கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 29 மார்ச், 2008

ஆறுமுகநாவலரருளிய வினா-விடை


பதிப்புச் செம்மல் ஆறுமுகநாவலரைப் பணிந்து.

1.இலக்கண நூலாவதியாது ?

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2.அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும் ?

அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தெடர்மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

3.எழுத்தாவது யாது ?

எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.

4.அவ்வெழுத்து எத்தனை வகைப்படும் ?

அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5.உயிரெழுத்துக்கள் எவை ?

உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என பன்னிரண்டெழுத்துகளுமாம். இவை ஆவியெனவும் பெயர் பெறும்.

6.உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

உயிரெழுத்துக்கள் குற்றெழுத்து, நெட்டெழுத்து என இரண்டு வகைப்படும்.

சனி, 15 மார்ச், 2008

பெரியார்

தமிழர் நெஞ்சில் வாழ்கின்றார்
தாடித் தாத்தா ஈவேரா
குமுகப் புரட்சி புரியென்று
கூறி நின்றார் நாடெங்கும்

மக்களெல்லாம் நிகரென்றார்
மடமை நீங்குதல் நன்னென்றார்
தக்கபணிகள் தான் செய்தார்
தமிழராக உயர்ந்திட்டார்.

மறைமலையடிகள்

பண்டித ஞா.தேவநேயனார்,பி.ஓ.எல்.பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியர் தவத்திரு திரஞ்சு ( Trench) எழுதிய `சொல்லாராய்ச்சி`, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய ` மொழியறிவியல்` பேராசிரியர் சாய்சு எழுதிய ` ஒப்பியல் மொழிநூல்` முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச்சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம்.தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு பண்டாரகர் கால்ட்டுவெல் எழுத்திய `திராவிட மொழிகளின் ஒப்பியலாய்வு` நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த்ததொரு முயற்சியாத்தலால் தமிழ்ச்சொற்களையெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத்த் தூண்டியது.எனவே `ஞானசாகரம்`( அறிவுக்கடல் ) என்னும் எம்முடைய இதழில் குதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில்தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு.தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முர்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம்.அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித்திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு.தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப்பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.