நானிலதில் ஒன்றான குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த நிலனும். நோர்வே நாட்டுப் பெயர் சேர்மன் சொல்லில் இருந்து வடக்கே செல்லும் வழி என்றானது.தலை நகரம் ஓசுலோ. ஓசுலோ என்பதன் விளக்கம் வெண்படலம் அல்லது தேவதை இருப்பிடம். இங்கு தேவதைகள் மட்டுமல்ல மாந்தர் வாழத்தக்க நல் மனித நேய நாடு. இந்நாட்டின் சிறப்பு அமைதி. மலைத்தொடரைக் கொண்ட மேட்டூர்.
பார்வைக்குச் சில படங்களுடன் பயணக்குறிப்பு.
பார்வைக்குச் சில படங்களுடன் பயணக்குறிப்பு.
சாய்வுச்சி( Galdhøpiggen)
தழை எடுத்துத் தங்கிவிட்டு மறுநாள் காலை திறப்பை உரியவித்தே வைத்துவிட்டு உரிமையாளரிடம் அதற்கான தகவைக் கொடுத்துவிட்டு பதினொன்றரை மணியளவில் மலைக்குப் புறப்பட்டோம். நீண்ட ஊர்திப்பணம். மலையுச்சியின் உயரம் 2683 மீற்றராகும். ஊர்தியில் சென்று அங்குள்ள தழையில் தங்கி காலையிலேயே புறப்பட வேண்டும் மலையின் உச்சியைத் தொட்டு வர குறைந்தது ஒன்பது மணி நேரம் தேவை.இம்மலையின் உச்சியில் பனி சூழ்ந்துள்ளது அதனால் மலையில் ஏறுவோரின் உதவியோடே ஏறவும் வேண்டும். ஏறுவதற்குரிய அனைத்து ஏந்துகளையும் கொண்டு செல்ல வேண்டியது அகத்தியமாகும். அழகான இயற்கை. காலநிலை மாற்றத்தால் பனி உருகும் நிலை ஏற்பட்டிருப்பது கவலையே.
கவுத்தா உச்சி (Gausthatoppen)
அத்லாந்திக்கு தீவுகளின் பாதை
(Atlantiskvei)
உச்சிவிளிம்பு (Bessenggen)
அமைதியிருக்கை
(Preikestolen)