இணைவலையில் தேடித்தேடி அருமையன ஆசானைக் கண்டறிந்தேன். இவர் பரம்பரை சிந்துவெளிக்கு உரித்தானவர்கள். இந்தியத்தின் விடுதலைக்காக போராடி தூக்கு மேடையேறிய பலருள் பகவத்சிங் மதிக்கத்தக்கவர். அவர் மரபினனிடம் இசைபயில்வதைப் பெருமையாகக் கொள்கிறேன். தபேலாவெனும் வடநாட்டு மென்முழவைக் கற்பிப்பதில் மிகச்சிறந்த ஆசானாக இவரை யான் கலையுகத்துக்கு அடையாளப்படுத்துவதில் பெருமையும் அடைகிறேன்.இந்திராகாந்தியின் வலகரத்தால் ஈழத்தில் வளர்க்கப்பட்ட ஒரு போராளிக்குழுவால் சீக்கியப் பேராளிகள் பெற்கோயிலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்காக ஈழவனாக யான் வெட்கப்படுகிறேன். சீக்கியர்கள் சிறப்புடன் வாழ்ந்து தம் தேசியத்தை மீட்கவேண்டுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக