- இயற்றமிழ்
- இசைத்தமிழ்
- நாடகத்தமிழ்
இயற்றமிழ்
இயல்பாகவுள்ளது இயற்றமிழ் எனப்படும்.செந்தமிழ் - பைந்தமிழ் - அந்தமிழ் - வண்டமிழ் - தண்டமிழ் - ஒண்டமிழ் - தென்றமிழ் - இன்றமிழ் - மன்றமிழ் - நற்றமிழ் - பொற்றமிழ் - முத்தமிழ் - தேந்தமிழ் - தீந்தமிழ் - பூந்தமிழ் - பழந்தமிழ் - இளந்தமிழ் - பசுந்தமிழ் - அருந்தமிழ் - இருந்தமிழ் -நறுந்தமிழ் - மாத்தமிழ் - சீர்த்தமிழ் - தாய்த்தமிழ் - ஒளிர்த்தமிழ் - குளித்தமிழ் - உயத்தமிழ் - வளர்த்தமிழ் - மரத்தமிழ் - அறத்தமிழ் - திருத்தமிழ் - எழிற்றமிழ் - தனித்தமிழ் - கனித்தமிழ் - பொங்குதமிழ் - கொஞ்சுதமிழ் - விஞ்சுதமிழ் - விளங்குதமிழ் - பழகுதமிழ் - அழகுதமிழ் - தூயதமிழ் - ஆயதமிழ் - கன்னற்றமிழ் - வண்ணத்தமிழ் - இன்பத்தமிழ் - செல்வத்தமிழ் - வெல்கதமிழ் - கன்னித்தமிழ் - முத்தமிழ் - அன்னைத்தமிழ் - தெய்வத்தமிழ் - அருமந்தமிழ் - அமிழ்தினுமினிய தமிழ்
.
இசைத்தமிழ்
.
உலகத்திலேயே இசையால் வளர்த்த மொழிகளுள் தமிழ் மொழி முதல் மொழியாகும். இந்த கருத்துக்கு வலிமை சேர்க்க ஆங்கில அறிஞர் கூறியதையும் குறிப்பிடலாம். " சிவனும் தமிழும் நடமாடும் போது எம் முன்னோர் குகைகுள் இருந்தார்கள்" . அதாவது நாகரிகம் அடையாத மக்களாய் வாழ்ந்தார்கள் என்பதேயாகும். நம் முன்னோர் பொருளறிந்து இசையறிந்து இசைத்தமிழை வளர்த்தார்கள். அக்காலத்தில் தான் தமிழோடு இசையும் வளர்ந்தது. உலகத்திலேயே நிறைய இசைக்கருவிகள் மீட்டிப் பாடிய பெருங்குடி நம் குடியாகத்தான் இருந்திருக்கிறது. முதன்முதல் முத்தமிழ் இலக்கண நூல் தோன்றியதும் எம் இனத்தில் தான். அகத்தியர் படைத்த அகத்தியம் வழி நூலேயன்றி மூல நூலல்ல. முந்து நூல்கள் அதற்கும் முந்தியவை. அவ் ஓலைச்சுவடிகளில் தமிழையும் இசையையும் ஆய்ந்து அறிந்து நம் முன்னோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.அவை பத்தாயிரம் ஆண்டு காலத்துக்குரியவையாக இருந்திருக்கலாம். இனி
.
கருவி : கல்>கரு>கருவி
.
தோற்கருவிகள்
.
அடக்கம் , அந்தரி , அமுதகுண்டலி , அரிப்பறை , ஆகுளி , ஆமந்திரிகை , ஆவஞ்சி , உடல் , உடுக்கை , உறுமி , எல்லரி , ஏறங்கோள் , ஒருவாய்க்கோதை , கஞ்சிரா , கண்விடு தூம்பு , கணப்பறை , கண்டிகை , கரண்டிகை , கல்லல் , கல்லலகு , கல்லவடத்திரள் , கிணை , கிரிக்கட்டி , குட முழா , குண்டலம் , கும்மடி , கைத்திரி , கொட்டு ,கோட்பறை , சகடை , சந்திரபிறை-சூரியபிறை , சந்திவளையம் , சல்லரி , சல்லிகை , சிறுபறை , சுத்தமத்தளம் , செண்டா , டமாரம் , தக்கை , தகுணித்தம் , தட்டை , தடாரி , தண்டோல் , தண்ணுமை , தபலா , தமருகம் , தமுக்கு , தவண்டை , தவில் , தாசரி , தப்பட்டை , திமில , துடி , துடுமை , துத்திரி , துந்துபி , தூரியம் , தொண்டகச்சிறுபறை , தோல்க் , நகரி , நிசாளம் , படவம் , படலிகை , பம்பை , பதலை , பறை , பாகம் , பூமாடு , பெரும்பறை , பெல்ஜியக் கண்ணாடிமத்தளம் , பேரி , மகுளி , மத்தளம் , மதங்கம்முரசு , முருடு , மேளம் , மொத்தை , விரலேறு , ஜமலிகா என்பன தோற்கருவிகளாகும்.
.
நரம்புக்கருவிகள்
யாழ் , வீணை
ஊது கருவிகள்
இசைக்குழல் ( நாகசுரம் ) , புல்லாங்குழல் , மகுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக