கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

"நாம் இந்த நாட்டை விரும்புகிறோம்"


ஓனசு(Årnes)
ஓனசு(Årnes) என்ற இடத்துக்கு சிற்றுந்து மூலம் போயிருந்தோம்.நாம் இருக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட (45km) நாற்பத்தைந்து சதுரக்கல். அவ்விடத்துக்கு செல்லும் முன் குளும்மா(Glomma) என்ற ஆற்றைக்கடக்க வேண்டும். அக்கரையில் தான் ஓனசு 61 விழுக்காடு(%) தொழிற்சாலைகள்  அங்குள.குளும்மா(Glomma) என்ற ஆறு பெரிய ஆற்றிலிருந்து சிறிய ஆறாக கிளையெடுத்து வருகிறது. அந்த ஆற்றின் அருகில் நினைவுப் படிமம் உள்ளது அந்தப் படிமம் இரண்டாம் உலகப்போர் தொடங்கியதில் இருந்து அப்போர் முடியும் வரை போரிட்ட அவ்வூர் போராளிகள் பற்றியது.அறுபத்தேழு ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் அப்படிமம். "நாம் இந்த நாட்டை விரும்புகிறோம்"என்று அவர்கள் காலடியில் எழுதப்பட்டுள்ளது. அந்தப் படிமத்தருகில் இருமரங்கள் நாட்டப்பட்டுள்ளன அவை இரண்டும் அகவையை எடுத்துச்சொல்லக் கூடியன.  அங்கு நோர்வே நாட்டு பழங்குடிகள் வாழ்ந்திருக்கலாம் குளும்மா(Glomma) ஆறு அன்று நிறைந்த மீன்வளத்தைக் கொண்டதாக இருந்திருக்கலாம் ஆனால் இன்று மீன்வளம் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. விடாது பெய்த மழையால் நீர் இன்று உயந்து காணப்படுகிறது. நீங்களும் சென்று பாருங்கள் ஓனசில்(Årnes) வீற்றியிருக்கும் அந்த நோர்வே நாட்டு மாவீரரை. கிட்லர் ஆட்சிக்கு அடிபணியாது போராடி வீழ்ந்த மாவீரருக்கு தமிழாசான் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

"நாம் இந்த நாட்டை விரும்புகிறோம்"

இரண்டாம் உலகப்போரில் கிட்லர் படைகளுக்கெதிராக போராடிய அப்போராளிகள் விபரங்கள் வருமாறு.
* கிட்டலர் படையோடு ஏற்பட்ட மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ளனர்
*கனடாவில் போர்ப்பயிற்சியின் போது ஒருவர் வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்
*கிட்லர் படைகளால் பிடிபட்டு (புலனாய்வில் ஈடுபடும் போது) இருவர் சுடப்பட்டு வீரமரணத்தை தழுவிக்கொண்டுள்ளனர்.
*அருகில் உள்ள குளும்மா அற்றின் பாலத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டுள்ளார்.


மாவீரர் படிமத்துக்கு அருகில் உள்ள மேனாட்டு உணவகம்


கருத்துகள் இல்லை: