ஓசுலோவிலிருந்து பேர்கன் வரை
திருவள்ளுவராண்டு ௨௰௪௫ எமது கால ஆண்டு 2014
ஓசுலோ நோர்வேயிலிருந்து பேர்கன் நகருக்கு சிற்றூர்தியில் மகன்களோடு சென்றிருந்தேம். கிட்டமட்ட ஐந்நூறு சதுரக்கல் சேய்மைவரை இச்செலவு அமைந்தது. பதினொரு மணிநேரப்பயணம் நிறைந்த பயனுள்ளதாக இருந்தது.நகரங்களையும் காடுகளையும் மலைகளையும் ஆறுகளையும் ஓடைகளையும் ஊர்திகளையும் கால்நடைகளையும் கட்டிடங்களையும் நகர்ந்து ஒரு வாழ்க்கைப்பயணம் நகர்வது போலும் நகர்ந்தது இலைதுளிர்கால விடுமுறை.
நல்ல காலநிலை நலமான வாழ்வோட்டம்.இரோவ்னரில்(Stovner) தொடங்கிய பயணம் திறம்மன்(Drammen) ஊடாக கடலோரச் சாலையூடாக ஒருமணி நேரத்திற்கு எழுபது, அறுபது,எண்பது என ஏ16 நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது எமது சிற்றூர்தி.
ஒருமணிநேரத்தில் முதலில் ஒரு குழுமச்சுற்றில் அடுத்த சாலையை(Rv7)
எடுத்தூஉர்ந்தோம்.அழகிய பண்ணைகளைக் கண்ட மகிழ்வு. ஓரங்களில் புற்கற்றைகளைக் கண்ண்டோம். வெள்ளை நிறத்திலான உறைஏந்துகளில் அடைக்கப்படு அவை அழகாக ஓரங்களில் காட்சியளித்தன.சற்று ஊர்ந்த பின் எரிபொருள் நிலையமொன்றில் ஓய்வெடுத்துக் கொண்டோம்.அங்கு இறைச்சிக் கலவைச் சுற்றை வாங்கி உண்டோம்.தற்பொழுதுள்ள காலத்தில் தான் மண்ணை உழுது கொண்டிருப்பர்.மேழமாத்தில் தான் விதைப்புக்கு அணியமாகி கொள்வர். இக்காலம் நோர்வே நாட்டுக்கு மங்கள மாதம் அதனால் தான் மஞ்சளால் முட்டைகளை அலங்கரித்துக் கொண்டு. சேவல்களும் கோழிகளுமே கேராக்கள்.மிகவும் மகிழ்வாக இருக்கும் காலம். இம்மாதத்தில் தான் புத்தாண்டு பிறப்பதாக நினைத்துக் கொள்வர். தமிழர் தையில் கதிரவனுக்கும் மகரத்தில் நிலவுக்குமாக இயற்கைக் கதிர்களுக்கு பெருவிழா எடுப்பர். இக்காலத்தை வேந்தனுக்குமுரிய நாளாகவும் கொண்டனர் என்பதே உண்மை.
ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நோர்வே மக்களின் குடியிருப்பு இது. இங்கு இவ்வகையான வீடுகள் இருக்கும் போழ்து நம் தாயகங்களில் இரவணன் பொன்னாலான முடியையுடைய அரண்மனையையும் அதன் பின்னதான கரிகாலன் கல்லணையையும் பெருங்கிள்ளியான அருண்மொழித்தேவன் பெருங்கோயிலையும் பல்லவர் காலத்தவனான நரசிம்மன் கற்சிலைத் தோட்டத்தையும் அமைத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்திருந்த தமிழகம் தமிழீழத்தின் இன்றைய தோற்றமும் இதுவே!
நீண்ட மலையகத்தில் கட்டடக்கைலையின் வரலாறே தனியானது அது பின்னர் தருவேம்.
இது வாடி வீடு . இதை வகைக்குப் பெற்றிருந்தோம் ஒரு நாளைக்கு நானும் பிள்ளைகளும் தங்குவதற்கு 790 குரோணர்கள் கட்டவேண்டும். 12 மணியிலிருந்து மறுநாள் 12 மணிவரையே இப்பணத்தினை அறவீடு செய்கின்றனர்.இப்படங்களை இறுதியாக வந்த தொழில்நுட்பம் கொண்டதான கையடக்க இயக்கி மூலம் இயற்கையை நிழல் பிடித்திருந்தோம். இப்படங்களுக்கு உரிமம் உள்ளவர்கள் சத்தியானந்தன் குடுப்பத்தினராகிய நாமே.
நோர்வே மலையகத்தின் கவினைக் காண்பவர் தம் மனைதைப் பறிகொடுத்துவிடுவர் என்பது திண்ணம்.
நன்றி
ச.உதயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக