பெருங்கடற் கரையது சிற்வெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை யாரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோ டமையா தலர் தன்றே
Q
பெருங் கடல் கரை அது சிறு வெண் காக்கை
இருங் கழிடத்தே வாழும் அயிரைப் பற்றி உண்ணும்
நீர்த் துறையைக் கொண்ட தகுதித் துறைவன்
நம்மோடு அமையாது நலம் கெடுத்தலோடு
ஊர்ப்பழியும் வந்ததே
@
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க எனவேட் டேமே
Q
ஆதன் என்றது குடியினையும் அவினி என்பது குடியைக் காக்கும் அரசனைக் குறிக்கும்
இக்காலம் மேதகு.தேசியத்தலைவரைக் குறிக்கும்
வாழியவே குடியே வாழியவே அரசே
வயல் வளம் சிறப்பாயாக வருக வருக இரவலரே ஐயமின்றி வருவீரே
என வேண்டுவாளே எம் அம்மைபோலும் நீல தோடுகளை விரித்து மலரும் பூத்திருக்கும் தண்துறை நெய்தல் ஊரான தலைவனுடைய நட்பானது தலைவியோடு வழிவழியாக சிறப்பதாக என நாம் வேண்டினேம்
@
புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ
நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித்,
தலைப்பெயற் செழும்புனல் ஆடித்
தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே,
Q
அன்பும் அக்கறையும் மிகுந்த நல்ல மனைவி மனையிருக்க, புதிய புதிய பரத்தையரோடு கூடி காமம் நுகர்து மகிழ்ந்தவன் அதிகாலையிலே சிவந்த கண்களோடு வருகிறவனை வா என்பதா இனிவராதே என்பதா. நல்லற வாழ்வே அறியாதவனை ஏன் தான் எனக்கு அளி(ழி)தனையோ இறைவியே!
கலாசாரம் சீரழியும் இக்காலத்துக்கும் பொருந்துமல்லவோ!
புனல் நீராட்டு