கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

வேண்டுமா? வேண்டாம்.!


நன்றி


குழந்தை வேண்டுமா? வாழைமரம் வேண்டாம்.!

வீட்டின் முன்னால் அழகுக்காக பலர் மரங்களையும் செடிகளையும் வளர்க்கிறார்கள் அழகுக்காகத்தான் வளர்க்கப்படுகிறது என்றாலும் கூட அந்த மரங்களில் நல்லதையும் கேட்டதையும் தரக்கூடிய சக்தி இருப்பதாக நான் நினைக்கிறேன் அதன் அடிப்படையில் வீட்டில் வளர்க்க வேண்டிய மரம் எது வளர்க்க கூடாத மரம் எது என்பதை தெளிவு படித்ததினால் நான்றாக இருக்குமென்று நினைக்கிறேன் தயவு செய்து விளக்கம் தரவும்

மரங்கள் வளர்ப்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூதாயதிற்கே மிக சிறந்த காரியமாகும் காரணம் மரங்கள் என்பது இறைவன் பூமிக்கு தந்த அருட்கொடை என்றே சொல்லலாம்

பயனில்லாத மரங்கள் என்று எதுவுமே இல்லை விவசாய பூமியையும் நீர்பிடிப்பான பகுதிகளையும் வறண்டு போக செய்யும் வேலிகாத்தான் மரங்கள் கூட பயனில்லாதவைகள் என்று ஒதுக்கூடியது அல்ல

வறண்ட வானம் பார்த்த பூமியில் இம்மரங்களை வளர செய்வது கிராம எரிபொருளுக்கும் காகித உற்பத்திற்கும் ஏதுவாக இருக்கும்

அதாவது மரங்கள் பொதுவில் நல்லவைகள் என்றாலும் அது இருக்கும் இடத்தை பொறுத்து நல்லதாகவும் கெட்டதாகவும் பலனை தருகிறது

குறிப்பாக வீடுகளில் மரங்களை வளர்க்கும் போது அவற்றில் இருந்து வெளிவரக்கூடிய அதிர்வுகள் மனிதனின் உடலையும் மனதையும் பாதிக்க கூடாததாக இருக்க வேண்டும் சில மரங்களின் அருகாமையில் மனிதன் அதிக நேரம் இருந்தால் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன சில மரங்கள் நன்மையை தருகின்றன

அந்த வகையில் புளி, இலந்தை, நாவல்,நெல்லி, அகத்தி, பனை, வில்வம், விளா, அரசு, பருத்தி, எருக்கு, அரளி, பூலா, வேல், இலுப்பை,ஆல், கருங்காலி, மருதம், முருங்கை, அலரி, நந்தியாவட்டை, வாகை புங்கு, அவுரி, எட்டி ஆகிய மரங்களை மிக கண்டிப்பாக வீடுகளில் வளர்க்க கூடாது ஆனால் இவைகள் ஆலயங்கள் பள்ளிக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் வளர்க்கப்படலாம்.

இதே போல குழந்தை இல்லாதவர்கள் அல்லது ஆண் வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வாழை மரம் வளர்க்க கூடாது பொதுவாக வாழை மரத்தை வீட்டில் வளர்ப்பவர்கள் தெற்கு அல்லது மேற்க்கு திசையில் வளர்க்கலாமே தவிர மற்ற இடங்களில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்

இதே போல பால் மரங்கள் முள் மரங்கள் முட்செடிகள் கள்ளிகள் போன்றவற்றையும் வீட்டில் வளர்க்க கூடாது.

சிலர் கண்திருஷ்டி படாமல் இருக்க வீட்டில் கற்றாழை வளர்ப்பார்கள் இது மிகவும் தவறு வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட வீடாக இருந்தால் கூட அங்கு கற்றாழை வளர்க்கப்பட்டால் எதிர்மறையான பலனையே தரும்.

கருத்துகள் இல்லை: