கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

அறிவன் சித்தார்த்தர்


கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து வ
ிட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார்


ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!) 

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை 
திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....


தமிழ் நாகரீகம்


தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல. ஆனால் தமிழர் நாகரீகத்தை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழனின் பெருமையை உணர செய்யும் உண்மையான அரசு அமைக்க பட வேண்டும். அது ஊழல் தொழிலில் உளுத்து போன திமுக அதிமுகவினால் ஆகாது முடியாது.
அவர்களிற்கு கொடுத்த நன் காலங்களை வீண் செய்து விட்டார்கள்.
பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். 

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

[பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.
தூய தமிழ்ச்சொற்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

தீரன் சின்னமலை



மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

##வரலாறு##

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.





[ஆதாரம் தேவை]


தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.[ஆதாரம் தேவை]
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

##வெற்றி##
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது.[ஆதாரம் தேவை] சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

##தூக்கிலிடப்படல்##

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம்.[ஆதாரம்தேவை] ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். மாவீரன் சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.


புதன், 22 ஆகஸ்ட், 2012

பண்டிதர் க. அயோத்திதாசர்

தமிழ்த் தேசிய தந்தை பண்டிதர் க. அயோத்திதாசர்

பண்டிதர் க. அயோத்திதாசர் 1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார். தன் இயற்பெயர் காத்தவராயன். அப்பா பெயர் கந்தசாமி, அம்மா பெயர் தெரியவில்லை. பண்டிதருடைய தாத்தா பெயர் கந்தப்பன். கந்தப்பன் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார் . பழைய ஓலை சுவடிகள், தமிழ் நூல்கள் வைத்திருந்தார். பாரம்பரிய சித்த மருத்துவராக இருந்தார்.

இன்று நாம் வைத்திருக்கும் த
ிருக்குறள் நூல் பண்டிதறுடைய தாத்தா பாதுகாத்த நூலாகும். தன் தாத்தா கந்தப்பனைபோலவே மிக சிறந்த தமிழ் பண்டிதராக, சித்த மருத்துவராக விளங்கினர். வல்லகத்தி புலவர் அயோதிதாசரிடம் கல்வி கற்க சென்றார். தன் குருவின்பால் கொண்ட அன்பின்காரணமாக தன் பெயரை அய்யோதிதாசர் என்று மாற்றிக்கொண்டார்.

இளமைப்பருவம்

பண்டிதர் வாழ்ந்த சென்னை பகுதியில் 1869 – “சூர்யோதயம்” இதழ் வெளிவந்தது அதை புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர் நடத்தினார். 1871 இல் “பஞ்சமன் ” இதழும் வெளிவந்தது. அதில் தமிழ்,தமிழக வரலாறு போன்றவற்றை படித்த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? குறித்து விரிவாக சிந்தித்தார். அதன் பயனாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது ? அவர்களை எப்படி அரசியல் படுத்துவது என சிந்தித்தார். தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார் தன் 25 வயதில் “அத்வைதானந்த” சபையை 1870௦ இல் உருவாக்கி நடத்தினார்.நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார் . இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். மருத்துவப் பணிகளையும் செய்தார். மலையின பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இரங்கூன் சென்றார் அங்கே தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தசரதராமன் என் பெயர் சூட்டினார். அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்துபோனார்கள்.

திராவிட மகாஜன சபை

இரங்கூனில் செல்வசெழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள் ? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி ? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன்,ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வொடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப்பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.

மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .

சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடதிதிக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்தக்கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882 இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885 இல் “திராவிட பாண்டியன் ” என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார்.பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்த பின்புலமே காரணமாக இருந்தது. பண்டிதருக்கு அம்பிகாதேவி , மாயாதேவி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.

நாராதீய புராண சங்கைத் தெளிவு

ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது .தமிழின பூர்வக்குடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் ? என்ற தேடுதலால் ஊருஊராயி சுற்றித்திருந்தார். அப்போதுதான் “நாராதீய சங்கைத் தெளிவு ” எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு , தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.

நீலகிரியில் ஏற்கனவே ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து “திராவிட மகாஜன சபை ” யை 1890 இல் துவக்கி நடத்தினார் . திராவிட மகாஜன சபையின் சார்பாக ஒரு மாநாட்டை ௦01-12-1891 இல் ஊட்டியில் நடத்தினார்

இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பட்டது.

அத்தீர்மானங்கள்:

பறையர் எனக் கூறுவது அவதூறு, குற்றம் என சட்டம் இயற்றவேண்டும்


கல்வி வசதி வேண்டும்

கல்வி உதவித் தொகை அளிக்கவேண்டும்

கல்வி கற்றவர்களுக்கு அரசு வேலை

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்

பொது இடங்களில் நுழைய உரிமை

அரசு அலுவலகங்களில் நுழைய அனுமதி

கிராம முன்சீப் பதவி

கிராம புறம்போக்கு தரிசு நிலங்கள் வழங்கவேண்டும்

சிறைச்சாலை சட்டம் 464 பிரிவை நீக்குதல்

1892 ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக பண்டிதர் கலந்துகொண்டார் .இம்மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கல்வி ,புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இறைவனை வழிபட கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டபோது, அரங்கத்தில் உள்ள அனைவரும் எழந்து நின்று ” அந்த பறையனை வெளியே துரத்துங்கள் ” என சத்தம் போட்டார்கள் . பண்டிதருக்கு ஒரே அதிர்ச்சி. நாங்கள் இந்துக்கள் தானே ஏன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கிறீர்கள் என திரும்பத்திரும்ப கோபமாக கேட்டார். “உங்களுக்குத்தான் முனியாண்டி, காளியாத்தா , மாரியாத்தா இருக்க்கே அதை கும்பிடுங்கோ ” என்று சொல்லி பண்டிதரை மாநாட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பண்டிதர் கடும் கோபத்தோடு ஊர் திரும்பினார்

தமிழன் இதழ் 102 ஆண்டு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை , பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாகியண்டிதர் க. அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

சென்னை இரயப்பெட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்”என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. இந்த இதழ் யாருக்காக வெளிவருகிறது எனவும் விளக்குகிறார். ” உயர் நிலையும், இடைநிலையும் ,கடை நிலையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி , சரியான பாதை , நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காக, சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் , கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மனம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் கையொப்பம் வைத்திதனை யாதரிக்க கோருகிறோம் .” என அறிவிக்கிறார்.

இதழின் முகப்பில் “ஒரு பைசாத் தமிழன்” என்று இதழின் பெயரை புத்த குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் ‘ஜெ ய து ‘ என்றும் வலப்புறம் ‘மங்களம்’ என்றும் எழுதியும் நடுவில் நன்மைக்கடைபிடி என எழுதி இரு புறமும் மலர் கொத்து என அழகுணர்வோடு மிக நேர்த்தியாக தன் இதழின் சின்னத்தை வடிவமைத்திருக்கிறார்.

முதல் இதழில் கடவுள் வாழ்த்து , அரசர் வாழ்த்து ,தமிழ் வாழ்த்து,பூர்வத் தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள் ) சித்த மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றன.

ஓராண்டுக்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ” அச்சுக் கூடமும் பத்திரிகைப் பெயரும் மாறுதல் அடைந்தது” 26.08 .1908 என விளக்கமளித்து “ஒரு பைசா” நீக்கப்பெற்றது. பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு , வானிலை அறிக்கைகள், வாசகர் கடிதம் , அயல் நாட்டு செய்திகள் , விளம்பரம், நூல் விமர்சனங்கள் போன்றவை பிரசுரமாயின

தமிழகர்கள் அதிகம் வாழும் கர்நாடக, கோலார் தங்க வயல் , பர்மா தென்னாப்பிரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழன் இதழ் பரவியது.இந்து மதத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்தது.

தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத , பிராமணீய எதிர்ப்பு , சாதி ஒழிப்பு , தமிழ் மொழியுணர்வு , பகுத்தறிவு சமுக நீதி பிரதிநித்துவம் ,தலித் விடுதலை ,சுயமரியாதை இந்தி எதிர்ப்பு பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிரர்கள்.இதழியலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம்.

தமிழ்த் தேசிய தந்தை

சென்னை ஆயிரம் விளக்குப்பகுதியில் பிறந்து (20.05.1845 ) சிறுவயதில் நீலமலைக்கு குடிபெயர்ந்து அங்கே ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி 1870 இல் ‘அத்வைதானந்த சபை ‘ ஒன்றை நிறுவி கிருத்துவ மத மாற்றத்திற்கு எதிராக செயல் பட்டார். அவரது குடும்பம் வைணவ மத மரபுகளை பின்பற்றியவர்கள்.

அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை – சடங்குவாதம் -ஆண்மீகக்கொள்கை – மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்க்ம் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாக்கவுமிருந்தது.

பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 – 1891 வரை ‘யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் “இந்து” என பதிவு செய்த காலம்.

பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் “இந்து” என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார். அவ்வாறு இந்து அடையாளத்தை ஏற்றுக்கொண்டால், இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். தீண்டாமை,காணாமை, சாதியக் கொடுமையை அதிகமாக அனுபவகிக்கும் தலித்கள் ஒருபோதும் “இந்து” அடையாளத்தை ஏற்கக்கூடாது அதற்கு மாற்றாக ஒரு அடையாளத்தை தேடத்துவங்குகிறார். தமிழகத்தில் அப்போது பக்தி வடிவங்களில் தமிழ்-சைவ மீட்டுருவாக்கம் முயற்சி நடந்தது. இது ஒருவகையில் சாதியத்தை உள் வாங்கலின் ஒரு முயற்சியாகவே இருந்தது. அதாவது தமிழ்-சைவம் பிராமண எதிர்ப்புப் பேசியது ‘சாதி ஒழிப்பு ‘ குறித்து மௌனம் காத்தது என்பதால் தமிழ்-சைவத்தோடு இணைய வில்லை.


இதற்கிடையில் 1881 களில் ஆங்கில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான் அடையாளத்தை பதிவு செய்கிறார். “ஆதிதமிழன்” original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார். அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்தக்காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை அதற்கு பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து “ஆதி தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாக பதிவு செய்தார். இழிவான பெர்யர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழிஎன்றார். 1886 ஆண்டில் “ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல” என அறிக்கைவிட்டார். “நீண்ட காலத்த்ற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்” என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.


பிரம்மா ஞான சபை ஆல்காட் ( 1832 – 1907 ) ஏற்பட்ட தொடர்பால், தீண்டதாருக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், சென்னையில் முக்கியமான் 5 இடங்களில் “ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் ” என தலித்துகளுக்கு இலவச பள்ளிகளை நிறுவினார். இருந்தபோதும் பிரம்மா ஞான சபை பண்டிதரின் தேடலுக்கு இசைவானதாக இல்லை. கல்வியால் மட்டுமே தலித் மக்களை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தலித்துகளுக்காக ஒரு பெரிய பள்ளியை சென்னையில் நடத்திய அருட் திரு.டி. ஜான் ரத்தினம் அவர்களோடு நட்புகொண்டார், அவரோடு “திராவிட பாண்டியன்” இதழ் நடத்தினார். இருந்தும் ஜான் ரத்தினம் போல கிறித்துவ மதத்திற்கு மாறவில்லை. இந்தியாவில் அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. அதை “இந்து” பிராமணக் கட்சி என்று ஒதுக்கிவிட்டார். மேற்கண்ட அனதைது அமைப்புகளிலிரிந்தும் வேறுபட்டும் அவற்றிக்கு எதிராகவும் சுய அரசியலை சுய கருத்தியலை நோக்கி நகர்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காக எழுப்பிய பண்பாட்டு , மதத் தடைகளை நீக்குவது மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையை கொண்டுவரும். அதற்கான மரபுகளைத் தேடிக்கண்டுபிடிதார். அது “பௌத்தம்” என்ற சாதி ,வருண எதிர்ப்பு மதம்தான் பண்டிதருக்கு புகலிடமாகபட்டது. ஆல்காட்டின் உதவியோடு 1898 இல் பௌத்தம் தழுவினார்.

சென்னை இராயப்பேட்டையில் ‘சாக்கிய பௌத்த சங்கம் ‘ நிறுவினார். சாதியற்ற திராவிடர்களுக்கு முன்னோர் வரலாறுகளையும் பௌத்த தன்மத்தையும் விளக்குதல் மற்றும் நற்பண்பிலும் சமய ஒழுக்கத்திலும் தலித்துகளை முன்னேற்றுதல் போன்ற நோக்கங்களாக இருந்தது.

பண்டிதர் நடத்திய ஏழு ஆண்டு தமிழன் இதழ்களை காலவரிசையில் பார்த்தால், பண்டிதரால் உருவாக முடிந்த மாற்றுச் சிந்தனைகள், மாற்றுக் கதையாடல்கள், மாற்று வரலாற்ரைகாணலாம். சுய அரசியல் உருவாக்கத்தைக் காணலாம்.

சாதி இழிவை அகற்றுவது

இழிதொழில்களை, சாதிப் பெயர்களை மறுத்தார்.அவர்களை சாதியர்றோர் என புதிய வரலாற்றை எழுதினர்.

தலித்களுக்கு விடுதலையும் அதிகாரமும் வேண்டுமெண்டார்.

சமுதாய சமத்துவம், சாதி பேதமற்ற சமூகத்தை கட்டமைக்க விரும்பினார். அதற்கு பண்டிதர் வழிகாடியகவும் இருக்கிறார்.

பிராமணீய இந்துமத எதிர்ப்பு யாவும் தன் சொந்த பட்டறிவின் மூலம் பெற்ற ஞானமாகும்.

பண்டிதர் காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்களின் பெயர்கள்

ஞான போதினி, பிரம்மா ஞானபோதினி, சுகிர்த வர்த்தமானி, நீலலோசினி, விகடதூதன், சுதேசமித்திரன், பிரபஞ்ச மித்திரன், புதுவை மித்திரன், நாஞ்சில் நேசன் தென்ன்னிந்திய டைம்சு….என வடமொழியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த காலத்தில் , இன உணர்வேடு , இனிய தமிழில் தமிழன் எனபெயர் சூட்டி ஒரு வார ஏட்டை நடத்திய முதல் தமிழ்த்தேச உணர்வின் முன்னோடி பண்டிதர் க அயோத்திதாசர் ஆவார்.

இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’ என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருக்கைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசியத்தை பவுத்தம் உருவாகியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம் ,சமயம், அறக்கருத்தொற்றுமை,மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்ட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.

”மண்ணின் மைதர்களே இமண்ணை ஆளவேண்டும்” என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார் சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும் என்றார். ” தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும் ” மேலும் ” கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கார் 1930 களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார்.

பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நடைபோடும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தை கட்டமைக்கவேண்டும். அதற்கு நாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வெண்டும். அதற்கு பண்டிதரும், புரட்சியாளரும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தளபதி ஒண்டிவீரன்

புகழ்பெற்ற வரலாறு (தளபதி ஒண்டிவீரன்)


இந்திய விடுதலைப் போராட்டம் எங்கே, எப்போது துவங்கியது? என்று சொல்ல யாருக்கும் துணிச்சல் இல்லை, அது வீரம் விளைந்த தமிழ்மண்ணில்தான் என்று சொல்ல பலருக்குத் தயக்கம்! வெள்ளையர்கள் வியாபாரிகளாகத்தான் நம்நாட்டிற்கு வந்தார்கள். பின்னர் கொள்ளையர்களாக மாறினார்கள். அதைத்தான் நாம் எதிர்த்தோம். வந்தேறிகள் நாட்டை ஆள்பவர்களாக மாறி வரி வசூலித்தார்கள். எப்படி பொறுத்துக் கொள்ள 
முடியும்?
அதைத்தான் எதிர்த்தார்கள் தமிழ் சிற்றரசர்களின் சிலர். அந்த எதிர்ப்புதான் போர்களாயின. அந்தப்போர்கள்தன் இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்ப விதைகள். அந்த விதைகளில் பல மறைக்கப்பட்டதுதான் கொடுமை. வீரம் விளைந்த மண்ணில் விதைக்கப்பட்டவர்களின் வீரவரலாற்றை மறைக்க யாருக்கும் உரிமை இல்லை.
தளபதி ஒண்டிவீரன்
1755! இந்திய விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆண்டு. உலக அரங்கில் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் வீரத்தைப் பதிவு செய்த ஆண்டும் அதுதான்.
விடிந்தால் போர். அது சாதாரண போர் அல்ல. பீரங்கிகள் வெடிமருந்து குவியல்கள். துப்பாக்கிகள் என்று பல ஆயிரம் பேர்கொண்ட பெரும்படையுடன் ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரான், மாவீரன் பூலித்தேவனின் நெற்கட்டான்செவலைத் தாக்கப்பதுக்கியிருக்கிறான்.
""விடிந்தால் எங்கள் பீரங்கிகளுக்கு பூலித்தேவனின் ராஜ்ஜியமே சாம்பல். முடிந்தால் தடுத்துக்கொள்'' என்று அறைகூவல் விடுக்கிறான். தீப்பிழம்புகளைக் கக்கும் பீரங்கிகளின் பேய்வாய்கள் எல்லாமே நெற்கட்டான்செவலை நோக்கி நிறுத்தப்பட்டுவிட்டன.
ஏற்கெனவே இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக்காரர்கள்தான் இவர்கள். இம்முறை பூலித்தேவனின் கோட்டையை தகர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டியபடி, இரவோடு இரவாக முகாமிட்டிருந்தார்கள்.
""வரி கொடுக்க ஒப்புக் கொண்டால் சமாதானமாகப் போவோம். இல்லாவிட்டால் போர்தான். நெற்கட்டான்செவல் அழிவது உறுதி'' என்று சவால் விட்டான், ஹெரான்.
ஆனால் பூலித்தேவன், ""ஒரு நெல்மணியைக் கூட வரியாக செலுத்த முடியாது. முடிந்ததைப் பார்'' என்று எதிர் சவால்விட்டான். ""இதில் எங்களை வென்றால் நெல்லைச் சீமையைவிட்டே நாங்கள் புறப்படத் தயார்'' என்று வேறு ஏளனம் செய்தான் வெள்ளையன். ஹெரானின் சவாலுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு ஏற்ற வீரனைத் தேடினார் பூலித்தேவன்.
தளபதி ஒண்டிவீரன், ""நான் ஒருவன் போதும், எதிரிகளின் படையை அழிக்க'' என்று முன்வந்தான். பூலித்தேவன் சம்மதிக்க, புறப்பட்டான் ஒண்டிவீரன் ஒண்டியாக, எதிரிகள் முகாமிற்கு.
நெற்கட்டான் செவலுக்கு அருகில் உள்ள "தென்மலை' முகாமில்தான் எதிரிப்படை முகாமிட்டிருந்தது. முகாமில் ஒரே கும்மிருட்டு. தீவட்டியுடன் சில வீரர்கள் பாதுகாவலுக்கு நின்றிருந்தார்கள். அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவியபடி எப்படியோ முகாமிற்குள் புகுந்துவிட்டான் ஒண்டிவீரன்.
அப்படியிருந்தும் ஓரிருவர் பார்த்துவிட்டார்கள். "யார்?' என்று கேட்கிறார்கள். ""நான் குதிரை வாரை செப்பனிட வந்தவன்'' என்று பொய் சொல்கிறான். நம்பிவிடுகிறார்கள்.
நடு இரவை தாண்டி பொழுது ஒண்டிவீரன் மெல்ல தன் வேலையைக் காட்டத் தொடங்கினான். சத்தம் எழாமல், பீரங்கிகளின் அருகில் செல்கிறான். நெற்கட்டான்செவலை நோக்கி இருந்த பீரங்கிகளின் வாய்களை, தங்கியிருந்த முகாமை நோக்கித் திருப்பி விடுகிறான். அங்கிருந்த பட்டத்துக் குதிரை ஒன்றை அவிழ்த்துக் கொண்டு, வெளியேறப்பார்க்கிறான்.
குதிரை கலவரப்பட்டு மிரண்டு போக, சத்தம் கேட்டு சில வீரர்கள் ஓடி வருகிறார்கள். அதற்குள் ஒண்டிவீரன் அருகில் இருந்த குதிரையின் காடிக்குள் படுத்து, தன் மேல் புற்களைத் தூவி யாரும் அறியாதபடி ஒளிந்து கொண்டான்.
குதிரையைப் பிடித்த எதிரி வீரர்கள், குதிரையைக் கட்டிப்போட இடம் தேடுகிறார்கள்.


ஒரு வீரன் பெரிய ஈட்டி போன்ற ஆயுதத்தை காடியில் அறைகிறான். அது ஒண்டிவீரனின் இடது கை வழியாக தரைக்குள் இறங்குகிறது. ஈட்டி இறங்க இறங்க வலி அதிகரிக்கிறது. ஆனால் ஒண்டி வீரன் கத்தவில்லை. வலியைத் தாங்கிக் கொள்கிறான். அந்த ஈட்டி முளையில் குதிரையைக் கட்டிவிட்டு வீரர்கள் தூங்கப் போய் விடுகிறார்கள்.
அந்த முளையிலிருந்து கையை எடுக்க முடியாத நிலை. வலி கூடிக்கொண்டே போகிறது. விடிய இன்னும் சிறிதுநேரம்தான் இருக்கிறது. வேறு வழியே இல்லை. அங்கு களவாடிய பட்டாக்கத்தியால் சத்தம் எழாமல் தன் இடக்கையை தானே வெட்டித் துண்டாக்குகிறான். யாருக்கு அந்தத் துணிச்சல் வரும்?
வெட்டுப்பட்ட கை. கொட்டும் ரத்தம். இதோடு அந்த குதிரையையும் சத்தம் எழாமல் கிளப்பி, அதன் மேல் எறியபடி அபாய முரசையும் ஓங்கி உதைக்கிறான். எதிரிகள் வந்துவிட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக அதை நினைத்து, பீரங்கி வீரர்கள், பீரங்கியை இயக்குகிறார்கள். குண்டுமழை பொழிகிறது.
அது தங்கள் படை முகாம் மேலேயே தாக்கி அழித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அவர்கள் பதறுகிறார்கள். முகாம் முற்றிலும் அளிக்கப்படுகிறது. அதற்குள் எதிரியின் குதிரையிலேயே மின்னல் வேகத்தில் நெற்கட்டான்செவலுக்குப் பறக்கிறான் ஒண்டிவீரன்.
எதிரிகளை முற்றிலும் அழித்துவிட்ட சந்தோஷத்தில் பூலித்தேவனிடம் வருகிறான். எதிரியின் குதிரையையும் பட்டாக்கத்தியையும் ஒப்படைக்கிறான். கூடவே வெற்றிச் செய்தியையும் அறிவிக்கிறான்.
அப்போதுதான் ஒண்டி வீரனின் கை துண்டிக்கப்படடு இருப்பதைக் கண்டு துணுக்குறுகிறார் பூலித்தேவன்.
""எப்படி உன் கை துண்டிக்கப்பட்டது?'' என்று கேட்க, ""இந்தக் கை துண்டானால் என்ன, நம் தாய் மண்ணை விட்டு எதிரிகளை விரட்டிவிட்டோமே, அதுவே போதும். இந்தக் கைக்கு பதிலாக தங்கக் கை செய்து தரமாட்டீரா என்ன?'' என்றாராம் ஒண்டிவீரன்.
போர்க்களத்தில் ஒண்டி வீரனுக்கு நிகர் அவனே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பூலித்தேவன் பாராட்டினார்.
கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். போர்த்தந்திரங்கள் முற்றிலும் தெரிந்தவர். போர்க்களம் புகுந்துவிட்டால் வெற்றி வாகை சூடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர். நெற்கட்டான்செவல், திருநெல்வேலி, களக்காடு, கங்கைகொண்டான், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் எல்லாம் வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியவன் ஒண்டிவீரன். பூலித்தேவனுக்குப் பிறகும் கூட, அவரது மகன்களுக்கு உதவியாக இருந்து புதுக்கோட்டைப்போர் முதலியவற்றில் வெள்ளையர்களை எதிர்த்து வெற்றிவாகை சூடியவன். இவனைப் பற்றி வீர காவியமே பாடலாம்.
நொண்டிச் சிந்து, ஒண்டிவீரன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவையே அவனது வீரத்திற்கு சாட்சி.
ஒண்டிவீரனின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை எதுவுமே இல்லை.


THE MAYANS ARE THE TAMILS.

THE MAYANS ARE THE TAMILS.


Who Brought The Mayans To Mexico ? or Were the Ancient Turks, Akkads (Sumerians) and Dravidians (Tamils) the parents of Mexico and Meso-America ? 

By Gene D. Matlock

THE FOREFATHERS OF THE MAYANS SET SAIL FOR MESO-AMERICA.

The time is about 1,500 BC. A fleet of Tamil ships in some harbor of the Konkan or Kankon, a beautiful white sand coastline stretching from today’s Maharasthra to the southern tip of Western India, raises anchor and sails south to what is now the large island nation of Ceylon/ Eelam (today’s Sri Lanka). Their goal is to sail to Patala or what is now Mexico and Meso-America, leaving emigrant settlers there. During their stay in Ceylon, they recruited skilled stone workers, skilled craftsmen, and temple builders in the
province of Maya, to build a new Tamil civilization over or alongside an Akkad-type (Sumerian) civilization that was already in Meso-America : that of the Olmecs or Olman.

The ancient Tamils were international traders and colonizers. Wherever they went in the world, they left an unmistakable imprint of their presence, such as place names, foods, games, and temple buildings. Their temple buildings were usually Zikharis (tiered or pyramidical temple platforms). Often, small entrances or temples were located on each tier, but not always. On the top tier, there was always a temple. On top of it often stood an ornate rectangular steeple. However, circular domes or single spires often stood on top of the temple as well. Zikharis usually varied in appearance, according to the Dravidian or Tamil-derived cultures of the host nations. But one thing never changed: the unmistakable presence of Tamil influence.

THE MAYANS WERE TAMILS :

I am now ready to return to the hypothetical voyage of Tamils to America. They probably used two types of maps. One map shows Mt. Meru with petals pointing in four directions. The left petal points toward a distant land called Ketumal or Chetumal. In order to reach that land, they had to go eastward in order to avoid sailing around the tip of Africa. They knew where they were going, for they had been there before! The second map was their own map of the world.The Mayans said that the land of their forefathers lay 150 days westward.
When the Tamils arrived in North America, they crossed over to what is now the Caribbean Sea, through the Isthmus of Panama (The Great Crossing). After coming out the other side, they docked in the safe harbor of Chetumal. It still bears the same name. Chetumal harbor is in Belize. Belize derives from Belisha (God Shiva).
Later, they left Chetumal, sailing up the coast to a place reminding them of the beauty of their old home in Konkan. They dropped anchor and made their first home in America there. Not surprisingly, they decided to name their new home Kankun (Cancun). After thousands of years, the last syllable has barely changed in pronunciation.
When the Tamils settled in Yucatan, they built their typical Zikharis, such as those of Tikal and Palenque. At Tikal, they stained their stone monuments a reddish color, just as they had done back in the Konkan.

People are surprised to see stone images of elephants in Mayan country, such as the following one in Copan. It may be a reminder of the elephants in India.Some authorities, who do not agree with me that the Mayans came from abroad, think Southern Mexico once had elephants. The truth is that they worshiped a long-nosed god (Chac) or elephant, just as the Hindu Tamils worshiped the elephant-headed Ganesha in India.

Chak was the long-nosed Mayan God of thunder, lightning, rain, and crops. His elephantine trunk sprayed water on the earth. His equivalent in other parts of the world was Zeus, Dyaus, Jupiter, Ca, Jah, Ju, Jahve, Jehova Jeho, Sakh, Sagg, Sa-ga-ga, Sakko, Zagg, Zax. a.k.a. Zeus, is often depicted holding a serpentine thunderbolt and a grail, or someone is handing it to him. The Mayan Chak is equally depicted.

The Tamils and all the tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game: Pachesi. The Meso-Americans called it by a linguistically similar name: Patolli. (Note: CH and T are linguistically similar. LL was the only way the Renaissance Spaniards could approximate the sounds of Z and J. This proves that Patolli derived from Pachesi.) I myself saw a Patolli board game at the National Museum of Costa Rica, in
San Jose. I myself saw a Patolli board game at the National Museum of Costa Rica, in San Jose.

BOTH THE MEXICAN INDIANS & TAMILS ATE TAMALES WITH THE SAME NAME!

The Tamils and Turks even gave some of their favorite dishes to the ancient Mexicans, and with the same names! I will name just two of them: Tamales and Corundas. The ancient Tamils were known as Tamils or Tamals. One of their favorite foods was a type of paste or filling wrapped in bamboo husk. Even in Tamil Nadu it is called Tamal. The Michoacanos have a similar triangular shaped tamal called Corunda. In Turkic it would be kur-unda (Turkic dough).
My Tamil Nadu friend, Mr. Subash Bose, pointed out to me the fact that Hindus often worship cobras and that the Mayans worshipped rattlesnakes. He said that Mayan huts look exactly like those in Tamil Nadu.

In this article, I have just presented a tiny part of the evidence in my possession, pointing to the Indian and Ceylonese origins of the Mayans. I have decided to end this article by recounting what the Jesuit priest Francisco Xavier Clavigero wrote in Volume I of his Historia Antigua de Messico (Ancient History of Mexico). Clavigero said that the Chiapaneco Mayans told him that a grandson of Noah, Votan, took people to people America. He was from the Chan (Naga or Serpent) tribe. They said that he came from the East, bringing seven groups with him. Two other leaders (Groups?) had also previously brought in settlers: Igh and Imox. He built a great city, now known as Palenque, call Nauchan, meaning City of the Serpents. When Noah emerged from the Ark, he and his people built their first city, calling it Nashan (The Noachide Chan).
Votan founded three tributary monarchies called Tulan, Mayapan, and Chiquimala. The ruins of Tulan are those of Tula, Hidalgo, Mexico. Mayapan is the Yucatan peninsula itself. I have not yet located the region of Chiquimala. Perhaps it is Guatemala or the Mayan province of Tzequil.
Like many Europoids ignorant of India and its history, Clavigero tried to place them in Cartagena, Africa, Rome, and even Spain. But he at least intuited that the early Mayan settlers were Phoenicians.


Had he been more knowledgeable about ancient India and Ceylon, he would have known that they were Ceylonese, for in Tamil, VALAM POTAM means Place of Boats.Valam Potam (Ceylon) was located between the Tropics of Cancer and Capricorn, where the trade winds are. The differences between Valum Votan and Valam Potam are trivial. Notice the map showing the sea and land routes of the ancient Tamils. You’ll notice the words Oceanus Indicus (Indian Ocean). The ancient maps which the Spaniards used to get to America showed the same terms: Mar Indica / Oceanus Indica. From where did they obtain those maps showing that the eastern end of Oceanus Indica was America?
The stone heads staring at the sea, from the shores of Easter Island, tell us a lot about the ancient sailors they’re supposed to represent. Notice their headpieces. Could they be Tamil turbans?

Many people don’t know that the Mayans and Toltecs weren’t the only immigrants who entered the Americas through Chetumal, the Plymouth Rock of many American Indians. I can name several United States Indian tribes who also landed there. Their origin stories say so in plain words.In view of what I have said in this article, who is better qualified to identify the origins of our American Indians? Our Europoid academics? Or the Turks, Hindus, and American Indians?
All kinds of speculations have been made, many mystical, about the ancient sea-farers known as Wotan, Woden, the German Wuotan, the Yap Island Paathan, and the Philipine Bataan. Even today, a large tribe of Pakistanis are called Pathan. Votan was never a single person. He was really a nation of sailors. This ancient nation of sailors and adventurers is still with us : The Dravidian Tamils !


மேலக்கோட்டையூர் மலைமீது


தமிழன் தான் உலகின் முதல் மாந்தன், தமிழ் தான் உலகின் முதல் மொழி என்று கூறிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் கூற்றுக்கு சான்றாக விளங்கும் நம் முதுமக்கள் உருவாக்கிய பல கல்திட்டைகளில் ஒன்றான பெருங்கற்கால கல்திட்டை ஒன்றைப் பற்றி திரு. ஒரிஸா பாலு அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்லி வந்தார். வண்டலூர் கண்டிகை அருகே அமைந்த மேலக்கோட்டையூர் மலைமீது உள்ள அந்த கல்திட்டையை காணக்கூடிய வாய்ப்பு நேற்றுதான் கிட
த்தது. என்னால் நேரடியாக பயணிக்க முடியாததால் எனது இளவல் என்னை அங்கு கூட்டிச் சென்றார். அற்புதமாக இருந்த அந்த கல்திட்டையை பற்றி திரு. பாலு அவர்கள் சொல்லிய சில தகவல்கள்: பெருங்கற்கால நாகரிகத்தை சேர்ந்த அந்த கல்திட்டையின் வயது சுமார் 30000 ஆண்டுகள் முதல் 50000 ஆண்டுகள் இருக்கலாம். இந்த கல்திட்டையின் மற்றொரு சிறப்பு இது வானியல் ஆய்வுக்கும் பயன்பட்டது என்பதுதான். இது பற்றி மேலும் பல ஆய்வுகள் செய்தால் தமிழரின் தொன்மையை இந்த உலகிற்கு நாம் உணர்த்தலாம்.வாழ்க தமிழ்.


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியி
ல் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் !! நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!தேடல் தொடரும்..!!!

குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது !


சனி, 18 ஆகஸ்ட், 2012

மூலிகை மருந்துகள்






சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்
 

வீரமங்கை வேலு நாச்சியார்


இராமநாதபுரத்தின் வீரமங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல்..!

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன
்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.