கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொங்கலோ பொங்கல்

சிறைப்பட்டோர் மீண்டுவர
குறைப்பட்டோர் தெளிந்துவர
உறைபடுத்த போர்வாள்
உறைகழற்றி மீண்டும்வர
திறல்காளைகள்  திமிராட
அறத்துக்காய் மறமோங்க
அடுப்பிலே ஏற்றுவோம்
புதுப்பானை அதிலே
ஊற்றுவோம் ஆவின்பாலை
நம்மாழ்வார் நம்தலைவர்
போற்றி பாடி வரவேற்போம்
பொங்கலோ பொங்கல்

கருத்துகள் இல்லை: