கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 13 டிசம்பர், 2008

வரைபடங்கள்பற்றி


வரைபடங்கள் உருவாக்கும் கலையான கார்ட்டோ கிராஃபி ( cartography) மிகப் பழைமையானதொன்று. நாடுகளின் எல்லைகளைக் காட்டவும், கடற்பயணம் மேற்கொள்ளவும் வரைபடங்கள் முதலில் பயன்படுத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன், வரைபடங்களை உருவாக்க ,கண்ணால் கண்டு சேகரித்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டன.இதனால் வரைபடங்கள் துல்லியமாக அமையவில்லை. மேலும் உருண்டையான பூமியில் உள்ள நிலப்பரப்புகளை தட்டையாக வரைபடத்தில் காட்டும்போது, பல பிழைகள் ஏற்பட்டன. கி.பி 2ஆம் நூற்றாண்டில் கிளாடியஸ் தாலமி தயாரித்த உலகப்படம், மத்தியதரைக் கடலைச் சுற்றியே உலகம் இருந்தது போலவும், ஐரோப்பா மற்றும் ஆசியாக் கண்டங்கள் பெரிதாக இருந்தது போலவும் காட்டியது. ரோமானியர்களும் எகிப்தியரும் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். கி.பி 12ஆம் நூற்றாண்டில் சீனாவிலும், 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வரைபடங்கள் அச்சிடப்பட துவங்கியதால், இக்கலை வெகுவாக முன்னேற்றம் அடைந்தது,வரைபடங்கள் பலருக்கும் கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாகின.

புதிய பூமி தேடி புறப்பட்டவருக்கு, முக்கியமாகக் கடலோடிகளுக்கு, வரைபடங்கள் இன்றியமையாதவை என்பதால் இக் கலையில் அரசர்களும் வணிகர்களும் ஆர்வம் காட்டினர். கையால் வரையப்பட்ட குத்துமதிப்பான வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன. ஸ்பெயின் நாடடவர் இதற்கு உதாரணம். இங்கு உருவாகிய வரை படங்கல் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வடாமெரிகாவுக்கு கடற்பயம் செல்லப் பயன்படுத்தப்பட்டன. வெகுகாலத்துக்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படங்களின் உதவியுடன் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. அது இக்கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.விமானங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரைபடக்கலையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கின. வரைபடம் என்பது நிலத்தின் ஒரு பகுதியின் பிரதி. அன்று கையால் வரையப்பட்டவை இன்று கணினிகளால் உருவாக்கப்ப்டுகின்றன. மலைகளையும், ஆறுகளையும் காட்டும் வரைபடம், பயணவழிகளைக் காட்டும் வரைபடம் என பயன் கருதி வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன.நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு மட்டுமன்றி மற்ற கோள்களின் மேற்பரப்புகளையும் காட்டும் அளவுக்கு இன்று வரைபடக்கலை வியக்கத்தக்க முறையில் முன்னேறியுள்ளது. வரைபடவல்லுநர்கள் காலம்காலமாகச் சில விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்றாலும் சிறு தவறுகள் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு உருவாக்கப்படும் வரைபடங்களில்கூட நிலப்பரப்பில் காணப்படுபவற்றைத் துல்லியமாகக் காட்டவியலாது.

இன்று செயற்கைக்கோள் எடுத்த படங்கள் வரைபடங்களை உருவாக்க பயன் படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து, சில மீற்றர் பரப்பளவே உள்ள இடத்தைக்கூட கண்டறிய முடியும். ஈரக்போரில் அமெரிக்க ராணுவம் ஈராக் கவச வண்டிகளைத் தம் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறிந்து தாக்கியது ஒரு எடுத்துக்காட்டு. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கைக்கோள்கள் சேகரித்த விவரங்களை வைத்து வரைபடங்கள் தயாரிக்க முடிந்தது. புவியியல் சம்மந்தப்பட்ட விவரங்கள் பலவற்றை அறிய பூமியை வலம்வரும் பலசெயற்கைக்கோள்களினால் சேகரிக்கப்படும் தகவல்கள் இதற்கு உதவுகின்றன. கணினியின் உதவியோடு அறிவியல் சார்ந்த துறைகள் பலவற்றுக்குப் பயன்படும் வரைபடங்கள் உருவாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.உதாரண்மாக ஒரு அறையில் அமர்ந்தவண்ணம், செயற்கைகோள் படங்களைப் பார்த்து நகரங்கள் அபிவிருத்தியடைவது, விவசாயநிலத்தின் பரப்பு அதிகரிப்பது அல்லது குறைவது, காடுகளின் சேதம், நீர் நிலைகள் மாசுபடுவது போன்ற பல விவரங்களைப் பெறலாம்.

ஆசிரியர்: சு.கி.ஜெயகரன் நூல்:குமரி நிலநீட்சி

சனி, 6 டிசம்பர், 2008

இனப்படுகொலை ( Genocide )










































நிறுத்து கொத்தணி குண்டுகளை போடுவதை நிறுத்து மண்டிக்கேட்கிறது வெண்புறா
வீடுகளிலும் குண்டுகள் - ஓடும்
சாலைகளிலும் குண்டுகள்
மூத்தோர் மேலும் குண்டுகள்
பாலகர் மீதும் குண்டுகள்
பார்த்துக் கொண்டெ
இருக்கலாமாஉலகம்!!!!!!

உலகே உனக்கு கண்ணில்லையா
தமிழீழ மண்னென்ன மண்ணில்லையா
உனது மக்கள் தான் மக்களா - எம்
தமிழீழ மக்கலென்ன கற்களா
:காசியானந்தன்: