கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 3 மார்ச், 2012

அதியமான்

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயத்து அருளி ஈதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்.என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் இனிதுஅவர்
தினைஅனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே!


திணை இலக்கியம்: புறநானூறு
திணை:பாடாண்திணை
திறை:பரிசில்துறை
பாடியவர்: பெருஞ்சித்திரனார்



குன்றும் மலையும் பலபின் ஒழிய
குன்றுகளும் மலைகளும் பின்னே கழிந்து போக

வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
வந்தேன்,யான் பரிசில் பெற்றுக்கொண்டு செல்வதற்கென

நின்ற என்நயத்து அருளி ஈதுகொண்டு
(கூறி) நின்ற என்னை அன்பு கொண்டு அருளி (யான்) இப்பொருளைப்

ஈங்கனம் செல்க தான்என என்னை
பெற்றுத் திரும்பிச் செல்க எனக்கூறி என்னை

யாங்குஅறிந் தனனோ தாங்கருங் காவலன்
எங்ஙனம் அறிந்தானோ? பகைவரால் தடுப்பதற்கு அரிய மன்னன்

காணாது ஈந்த இப்பொருட்கு யானோர்
என்னை அழைத்துக்காணாமலே தந்த இப்பொருளுக்கு நான்

வாணிகப் பரிரிலன் அல்லேன் இனிதுஅவர்
ஊதியமொன்றையே எண்ணும் பரிசிலன் அல்லேன்

தினைஅனைத்து ஆயினும் இனிதுஅவர்
தினைபோல் சிறிய பொருளாயினும் அது சிறந்தது


துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே!
பரிசிலரது கல்வி முதலிய தகுதியானவை விரும்பிக் கொடுத்துவிட்டால்


பொருளுரை,
குன்றுகளும் மலைகளும் பின்னே கழிந்து போக வந்தேன்,யான் பரிசில் பெற்றுக்கொண்டு செல்வதற்கென கூறி நின்ற என்னை அன்பு கொண்டு அருளி (யான்) இப்பொருளைப் பெற்றுத் திரும்பிச் செல்க எனக்கூறி என்னை எங்ஙனம் அறிந்தானோ? பகைவரால் தடுப்பதற்கு அரிய மன்னன் என்னை அழைத்துக்காணாமலே தந்த இப்பொருளுக்கு நான் ஊதியமொன்றையே எண்ணும் பரிசிலன் அல்லேன் பரிசிலரது கல்வி முதலிய தகுதியானவை விரும்பிக் கொடுத்துவிட்டால் தினைபோல் சிறிய பொருளாயினும் அது சிறந்தது.
http://www.ttteater.com/projects/pro11.php

கருத்துகள் இல்லை: