கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 8 பிப்ரவரி, 2017

இராவண காவியம்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஈடிணையல்லாப் புகழ் காவியம் தான் இராவண காவியம். கம்பனிடமும் இல்லாத கலைசொல்வடிவம். ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு காலத்தில் புரட்சியின் அடிப்படையாய் அமைந்தவை. இருபதாம் நூற்றாண்டுப் புரட்சியிலே மலந்தது தான் இராவண காவியம்.இக்காவியத்தை இந்தியா தடை செய்துள்ளது. பார்ப்பணச்சூழ்ச்சிக்குள் சிக்குண்ட காந்தியாலும் பார்ப்பனரை எதிர்த்து ஐக்கிய இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வாங்கித்தர முடியவில்லை.இந்தியச் சுதந்திரம் வெறுமனேபார்ப்பன பார்ப்பணச் சுதந்திரமே அன்றி மக்கள் சுதந்திரமன்று என்பதை உணர்ந்த பெரியார் மாற்றம் வேண்டி பெரும் புலவர் பலரைத் தேடினார் கிடைத்தது ஏனோ "உண்டதைக் கக்கும் கூட்டம் தாம்" அந்த புலவர்களியே முற்றிலும் எளிமையாய் பெயரிலும் குழந்தையாய் அமைந்த புலவர் தாம் புலவர் குழந்தை எப்பொழுது கேள்விகேட்கும் சுயமரியாதைக்காரர் தமிழகத்தில் பார்ப்பன சாதித்துவக் குப்பைக்குள் முற்றிலும் வேறுபட்ட போக்கில் ஒரு குன்றிமணி அயோத்திய தாசரை அடியொற்றிய அம்பேக்கரை சற்றுக் கவனித்தார் பெரியார் தமிழகத்தில் புத்துயிர் பிறந்தது. அப்புத்துயிர்ப்பில் பிறந்தது இராவண காவியம்.



புலவர் குழந்தையின் அவையடக்கம்

"ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
பேசு வார்சிலர் பேச எதிர்மனம்
கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே!

தமிழகத்தையும் தமிழீழத்தையும் நன்கு உணர்ந்ததாலேயே இவ்வரிகள் பனுவலாய் விரிந்தது.

"ஆயிரம் முகத்தால் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே"
என்ற பழம் பாடலுக்கு இண்டையாய் பாயிரத்தில் அமைந்த முதல் பாடல் தமிழின் தொன்மையு தமிழர் வரலாறும் தொன்மையன்றோ

"உலகம் ஊமையா வுள்ளவக் காலையே
பலகலைப் பயன் பாங்குறத் தாங்கியே
இலகி இன்றுநான் என்னும் மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயினைப் போற்றுவாம்"

காவிய மீள் பார்வை........

கருத்துகள் இல்லை: