கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அடைக்கலம் தந்த வீடுகள்

தாயகமீட்புப்போரில் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து அரும்பணியாற்றினார்கள். அதனால் துணைப்படை என்றும் எல்லைப்படையென்றும் விரிவாக்கம் பெறுவதற்கு விழிப்புக்குழு மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டதை யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. மூத்தோரின் பங்களிப்பு என்பது விடுதலைக்கு எந்தளவு முக்கியம் என்பதை பல கட்டங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்ரன. கழற்றிக்கொடுத்த தங்கத்தில் இருந்து தங்கள் பிள்ளைகளை இயக்கத்துக்கு அனுப்பும் வரை எத்தனை தியாகங்கள்.எத்துணை அர்ப்பணிப்புகள் எத்தனை இழப்புகள். அகிம்சைக்கு உயிர்கொடுத்த அன்னை பூபதியில் இருந்து இயக்க வலிமைக்கு தன் குலத்தையே கொடுத்த வைத்திலிங்கம் இலக்குமி அம்மை வரை எத்தனை தாய்மார்.இராணுவத்தை கையோடு பிடிக்கும் வேளை அவன் குண்டைக் கழற்றி வெடிக்க வைக்கும் வரை உடும்புப்பிடி பிடித்த உழவனின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் எத்தகைய அளப்பரியது.முதல் மகன் மாவீரன் இரண்டாவது மகன் மாவீரன் மூன்றாவது மகனின் வித்துடலைக்கண்ட தாய் நான்காவது மகனும் தனக்குண்டு என போராளின் கையில் கொடுத்து விழவிழத் தருவேன் என்ற வீரத்தை எவரால் அளவிட முடியும். அந்த தியாகிகளின் வரிசையில் சோதியாச்சியையும் காண்க!
சோதியாச்சி
வரமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டு காங்கேயன் துறையை புகுந்த வீடாகக் கொண்டு செழிப்புற்று வாழ்ந்தவர் தாம் சோதியாச்சி.விடுதலைப் புலிகளின் தலைவர் மேதவத்திரு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாடலே சரியென்று வாழ்ந்தவர்.எத்தனையோ இன்னலுக்கு மத்தியில் போராளிகளைக் காத்து வளப்பதில் அக்கறையாக இருந்தார். அவருடைய மகன்களில் கடைசிமகன் இயக்க உறுப்பினராகவே செயற்பட்டவர்.சோதியாச்சி கொண்ட பற்றைப் பற்றி புலிப்போராளிகள் வன்னியில் பாசறையில் இருந்து நகைச்சுவையாகப் பேசுவர்.அந்த அளவுக்கு சோதியாச்சியின் வீரமும் விவேகமும் சிறப்பானவை.ஒருநாள்,
இந்திய இராணுவ முற்றுகை நிகழ்ந்தது.அக்கணம் ஒரு போராளி சோதியாச்சி வீட்டுக்கு வந்திருந்த வேளை அம்முற்றுகை இடம் பெற்றது. அடுத்த வீட்டில் இருந்து சோதியாச்சி வீட்டுக்கு வருவதற்கு வேலிக்கூடாக கடந்து கொண்டு வரப்போவதை ஊகித்துக்கொண்ட ஆச்சி அப்போராளியைக் காப்பாற்ற தன் ஏடலின் திறனால் அப்போராளியைக் காப்பாற்றினார். காப்பாற்றுப்பட்ட போராளி வெளியே வந்து "தும்மல் வந்ததனை வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தாக்குப்பிடிக்க பெரும் பாடாய்ப் போய்விட்டது என்று சிரிக்கவும், இந்தா பிள்ளை சயனைட்டு ஆமியைக்கண்டு ஒன்றும் தெரியாமல் கடிச்சுப்போடாதைங்கோ பிள்ளையள் இறுதிவரைக்கும் போராடுங்கோ" என்று அறிவுரையும் வழங்கினார்.
அந்த அளவுக்கு ஆச்சியின் துணிச்சல் அபாரமானது. எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஆமிக்காரனை வெளியேற்றினால் தான் எங்கள் பிள்ளைகள் நலமாக வாழ்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை சோதியாசிக்கு என்று உடன் போராளிக்குச் சொல்லி படிப்பிப்பது தளபதிகளின் கடமையாக்வும் இருந்தது.
சோதியாச்சி வேறுயாருமில்லை மூத்த போராளிகளில் ஒருவரான பிலிப்பு அவர்களின் தாயாவார். பிலிப்பு அவர்கள் மன்னார் மாவட்ட தளபதிகளோடு தளபதியாக பல களங்களில் வெற்றியீட்டியவர்.பன்றிக்குட்டியைத் தாட்டு வைத்துவிட்டு அயலில் இருந்த உறவுகளை வேறிடங்களுக்கு அனுப்பிவிட்டு வரும் போது காந்த்திருந்த இராணுவம் சரிமாரியாகச் சுட்டதில் பிலிப்பப்பாவும் அவருடன் இருந்த இருபோராளிகளும் அத்தலத்திலேயே வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர். அந்த வீர மகவைக் கருவில் சுமந்த தாயின் பணியும் அளப்பரியதாகவே இருந்தது.ஆச்சியின் மூத்த மகளின் கடைசிமகனும் தன்னை போராட்டக் களத்தில் அர்ப்பணித்து ஈழத்தின் துயரைக் களையும் வேவுப்பணிப் போராளியாக தன்னை இணைத்துக் கொண்டு வீரம் செறிந்த களங்களுக்கு வழிகாட்டியாகவும் சென்று பல சாதனைகள் புரிந்தார் கலையரசன் என்னும் மேஜர் நிலையில் உள்ள போராளி. தேசியத்தலைவரிடம் விருதையும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டனன்.
கலையரசன்
போரியலைக் கற்றுக்கொடுக்கும் லெப்.கேணல் சசி அவர்களிடம் கூட இருந்து போரியல் வலகரங்களைக் கற்றுக்கொண்டான்.தனது ஐயப்பாடுகளைக் கேட்டு தன்னுறுதியை வளர்த்துக்கொண்டான்.வேவுப்பணி முடிந்ததும் அதைச் சேகரித்து பால்ராஜிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஆசான் சசியிடம் சென்று அறிவுரைகளைக் கேட்டுக்கொள்வான்.வேவுப்பணியின் போது எதிரியவன் பாசறைக்குள் நின்று கொண்டே அவர்கள் தாகத்துக்கு தண்ணீர் வார்த்தான். திரும்பி வரும் போது அவர்கள் சாப்பாட்டுக் கோப்பையைக் கொண்டு வந்து விடுவான். நெடுநேரம் எதிரி பாசறைக்குள்ளேயே அவன் துணிச்சலோடு நடைபோட்டான். எல்லாம் பேத்தி சோதியாச்சி கொடுத்த துணிவுதான்.தமிழீழப் போராட்டத்துக்காக முப்பது ஆண்டுகள் மூன்று தலைமுறை துணிச்சலோடு போராடி ஐ.நாவிடம் தமிழரின் தாயகத்தின் தாகத்தை ஒப்படைத்திருக்கிறது.அடுத்த தலைமுறையான ஈழநிலாவும் களமிறங்குகிறாள்.
தவளைப்பாய்ச்சல் வேவுப்பணி வெற்றியின் பின் பரிசளிப்பு வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை: