கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 8 நவம்பர், 2008

தொல்லியல் செய்திகள்

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்ட இடங்களின் பட்டியல்

1837இல் பிரீக்ஸ் (J.W.Breeks ) நீலகிரியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அகழ்ந்து ஆய்வு செய்தார். 1863இல் இராபர்ட்புரூஸ் (Robert Bruce ) என்ற புவியியல் ஆய்வாளர், அத்திரம்பாக்கம்,பல்லாவரம் பகுதிகளில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். அறிவியலடிப்படையில் அன்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் இதையே தமிழகத்தில் தொள்பொருளாய்வின் ஆரம்பம் எனலாம்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல இடங்களில் கள ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும் நடத்தப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் முறைப்படியான அகழாய்வுகளும், காலக்கணிப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1945ஆம் ஆண்டு மார்டிமர் வீலர் (Mortimer Wheeler ) எனும் ஆய்வாளரால் தமிழகத்தில் அரிக்கக்மேட்டுப் பகுதியில் முறையான அறிவியலடிப்படையில் கள ஆய்வுகள் தொடங்கின எனலாம். இதற்குப் பின் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தவர் வாழ்ந்த பல்வேறு இடங்களில் களாஆய்வுகளும் அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், பழங்கற்காலத்தவர் வாழ்ந்த இடங்கள் பல அகழாய்வு செய்யப்பட்டன. அத்திரம்பாக்கம்,வடமதுரை, குடியம், திருப்பெரும்புதூர், நம்பாக்கம், எருமை வெட்டிப்பாளையம், மஞ்சனகரை, தஞ்சாவூர், அதிராமபட்டினம், பர்கூர், அவியூர், தி.கல்லுப்பட்டி ஆகியவை அவற்றில் சில இடங்கள்.

கள ஆய்வுகளில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த சிறுத்த கற்கருவிகள் ( Microlithic) பல இடங்களில் கிடைத்திருந்தாலும், அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.கி.மு 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுத்த கற்கருவிகள் குடியம் அகழாய்விலும், திருத்தங்கல்,தி.கல்லிப்பட்டி, திருநெல்வேலி தேரிமேடுகளிலும் கிடைத்துள்ளன.

கி.மு 2000 முதல் 600 வரையுள்ள இக்காலத்தவர் வாழ்ந்த இடங்கள், குறிப்பாக, வட மாவட்டங்களில் பல உண்டு எனக் கள ஆய்வுகள் காட்டுகின்றன. அக்காலகட்டத்தில் நாடோகளாகத் திரிந்தவர்கள், குடியிருப்புகளமைத்து நிலையாக வாழ முற்பட்டனர். அவர்கள் பயிர்ச் சாகுபடி செய்யவும், விலங்குகளை வளர்க்கவும் ஆரம்பித்தகாலம் இது. பய்யம்பளி அகழாய்வில் அவர்கள்பற்றி அரிய பல தடயங்கள் கிட்டியுள்ளன.

பய்யம்பள்ளி,தைலமலை,தொகரப்பள்ளி,முள்ளிக்காடு,அப்புக்கல்லு,தேனி,ஒத்தக்கோயில்,கொற்கை,பெரியகுளம்,செய்துங்கந்ல்லூர்,சாயர்புரம்,மோகனூர் மற்றும் சேனங்காடு ஆகிய இடங்களில் புதிய கற்காலத்தவர் வாழ்ந்ததாக கள ஆய்வுகள் காட்டுகின்றார். கல்செப்புக்காலம் (Chalcolithic) மற்றும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம் பற்றிய விவரங்கள் மதுரை, தி.கல்லுப்பட்டி,அகழாய்வுகள் மூலம் கிடைக்கின்றன.புதிய கற்காலத்தையடுத்து பல விடயங்களில் இரும்புக்கால பண்பாடு தொடர்ந்தது என்பதை அகழாய்வுகள் உறுதிசெய்கின்றன.

தமிழ்நாட்டில், இரும்பு யுகமான (Iron age ) பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது ஆதிச்சந்ல்லூர் அகழாய்வு. இது கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட(கி.மு 785)காலத்துக்கு முற்படட காலம் அப்போது அங்கு கல் மணிகள் அறுக்கும் தொழில் நடந்ததைக் கொடுமணல் அகழாய்வு காட்டுகிறது. மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் அம்மக்கள் தம் முன்னோரை விட நாகரிக மேம்பாடு அடைந்தவர்கள் எனக்காட்டுகின்றன. பெருங்கற்கால/இரும்புயுக மக்கள் வாழ்ந்த அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் சில:

கம்பர்மேடு, மல்லப்பாடி, மேல் சாத்தமங்கலம்,கொடுமணல், அமிர்தங்கலம், கொற்கை,ஆரோவில், ஆனைமலை, கோரிமேடு, நத்தமேடு,கோவலன் பொட்டல்,சானூர்,சிததன்னவாசல்,சிறுமுகை,சூலூர்,செட்டப்பாளையம்,திருப்பூர்,திருவக்கரை,பல்லாவரம்,பழனிமலை,பெருமாள்மலை,பேரூர்,ஆதிச்சநல்லூர் மற்றும் காவிரிப்பூம்பட்டினம்.

சு.கி.ஜெயகரன். (நூல்: குமரி நிலநீட்சி)

சனி, 1 நவம்பர், 2008

உரிமைக்குரல்


இனவெறியரால் தமிழினம் படும் இன்னல்கள்........................


தமிழன் எங்கு அடிவாங்கினாலும் அது நன்முறை, தமிழன் எங்கு திருப்பியடித்தாலும் அது வன்முறை உலகத்திலே! வன்முறையா? வன்முறையா?

_ சீமான் _