கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 25 அக்டோபர், 2008

போர்ப்பொறிகள்

ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரை மதிற்பொறிகள்
1.வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய ( எந்திர ) வில்.
2.கருவிரலூகம் = கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
3.கல்லுமிழ் கவண்
4.பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவதாய நெய்.
5.பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா.
6.காய்பொன்னுலை = உருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலை.
7.கல்லிடு கூடை = இடங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங் கூடை.
8.தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி.
9.ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியை கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி.
10.தொடங்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி
11.கவை = கிடங்கிலேறின் கறியத்தள்ளும் இருப்புக்கவை.
12.கைபெயரூரி =மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி
13.சென்றெறி சிரல் =மாற்றார் மேற்சென்று கண்ணைக்கொத்தும் சிச்சிலிப்பொறி.
14.பன்றி =மதிற்றலையி லேறினா ருடலைக் கேட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி.
15.பிற = நூற்றுவரைக் கொல்லி (சதக்கினி), தள்ளிவெட்டி,களிற்றுப்பொறி,விழுங்கும்பாம்பு,கழுகுபொறி,புலிப்பொறி,குடப்பாம்பு,சகடப்பொறி,அரிநூற்பொறி முதலியன

சனி, 18 அக்டோபர், 2008

மாதவி காலத்து மகளிர் அணிகள்

விரலணி = கான்மோதிரம்
பரியகம் = காற்சவடி
நூபுரம் = சிலம்பு
பாடகம் = ஒருவகைக் காலணி
சதங்கை
அரியகம் = பாதசாலம்
குரங்கு செறி = கவான்செறி
விரிசிகை = முப்பத்திருவட மேகலை
கண்டிகை = மாணிக்க வளை
தோள்வளை
சூடகம்
கைவளை = பொன்வளை
பரியகம் = பாசித்தாமணி, கைச்சரி
வால்வளை =சங்கவளை,வெள்ளிவளை
பவழ வளை
வாளைப்பகுவாய் மோதிரம்
மணி மோதிரம்
மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி
சங்கிலி = வீரச்சங்கிலி
நுண்ஞாண்
ஆரம்
கயிற்கடையொகிய கோவை = பின்றாலி
இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை
தெய்வவுத்தி = சீதேவி
வலம்புரி
தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை
புல்லகம் = தென்பல்லியும், வடபல்லியும்