கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

தமிழீழத் தாயே தமிழினி

                       


        

பார்த்ததுண்டோ உமைப்போல் போராளிகளை
தூற்றுவோர் அனைவரும் தமிழினத்துத் துரோகிகளே
நேர்த்தியான போர்ப்படைக் கட்டமைப்பு
நிமிர்வான செந்நோக்கு 
சூரியப் பிரகாசமாய் உடலமைப்பு - இது
புலிகளுக்கே உரித்தான இலட்சியக் கோட்பாடு
கிளிகளை வளர்த்து குரங்கிடம் கொடுத்தது போல்
புலிகளை வளர்த்து சிறிலங்காவிடம் கொடுத்தது காலம்
அன்றொரு காலம் அஞ்சிய காலனும்
பின்னொருகாலம் சிரித்துக் கொண்டே
எருமையில் ஏறிப் பவனி வருகிறான்
எங்கே புலி எங்கே புலியென்றே
ஒவ்வொரு வீட்டிலும் தேடுகிறான்
காலா! கேள் உனைக் காலால் உதைவேன்
என்றந்தப் பாரதி உரைத்தது போல்
என்றோ ஒருநாள் எங்கள் புலிகள்
காலிலும் மிதிபடுவாய் போ...
சிறைப்பட்ட புலிகளுக்கு என்னென்ன நடந்தன
சிறைவாசம் தமிழருக்கு எனென்ன கொடுக்கும்
என்ற நிதர்சனத்துக்கும் சமானத்துக்கான அரசியல்
பெண்போராளி கொடுக்கும் சாட்சியம்
கால்களை கைகளை வாயைக் கட்டி
காவாலிச் சிங்களத்தின் கொடூரம் எவ்வகை
உரிமையைக் கொடுக்கும் என்ற சுயநிர்ணய
நிர்வாணத்து தரும் ஒவ்வொரு புலிக்குமான
சாட்சியம் தான் இந்தப் புனிதவதியின்
பூ உடல்,
தாயே
தமிழ்ப்பதியே
தமிழினி!
நீங்கள் ஆடியது கொற்றவைக் கூத்து
அக்கூத்து பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் எதிரானது
ஆடத்தெரியாது அருகிருந்து பார்த்த போக்கிலிகள்
இன்று அரசியல் பேசட்டும்
கோடாலிக்காம்புகள்
ஒரே மரத்தில் பிறந்த
தீக்குச்சிகள்!
அவை மூட்டிய நெருப்பிலேயே அவையே
நீர்த்துப் போகும்.... அவற்றையெல்லாம் ஏந்த
எங்கள் தாயகம் குப்பைத் தொட்டியல்ல
தமிழீழம் மாவீரர் தாயகம்
அக்கா!
ஊடகங்களில் நீ உதிர்த்த வார்த்தைகளும்
போர்க்களத்தில் ஆடிய தமிழ்ச்செருக்கும்
அரசியலில் ஈட்டிய பெருமதிப்பும்
அகிலம் அறியும் சகத்தின் அத்தனை
பெண்போராளிகளுக்கும் நீங்களே பாடம்
மணிப்பூரும் காஸ்மீரும் இன்னும் பலவும்
பிரளயமாய் உருவெடுக்கும் அதில்
ராஜீவுகளையும் மகிந்தாக்களையும் மோடிகளையும்
மண்டியிட வைக்கும் தாயகங்கள் மலரும்
தமிழீத் தாயே புன்னகையோடு வாழ்த்துவாள்
வாழ்க தமிழீழத்தின் தமிழ்ப்பதிகளே!
வாழ்க நூற்றொரு காலம்..........

கருத்துகள் இல்லை: