யாழ்ப்பாணம் (Jaffna) என்ற நாட்டின் பெயர் இலங்கையில் தமிழர் என்ற நூலில் செய்தித்தொகுப்புகளோடு கூறப்பட்டுள்ளது பக்கம்122 ஐ பார்க்கலாம்.
இஆழ்ப்பானாயந் பட்டினம் - (கி.பி 1435) , யாழ்ப்பாணம் - (கி.பி 1532 ), யாட்பாணம் - ( கி.பி 1603 ) , யாள்ப்பாணம் ( கி.பி 1604 ) , யாப்பாண பட்டனம் (கி.பி 1685 ) , கியல்பான தேசம் ( கி.பி 1715 ) , யாட்பாணதேசம் ( கி.பி 1734 ) ,
யாபா பட்டுன கி.பி 1450 ஆண்டளவில் எழுதப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள்
- பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி
- திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை
- பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை
- நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு)
- சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம்
- திருநெல்வேலி - திண்ணைவேலி
- சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை
- சங்குவேலி
- ஆல்வாய் - அல்வாய்
- கருணைவாய் - கரணவாய்
- பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை
- புத்தூர்
- கிளாலி ( பச்சிலைப்பள்ளி )
- கரம்பன்
- நாகர்கோயில்
- பழை
- தெல்லிப்பழை
- கொட்டைக்காடு
- அச்செழு
- இடைக்காடு
- வல்லிபுரம்
- மன்னறத் - மன்னார்
- யாவகர் சேரி - சாவகச்சேரி
- கச்சாய்
- சாவகக்கோடு
ஒல்லாந்து நாட்டு ஊர்களோடு ஒத்த எங்கள் ஊர்கள்.
- காரைதீவு ( Amsterdam)
- அனலைத்தீவு ( Rotterdam )
- வேலணை ( Leyden )
- நெடுந்தீவு ( Delft )
- நயினாதீவு ( Haarlem )
- புங்குடுதீவு ( Midelburg )
- ஊராத்துறை ( Kayts )
- ஊராத்துறைக்கோட்டை ( Halmenhiel)
- காக்கைத்தீவு (Galienye )
- பாலைதீவு ( Galue )
- இரணைதீவு ( Twee Gebroeders )
சிங்களப் பெயரோடு ஒட்டும் எம் ஊர்கள்
- இணுவில் [ ஹினிவில்/ஹினிவில - 'சின்னக்குளம்' 'சின்னவயல் வெளி', 'இனிவில்/இனிவில - பிரித்த வயல்வெளி ]
- உடுவில் [ உடுவில - ' மேட்டுக்குளம்/மேட்டுவயல்வெளி ]
- கொக்குவில் [கொக்காவில ( கொக்கா- கொக்கு) ]
- கோண்டாவில் [ கொண்டவில/கொண்டாவில ]
- மட்டுவில் [ மட்டிவில ]
- சுருவில் [ சுருவில]
- மத்துவில் [ மந்தவில - ' காய்வேளைக்குளம் ' ]
- நுணாவில்
- வேராவில் [ வேரவில ( வேர- கத்தரி,மஞ்சள்) ]
- இத்தாவில் [ இத்தவில் ( இத்த' பூக்கொத்து' ' குலை' ]
- மிரிசுவில் [ மிரிஸ்வில ( மிரிஸ் - மிளகாய் ) ]
- வேவில் [ வேவில ( வே- பிரம்பு ) ]
- கெருடாவில் [ கருடாவில - தேளுள்ளகுளம் ( கருட - தேள்)]
- நந்தாவில் [ நந்தா -உடுப்பு துவைக்கும் பெண்]
- நீவில் [ நீவில ( நீ - நீர்) ]
- மல்வில் [ மல்வில ( மல் - மலர்,வேடர், மலை முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்)]
- முகாவில் [ முகவில ( முக- முதன்மை,விசேஷம்,சிறந்த)]
- இருவில் [ ஹிருவில ( ஹிரு - எருக்கஞ்செடி)]
- பண்டாவில் [ பண்டாவில ( பண்டர் - அரசகுமாரன்)]
- சுளுவில் [ சுளுவில ( சுளு - சிறு) ]
- தளுவில் [ தல - பனை,தாழ்வு ]
- கூவில் [ குவில ( கு - அற்ப,சிறிய)]
- யாவில் [ யாயவில ( யாய - பெருவெளி) ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக