய நேயரென்ன லான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
பூமலர்த் தேனெனப் பொங்கிய வேர்வளம்
தாமுறுபா வாணரென்ன லான்.
தீந்தமிழ் போற்றுதும் தீந்தமிழ் போற்றுதும்
ஏந்திய ஞால முதன்மொழி ஈதெனத்
தேர்ந்தமீட் பர்கிளர லான்.
- புலவர் இரா. இளங்குமரன் -
ஆர்த்தபகை வெல்லும் அணிகள் பலதந்து
சீர்த்த புகழ்நிறுத்தும் செந்தமிழர் பாவாணர்
கூர்த்த புலமையராய்க் கொள்கை அரிமாவாய்ப்
போர்த்த இருளகற்றும் பொற்கதிரோன் பாவாணர்
ஞால முதல்மொழி நந்தமிழெ என்றுரைத்தும்
மூலத் தமிழெ திரவிடைடின் தாயென்றும்
ஆரியத்தின் மூலம் அதுவே எனவுரைதும்
பூரியரின் வாயடைக்கப் பூட்டறைந்தார் பாவாணர்
தென்குமரிக் கண்டமதே மாந்தன் பிறந்தகமாம்
செந்தமிழும் ஆங்கே பிறந்ததென்றார் பாவாணர்
முன்னை மொழிகாக்க மூத்த குடிகாக்கத்
தன்னை அழித்த தகையாளர் பாவாணர்
செந்தமிழே வாழ்வாய்த் தகழ்ந்ததனால் பாவாணர்
நந்தமிழ்த் தாத்தா நவில்.
- முனைவர் ந. அரணமுறுவல் -

கருத்துகள் இல்லை: