கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 28 மார்ச், 2015

சிங்கப்பூர்


லீ குவான் யூ.....

இணையம் முழுவதும் இவருடைய மரண செய்தியை பார்த்தேன்.உண்மையில் எனக்கு இவர் யாரென்று தெரியவில்லை.இவர் சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்தவர் என்றும் முன்னாள் பிரதமர் என்ற செய்தியும் தான் தெரிந்தது.இணையம் சென்று இவரைபற்றி தெரிந்துக்கொண்ட போது ’இருந்தாலும் மறைந்தாலும் இவர் பேர் சொல்ல வேண்டும்.இவர் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்த சிங்கப்பூரின் தந்தை இவர்.ஒருமுறை பிரிட்டீஷ் குழு அறிக்கையில் உலகின் மிக மோசமான சேரிகளை கொண்ட இடம் சிங்கப்பூர் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்நாட்டை நாகரீக சமுதாயத்தின் ஒரு அவமானம் என்றும் கேலி பேசியது....இதனை கேட்டு வெகுண்ட லீ அவர்கள் 1960 ல் பிரதமர் ஆனவுடன் வீட்டமைப்பு வளர்ச்சி கழகத்தை துவங்கி ஐந்தே ஆண்டுகளில் 54 ஆயிரம் குடியிருப்புகளை உருவாக்கினார்..

அனைவருக்கும் வீடு என்பதே அவரது லட்சியமாக இருந்தது.அவரது இந்த லட்சியத்தினால்தான் இன்று சிங்கப்பூரில் 82 சதவீத மக்கள் சொந்த வீட்டிலும்,அவர் உருவாக்கிய வீட்டமைப்பு வளர்ச்சி கழக வீடுகளிலும் வசிக்கின்றனர்.அது மட்டுமல்ல குட்டி நாடாக இருந்தாலும், பொருளாதார வல்லரசாக மாற்றியவர் லீ. அதோடு பலமிக்க ராணுவத்தை கொண்டதாக சிங்கப்பூர் மாறியதற்குக் காரணம் இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்.கடந்த 1963ஆம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படை தாக்கியது. அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.இந்த தாக்குதலுக்கு பின்னர், பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ. உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்டதாக மாறியது..

ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவி வகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்களை கூட்டி சுத்தம் செய்தார். இதற்கு பின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத் துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன் பின்னணி இதுதான்.......

31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக வாழ்ந்தவர் லீ குவான் யூ.

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றதன் 50வது ஆண்டு பொன்விழா தற்போது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட வேண்டும் என லீ, தனது நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக லீ மரணமடைந்துள்ளதால், சிங்கப்பூர்வாசிகள் தற்போது லீ.,க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லீ.,யின் மரணத்தை அடுத்து ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளதால் சிங்கப்பூரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது......

மாபெரும் சபை தனில் நீநடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் .
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.......

- Panimalar Vaithi

ஞாயிறு, 15 மார்ச், 2015

பட்டினப்பாலை

ஆசிரியர், உத்திரக்கண்ணனார் கடலூரைச் சேர்ந்தவர்.
திருமாவளவன் என்னும் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெறும் நோக்குடன் இப்பாடலைப் பாடியுள்ளார்.

நூற்பெயர்க்காரணம்; பொருளும் பிரிவும் இணைந்து பட்டினம் + பாலை பட்டினப்பாலை எனப்பட்டது.

¤ கரிகாலனிடம் சேர்க்கப்படாதிருந்த இப்பாடலைக் கண்டெடுத்துப் படித்த போது மாறுவேடத்தில் இருந்த மன்னன் அறிந்து பரிசு தந்ததாகக் கருதப்படுகிறது.

கருணபரம்பரைக்கதை - மரபுவழிக்கதை என்பன சிந்திக்கத்தக்கது.

காவிரியின் சிறப்பு

நாட்டுக்குச் சிறப்பு ஆறு. "ஆறு இல்லாத ஊர் பாழ்" என்பாள் ஔவை. நீரின்றி அமையாதுலகு, காவிரியின் சிறப்புக்கு வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைஇய கடற்காவிரியின் புனல் பரந்து பொன்கொழிக்கும் என்றார் - காவிரியின் சிறப்பு அத்தகையது வானத்தில் விளங்கும் வெண்மீண்களுள் வெள்ளி (சுக்கிரன்) ஒளிமிக்கு  விளங்குவதாகும்.

¤ சுக்கிரன் வடபாக்கம் சிறிது சாய்ந்தாற் போன்று விளங்குவது அங்ஙனமின்றித் தெற்குப் பாக்கம் சாய்ந்தது போல விளங்கினால் வற்கடம் உண்டாகும்.
நீர் வளம் உடைமையால் நெல் வளம் மிக்கது நாடு நாட்டு வளத்துக்கு நீர் வளம் இன்றியமையாத்தது.
சோழ நாட்டின் சிறப்பு உரைக்க வந்த புலவர் நீர் வளத்தைக் கூறி,"விளைவறா வியன் கழனி" என்று விளைச்சலைத் தரும் வயல்களாகிய கழனிகளைக் குறிக்கின்றார். அதனால் விளைச்சல் குன்றா வயல் என்றார்.
கார் என்பதற்குப் பசிய என்பது பொருள். கார்க் கரும்பு - பசிய கரும்பு

செம்மை மிக்க கரும்பின் மணம் வீசும் ஆலைகள் மிக்க அதன் தீயில் உண்டாகும் புகையால் மிக வாடிய நெய்தற் பூ உடைய வயல் என்று நீர் வளம் பெற்ற வயலை விளக்குகின்றார்.

நீர்வளத்தால் வளம் பெற்ற அந்த வயலின் சிறப்பைக் காட்டுதற்கு அதனது விளைச்சலைப் பேசிகின்றார்.மோட்டெருமைக் கன்றுகள் உண்டு,பசியாறி நிழலிற் துஞ்சும் என்கிறார்.

மோடு - வயிறு (பெருத்த வயிறு)

மோட்டெருமைக் கன்று - எரிமைக் கன்றுகள் வயிறு பொருத்த தோற்றமிடையன. நாட்டின் சிறப்புக்கு வயல்களின் அயலில் அமைந்த மரங்களின் நிழல் பற்றிய செய்தி இடம் பெறிதல் காணலாம்.

குலை வாழை கோட்தெங்கு, காய்க் கமுகு, கமழ் மஞ்சள், இனமா, இணர்ப்பெண்ணை(பனை), முளையிஞ்சி என்றெல்லாம் நாட்டின் வலமான சோலைகளைக் குறிக்கின்றார்.நெல், சேப்பங்கிழங்கு,இஞ்சி,மஞ்சள் முதலியனவற்றைக் காய வைத்துப் பதப்படுத்தலும்

காவல்மகளிர் அவற்றைக் காத்தற் பொருட்டு தம் நகையாகிய தொங்கட்டான்களைக் கொண்டு கோழிகள் விரட்டப்படுதலும் நாட்டின் வளப்பம் கூற வந்த செய்திகளே!

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு"

"கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா
 நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி
 பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதங்
 குலஞ்சு ரக்கும் ஒழுக்கங் குடிக்கெலாம்"
எனக் கம்பரும் கூறுதல் காணலாம்.

நாட்டினது அரசு சிறந்தால் நாடு சிறக்கும் அதனால் அச்சந்தரத் தக்க பகைகளை அறியாத செல்வம் மிகுந்த பல குடிகள் செழித்து வாழும் பாக்கத்துக்குக் குறும்பல் ஊர் என்றும் உரைக்கக்காணலாம்.
"மாநிலங் காவல .னாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
 தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் 
 ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
 ஆனபயன் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ"