கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 24 நவம்பர், 2007

'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர்


தென்மொழியும் ஆங்கிலமும் வடமொழியும் முற்றும்
செறிவான இலக்கியமும் இலக்கணமும் கற்றும்
பன்மொழியும் பழமொழியும் பல்காலும் ஆய்ந்தும்
பன்மொழிக்கு நன்மொழியாம் பைந்தமிழில் தோய்ந்தும்
தொன்மொழியின் சொற்பிறப்பை அடிவேரைக் காட்டி
தொடர்புடைய மொழி இனத்தை ஒப்பிட்டுக் காட்டி
முன்மொழிக்கும் முதன்மொழியாம் முத்தமிழ்தான் என்றே
முனைப்புடனே பாவாணர் முழக்கமிட்டார் நன்றே!

ஒரு சொல்லை கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள்
அருவியெனப் பொழிகின்ற அனைத்து மொழிப் பெருஞ்செல்வ
தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய்
ஆய்தமிழுக் காட்பட்டோர் வாழ இனும் வழியில்லையோ
அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய்
தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே.

- பாவாணர் மணிவிழாக்குழு, மதுரை -
குறைமதியார் தேக்கிவைத்த கறையிருளை
நீக்கவந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார்!
தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய்,
ஆர்த்திலங்கு சீர்த்தியினார்!
நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால்
புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி!
அமைந்தொளிரும் குடவிளக்கு!
மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால்
மிடிமை வாய்ப்பட்ட கடமைக் காவலர்!
- முனைவர் மு. தமிழ்க்குடிமகன் -
மொழிக்கென்றே தோன்று மொழிமீட்பர் நங்கள்
மொழிக்கென்றே ஆராய்ந்த முப்பர் - மொழிக்கென்றே
ஈகியாய் வாழ்ந்த இனமானப் பாவாணர்
ஆகியாய் வாழ்வார் அரண்.
வேர்கண்டார் வேரின் விளக்கமும் தாம்கண்டார்
கூர்கொண்ட வேரின் குலம்கண்டார் - யார்கண்டார்
தொல்லாசன் சொல்லெல்லாம் தோய்பொருள என்றதனைச்
சொல்லரிய மெய்ப்பாய்ச் சொல.
_______
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
வாயிறு வண்டமிழ் வாழவாழ் நம்மொழி
ஞாயிறு போல்விளங்க லான்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
எங்கணும் தங்கிய இன்றமிழ் நேயருள்
தங்கிய நேயரென்ன லான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
பூமலர்த் தேனெனப் பொங்கிய வேர்வளம்
தாமுறுபா வாணரென்ன லான்.
தீந்தமிழ் போற்றுதும் தீந்தமிழ் போற்றுதும்
ஏந்திய ஞால முதன்மொழி ஈதெனத்
தேர்ந்தமீட் பர்கிளர லான்.
- புலவர் இரா. இளங்குமரன் -
ஆர்த்தபகை வெல்லும் அணிகள் பலதந்து
சீர்த்த புகழ்நிறுத்தும் செந்தமிழர் பாவாணர்
கூர்த்த புலமையராய்க் கொள்கை அரிமாவாய்ப்
போர்த்த இருளகற்றும் பொற்கதிரோன் பாவாணர்
ஞால முதல்மொழி நந்தமிழெ என்றுரைத்தும்
மூலத் தமிழெ திரவிடைடின் தாயென்றும்
ஆரியத்தின் மூலம் அதுவே எனவுரைதும்
பூரியரின் வாயடைக்கப் பூட்டறைந்தார் பாவாணர்
தென்குமரிக் கண்டமதே மாந்தன் பிறந்தகமாம்
செந்தமிழும் ஆங்கே பிறந்ததென்றார் பாவாணர்
முன்னை மொழிகாக்க மூத்த குடிகாக்கத்
தன்னை அழித்த தகையாளர் பாவாணர்
செந்தமிழே வாழ்வாய்த் தகழ்ந்ததனால் பாவாணர்
நந்தமிழ்த் தாத்தா நவில்.
- முனைவர் ந. அரணமுறுவல் -

சனி, 10 நவம்பர், 2007

தமிழிலக்கிய வரலாறு

பழங்காலம்
*
கழக ( சங்க ) இலக்கியம்: கி.மு 500 முதல் கி.பி 200 வரையில் அகம் புறம் பற்றிய பாட்டுகள்.
*
அற ( நீதி ) இலக்கியம்: கி.பி 100 முதல் கி.பி 500 வரையில் திருக்குறள் முதலிய நீதி நூல்கள். கார்நாற்பது முதலிய வெண்பா நூல்கள்.
*
பழைய வனப்புகள் ( காப்பியங்கள் ) : சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியன.
*
இடைக்காலம்
*
பத்தி ( பக்தி ) இலக்கியம்: கி.பி 600 முதல் 900 வரையில் நாயன்மார் ஆழ்வார் பாடல்கள். கலம்பகம் முதலிய பல வகை நூல்கள்.
*
வனப்பு ( காப்பிய ) இலக்கியம் : கி.பி 900 முதல் 1200 வரையில் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய சமணபௌத்த நூல்கள். இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள். சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியவர்கள். உலா பரணி பிள்ளைத் தமிழ்.
*
உரைநூல்கள்: கி.பி 1200 முதல் 1500 வரையில் இலம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள். வைணவ விளக்க நூல்கள், சைவசித்தாந்த அளவை( சாத்திர) நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
*
புராண இலக்கியம்: கி.பி 1500 முதல் 1800 வரையில் புராணங்கள், தலபுராணங்கள். இசுலாமிய இலக்கியம். கிறித்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள். உரைநடை வளர்ச்சி.
*
இக்காலம்
*
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறித்தவ இலக்கியம். இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள். நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
*
இருபதாம் நூற்றாண்டு: பாரதி, கல்கி, புதுமைப்பித்தன். சிறுகதை, நாவல், நாடகம், வாழ்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி .........
*
**
இலங்கை
.
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்துவருகின்றது. இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுக்கு முன்பே ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வள்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் கழக ( சங்க ) இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. ( ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்) இலங்கையின் ஆட்சிமொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது. சிங்களவரும் தமிழ் கற்றுவந்தனர். சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். ஆட்சி புரிந்து வந்த சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பத்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர். ஆகையால் நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்றுவந்ததில் வியப்பு இல்லை.
.
இலங்கைத்தமிழ் நூல்கள்
.
வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் ( பதினாறாம் நூற்றாண்டில் ) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்துநானூறூ செய்யுள்கொண்ட காப்பியம் அது. தமிழ் நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையில் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை உலா கலம் பகம் சதகம் தூது அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம் , கோணாசல புராணம், புலியூர்ப்புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப்புராணம் என்பனவும் இலங்கையில் பிறந்தவைகளே. சூது புராணம் வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது தாசியின் வாழ்வு பற்றியது. கிறித்தவ சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறைய பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்குக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகை பக்திப்பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.

சனி, 3 நவம்பர், 2007

ஆங்கிலச்சொல் - தமிழ்ச்சொல்

ஆங்கிலத்தால் பற்பல தமிழ்ச்சொற்கள் அழிந்துபோயுள்ளன. அவற்றை திருத்திக்கொள்ள பட்டியலிடப்பட்டுளது வாசித்துப் பயன் பெறுங்கள் .
ஆங்கிலம் - தமிழ்
Absent - ( அழகன்) வரவில்லை
Academy - கலைக்கழகம்
Academic Council - கலைமன்றம்
Admission - சேர்ப்பு
Aerodrome - வானூர்தி
Aeroplane - வானூர்தி
Mono - plane - ஒற்றைச்சிறை வானூர்தி
Bi - plane - இரட்டைச் சிறை வானூர்தி
Sea - plane - கடல் வானூர்தி
Zeppelin - வானக்கப்பல்
Arch Bishop - அரசக் கண்காணியார்
Art - கம்மியம், கம், கலை
Artist - கம்மியன், ஓவியக்காரன்
Artisan - கம்மாளன்
Astronomy - வானநூல், கோள்நூல், உடுநூல்
Attendance - வரவுப் பதிவு, உடனிருக்கை
Attendance Register - வரவுப் பதிவுப் புத்தகம்
Badminton - பூம்பந்து
Band - கூட்டியம்
Bank - தவணைக் கடை, வட்டிக்கடை, காசுக்கடை
Bar-at-law - சட்டப்பாரர், பார் வழக்கறிஞர்
Basket ball - கூடைப்பந்து
Bat - மட்டை
Bench - அறுகாலி, விசி
Blotting paper - மையொற்றி
Boarding school - விடுதிப்பள்ளி
Book- keeping - கணக்கு வைப்பு
Botany - பயிர் நூல்
Brush - தூரிகை
Camera - படம்பற்றி
Camp - தங்கல், பாசறை, தாவளம்
Certificate - தகுதித்தாள்
Certify - தகவுரை
Challenge - அறைகூவு
Chalk - சீமைச் சுண்ணம்
Champion - வல்லான், அண்ணாவி
Chemistry - வேதிநூல், கெமியம், சாற்றியம்
Cheque - காசோலை
Cinima - திரைப்படம்
Circle - வட்டம், வட்டகை, வட்டாரம்
Civil case - உரிமை வழக்கு
Criminal case - குற்ற வழக்கு
Coach - வையம், வண்டி
Coat - மேற்சட்டை, மேற்பூசு
Collect - தண்டு
Collector - தண்டலாளர்
Communism - பொதுவுடைமை
Competition - இசலாட்டு, போட்டி
Compound - வளாகம், பறம்பு
Constitution - சட்ட அமைதி
Cork - அமைப்பான், தக்கை
Court - கோட்டம், மன்றம், அரங்கு
Corporation - இணைப்பாயம், மாநகராண்மை
Course - கடவை
Cricket - மண்டிலப்பந்து
Criticism - வக்கணை, அங்கதம்,திறனாய்வு
Cub-pack - குருளையர் குழு
Cup - கிண்ணம்
Cycle - மிதிவண்டி
Cyclo-style - கல்லச்சடி (வி.)
Cyclo-pen - கல்லச்செழுதுகோல், உருளையெழுத்தாணி
Dictator - தன்மூப்பாளன்
Damocracy - குடியரசு
Dictate - சொல்லியெழுதுவி, தன்மூப்பாணையிடு
Dictation -சொல்லியெழுதுவிப்பு
Dictator - தன்மூப்பாணையர்
Dictatorship - தன்மூப்பாட்சி
Direct - ஆற்றுப்படுத்து, இயக்கு
Director - இயக்குநர்
District - கோட்டகம், மாவட்டம்
District Board - நாட்டாண்மைக்க்ழகம்
Division - பிரிவு, வட்டம்
Doctor - பண்டிதர், பண்டுவர்
Drawing - ஓவியம், வரைவு
Duster - துடைப்பான்
நூல்>கட்டுரை வரைவியல்ஆசிரியர்>தேவநேயப்பாவாணர்

சிங்களச்சொல் - தமிழ்ச்சொல்

சிங்களத்தில் கலந்த தமிழ்ச்சொற்கள் . சிங்களமாக உள்ளன எண்ணற்ற தமிழ்ச்சொற்கள்.

சிங்களச்சொற்கள் - தமிழ்ச்சொற்கள்

அக்கா(அக்கே) - அக்கா
அக்கி - அக்கி(நோய்)
அசமோதகம் - அசமோதகம்
அக - அகம் (இல்லம்)
அகம்படிச்(சேனாவ)- அகம்படி
அகல - அகழ்
அகில் - அகில்
அங்காணி - அங்காடி
அச்சுவ - அச்சு
அட்டம் - அட்டம்
அடங்குவ - அடங்கு
அடக்கம் - அடக்கம்
அட(தியனவா) - அட்டு (க்கொடுத்தல்)
அடய - அடை, அடைப்பு
அடையாலம் - ஆடையாளம்
அட(மாநய) - ஆடை(கனம்)
அடவிய - அடவி
அடஸ்வி - அடைசல்
அடா - அடா
அடிய - அடி(பாதம்)
அடித்தாலம் - அடித்தலம்
அடுக்குவ - அடுக்கு
அடுத்து - அடுத்த
அண்டுவ - அண்டு (அண்டிப்பிடிப்பது)
அண்டய - அண்டை
அத்தம் - அற்றம்
அத்திக்கா, - அட்டிக்காஅத்திக்காய்
அத்திகாரம் - அச்சகாரம்
அத்திவாரம் - அத்திவாரம்
அதிவிடயன் - அதிவிடம்(அதிவிஷம்)
அதிகாரம் - அதிகாரம்
அன,அண - ஆணை
அப்பச்சி அப்பாச்சி - அப்பச்சி
அப்பஐ;ஐh அப்பொச்சி
அப்பா - அப்பன், அப்பா
அம்மா - அம்மை, அம்மா
அமத்து - அமர்த்து
அமுக்கரா - அமுக்கிரா
அமுண - அவணம்
அமுது - அ-முது(புதிய,புதமை)
அயியா - ஐயன்(தமையன்)
அயியோ - ஐயா
அரன் - அரண்
அருமய - அருமை
அருமயக்கெ - அருமையாய்
அல்லனவா - அள்ளல்
அல - அளை(இல்)
அலகுவ - அலகு
அலமப - அலம்பல்
அலரிய,அரலிய - அலரி
அலியா - அலியன்
அவர - அவரை
அவலெ,ஹவல - சவள்
அவுல - அவலம்(சோர்வு)
அசல்,அசல் - அயல்,அசல்
அண்ணவி - அண்ணாவி
ஆப்பே - அப்பம்
ஆனவாலு - ஆலைவாழை
ஆற - ஆற
ஆண - ஆணி
ஆரச்சி - ஆராய்ச்சி
ஆண்டுவ - ஆண்டு
இடஆப்பே - இடியப்பம்
இலவுவ - இழவு
இயந்தாரிய - இயவ்தாரி
ஒத்துவ - ஒற்று
ஓடெ - ஓடை
குற - குறு
கூலி - கூலி
ஹெட்டி - செட்டி
கொலுவ - குழை
கொலுவ - கோள்(பை)
கோலம் - கோலம்
கோட்டய - கோட்டை
சதகுப்ப - சதகுப்பை
சுட்டுக்கோல - சுசுட்டுக்கோல்
சுசுளு - சுசுள்
செக்குவ - செக்கு
செப்புவ - செப்பு
தைலம - தைலம்
தொட்டில - தொட்டில்
நடு - நடு
நரிய - நரி
நில - நிலம்
நிலமெ - நிலமை
நூல - நூல்
பட்டிய - பட்டி
பட்டண - பட்டணம்
பம்பரய - பம்பரம்
பளிங்குவ - பளிங்கு
பங்குவ - பங்கு
மட்டி - மட்டி
மல - மலர்
மஞ்சாடி - மஞ்சாடி
மட்டம் - மட்டம்
மடிசல் - மடிச்சீலை
மடப்புலி(றால) - மடைப்பள்ளிஐயன்
மலமாலய - மணவாளன்
மணமாலி - மணவாளி
மண்டி - மண்டி
மயில் - மயில்
மல,மல் - மழ
மஸ்வுpன - மைத்துனன்,மச்சுனன்,மச்சினன்
மாஞ்சுவ - மாய்ச்சி
மாந்து - மாற்று
மாயம் - மாயம்
மாறுவ - மாறு
முதல - முதல்
முறெ - முறை
முன - முனை
முத்தெட்டு - முற்று}ட்டு நிலம்
மொல - மூளை
வண்டக்கா - வெண்டிக்காய்
வல - வளை
வலங்கு - வழங்கு
வாச்சிய - வாசில
மயா - இளமை
றனலி(றன்-பொன்) - பொன்னாலரை

நூல்> யாழ்ப்பாண வைபவ கௌமுதி
ஆசிரியர்> கல்லடி

வடசொல் - தென்சொல்

வடசொற்கள் - தென்சொற்கள்

அங்கம் - உறுப்பு , கூறு
அங்கவஸ்திரம் - மேலாடை
அத்தியாவசியம் - இன்றியமையாதது
அசங்கியம் - அருவருப்பு
அசாத்தியம் - கூடாமை , முடியாமை
அத்தியசஷர் - கண்காணியார்
அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அதிசயம் - வியப்பு , வியக்கத்தக்கது
அதிர்ஷ்டம் - ஆகூழ் , பொங்கு ( திடீர் உயர்ச்சி )
அந்தரங்கம் - மறைமுகம்
அநேக - பல
அப்பியாசம் - பயிற்சி
அபிவிர்த்தி - மிகு வளர்ச்சி
அபராதம் - குற்றம் ( தண்டம் )
அபிசேகம் - திருமுழுக்கு
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபூர்வம் - அருமை
அமாவாசை - காருவா
அர்ச்சனை - தொழுகை( வழிபாடு)
அர்த்தம் - பொருள்
அர்த்தபுஷ்டி - பொருட்கொழுமை
அவசரம் - விரைவு , பரபரப்பு
அவசியம் - தேவை , வேண்டியது
அவயவம் - உறுப்பு
அவஸ்தை - பாடு
அற்புதம் - புதுமை , இறும்பூது , மருட்கை
அன்னசத்திரம் - சோற்றுமடம்
அன்னவஸ்திரம் - ஊணுடை
அன்னியம் - அயல்
அனாவசியம் - தேவையின்மை , வேண்டாதது
அனுக்கிரகம் - அருளிப்பாடு , அருள்
அனுபவி - நுகர்,துய்,பட்டறி
அனுபவம் - பட்டறிவு, துய்ப்பு, பயிற்சி
அனுஷ்டி - கைக்கொள்
அசஷி - கண்ணி
அக்ஞாதவாசம் - மறைந்த வாழ்க்கை , கரந்துறைவு
அசஷ்யன் - கேடிலி
அஸ்திபாரம் - அடிப்படை
ஆக்கினை - ஆணை, கட்டளை
ஆகாரம் - உணவு ஆச்சரியம் - வியப்பு
ஆசாரம் - ஒழுக்கம்
ஆசீர்வாதம் - ஆசியுரை,வாழ்த்து
ஆதரி - தாங்கு, அரவணை,சார்த்துரை
ஆபத்து - துன்பம்
ஆபரணம் - நகை, அணி
ஆதியோடந்தமாய் - முதலிலிருந்து முடிவுவரை
ஆமோதி - வழிமொழி
ஆரண்யம் - காடு
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆலோசி - சூழ்
ஆயுள் - வாழ்நாள்
ஆனந்தம் - களிப்பு
ஆஸ்தி - செல்வம்
ஆட்சேபி - தடு
இந்திரன் - வேந்தன்,புரந்தரன்
இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை
இராப்போஜனம் - இராவுணவு, திருப்பந்தி
இஷ்டம் - விருப்பம்
ஈஸ்வரன் - இறைவன்
உத்தேசம் - மதிப்பு
உத்தியோகம் - அலுவல்
உபத்திரவம் - வேதனை
உபகாரம் - நன்றி
உபசாரம் - வேளாண்மை
உபசார வழக்கு - சார்ச்சி வழக்கு
உபயசேமம் - இருபால் நலம்
உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து
உபவாசம் - உண்ணா நோன்பு
உபாத்தியாயர் - ஆசிரியர்
உஷ்ணம் - வெப்பம்
உற்சவம் - திருவிழா
உற்சாகம் - ஊக்கம்
உஷ்ணம் - வெப்பம்
ஏகாதிபத்தியம் - ஒற்றையாட்சி
ஐசுவரியம் - உடமை ஒரு
சந்தி - ஒரு வேளை
கங்கணம் - வளையள் , காப்பு
கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு ஆக்கினை
கபிலை - குரால்
கர்த்தா - தலைவன் , செய்யோன்
கருணை - அருள்
கர்வம் - செருக்கு
கவி - செய்யுள்
கனகசபை - பொன்னம்பலம்
கனிஷ்ட - இளம்
கஷ்டம் - வருத்தம் , பாடு, கடினம்
கஷாயம் - கருக்கு
காஷாயம் - காவி
காவியம் - வனப்பு, தொடர்நிலைச்செய்யுள், [இராமாயணம் ( பாவியம்)] கானாசபா - இசைக்குழாம்
கிரமம் - ஒழுங்கு
கிரகம் - கோள்
கிரகி - உட்கொள்
கிரயம் - விலை
கிராமம் - சிற்றூர், நாட்டுப்புறம்
கிரியை - செய்கை
கிரீடம் - முடிக்கலம்
கிருகப்பிரவேசம் - புது வீடு புகல்
கிருபை - அருள், இரக்கம்
கிருஷ்ணபகஷம் - இருட்பக்கம் , தேய்பிறை
கிருஷிகம் - உழவு
கோஷ்டி - குழாம்
கோத்திரம் - சரவடி, கொடிவழி
சக்கரவர்த்தி - மாவேந்தன்
சக்தி - ஆற்றல்,வலிமை
சகலம் - எல்லாம்
சகஜம் - வழக்கம்
சகுனம் - குறி,புள்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கடம் - இடர்பாடு
சங்கரி - அழி
சங்கீதம் - இன்னிசை
சங்கோசம் - கூச்சம்
சத்தம் - ஓசை
சத்தியம் - உண்மை
சத்துரு - பகைவன்
சதுரம் - நாற்கரம் , நாற்கோணம்
சதுர் - நடம்
சந்ததி - எச்சம்
சந்தி - தலைக்கூடு,எதிர்கொள்,காண்
சந்தியாவந்தனம் - அந்திவழிபாடு
சந்திப்பு - கூடல்
சந்திரன் - மதி, நிலா
சந்தேகம் - ஐயம், ஐயுறவு
சந்தோஷம்( ஆனந்தம் ) - மகிழ்ச்சி, உவப்பு
சந்நிதி - முன்னிலை
சந்நியாசி - துறவி
சபை - அவை
சம்பந்தம் - தொடர்பு
சம்பாஷணை - உரையாட்டு
சம்பூரணம் - முழுநிறைவு
சமாச்சாரம் - செய்தி
சமீபம் - அண்மை
சமுகம் - குமுகம், மன்பதை
சமுசாரம் - குடும்பம்
சகுசாரி - குடும்பி ( குடியானவன் )
சமுச்சயம் - அயிர்ப்பு
சமுத்திரம் - வாரி
சமுதாயம் - குமுகாயம்
சர்வமானியம் - முற்றூட்டு
சரணம் - அடைக்கலம்
சரஸ்வதி - கலைமகள்
சரீரம் - உடம்பு
சன்மார்க்கம் - நல்வழி
சாகரம் - கடல்
சாதம் - சோறு
சாதாரணம் - பொதுவகை
சாஸ்திரம் - கலை ( நூல் )
சாஸ்வதம் - நிலைப்பு
சாஸனம் - பட்டயம்
சாசஷி - கண்டோன்
சிங்கம் - அரிமா
சிங்காசனம் - அரியணை , அரசுகட்டில்
சிநேகிதம் - நட்பு
சிரஞ்சீவி - நீடுவாழி
சிருஷ்டி - படைப்பு
சிலாசாஸனம் - கல்வெட்டு
சீக்கிரம் - சுருக்கு
சீதம் - குளிர்ச்சி
சுக்கிலபகம் - ஒளிப்பக்கம், வளர்பிறை
சுகம் - நலம், உடல் நலம், இன்பம்
சுத்தம் - துப்புரவு சுதந்திரம் - உரிமை ,தன்னுரிமை
சுதி ( சுருதி ) - கேள்வி
சுபம் - மங்கலம்
சுபாவம் - இயல்பு
சுய - தன்
சுயமாய் - தானாய்
சுயராஜ்யம் - தன்னாட்சி , தன்னரசு
சுயாதீனம் - தன்வயம்
சுரணை - உணர்ச்சி
சுவர்க்கம் - துறக்கம், உவணை
சுவாசம் - மூச்சு ( உயிர்ப்பு)
சுவாமி - ஆண்டான், கடவுள்
சுவாமிகள் - அடிகள்
சூத்திரம் - நூற்பா
சேவகன் - இளையன், ஊழியன் , காவலாளன்
சேவை - தொண்டு ( ஊழியம் )
சேனாதிபதி - படைத்தலைவன்
சேனாவீரன் - பெருநன்
சேஷ்டை - குறும்பு
சொப்பனம் - கனா ( கனவு )
சோதி - நோடு,ஆய்
சௌகரியம் - ஏந்து, சலக்கரணை
சௌபாக்கியவதி - நிறைசெல்வி
ஞாபகம் - நினைப்பு
ஞானம் -அறிவு , ஓதி, காட்சி
தந்திரம் - வலக்காரம் , நூல்
தயவு - இரக்கம்
தருமம் - அறம்
தனம் - பணம்
தட்சணை - கொடை
தாட்சண்யம் - கண்ணோட்டம்
தாசி - தேவரடியாள்
தாமதம் - தாழ்ப்பு, தவக்கம், தாயமாட்டம்
தாமிரசாஸனம் - செப்புப் பட்டயம்
தானியம் - கூலம், தவசம்
தாகிணாத்ய கலாநிதி - தென்கலைச் செல்வர்
தியாகம் - ஈகம்
தியாகி - ஈகி
திரவியம் - பொருள்
திருப்தி - பொந்திகை
திவசம் - இறந்த நாள்
தினம் - நாள்
துக்கம் - துயரம்
துர் அதிஷ்டம் - போகூழ்
துரோகம் - இரண்டகம்
துஷ்டன் - தீயவன்
தூரம் - சேய்மை
தேகம் - உடல்
தைலம் - எண்ணெய்
தோஷம் - சீர் ( குற்றம்)
நதி - ஆறு
நமஸ்காரம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு
நவம் - புதுமை
நசஷத்திரம் - வெள்ளி ( நாண்மீன்)
நாசம் - அழிவு
நாதம் - ஒலி
நாணயம் - காசு
நாவம் - ஒலி
நாமகரணம் - பெயரீடு
நிச்சயம் - தேற்றம்
நித்திரை - தூக்கம்
நித்தி - இகழ், ஏளனம்செய்
நியதி - யாப்புறவு
நியமி - அமர்த்து
நியாயம் - முறை
நிஜம் - மெய்
நிச்சம் - தேற்றம்
நீதி - நயன்
பிரயோஜனம் - பயன்
பிரஜை- குடிகள்
பிராகாரம் - சுற்றிமதில்
பக்தன் - அடியான் ( தேவடியான்)
பிராணன் - உயிர்
பிராணி - உயிர்மெய்( உயிர்ப்பொருள்), உயிரி
பக்தி - தேவடிமை
பகிரங்கம் - வெளிப்படை
பிராயச்சித்தம் - கழுவாய்
பசு - ஆன் ( ஆவு)
பிரியம் - விருப்பம்
பஞ்சேந்திரியம் - ஐம்புலன்
பத்திரம் - தாள் ( இதழ்)
பத்திரிகை - தாளிகை
பத்தினி - கற்புடையாள்
பதார்த்தம் - பண்டம் ( கறி)
பதிவிரதை - குலமகள் ( கற்புடையாள்)
பந்து - இனம்
பர - பிற
பரம்பரை - தலைமுறை
பரிகாசம் - நகையாடல்,பகிடிபண்ணல்
பரியந்தம் - வரை
பட்சி - பறவை ( புள் )
பாத்திரம் - ஏனம் ( தகுதி)
பார்வதி - மலைமகள்
பாவம் - தீவினை
பானம் - குடிப்பு ( குடிநீர்)
பாஷாணஸ்தாபனம் - கல்நாட்டல்
பாஷை - மொழி
பிச்சை - ஐயம்
பிச்சைக்காரன் - இரப்போன்
பிசாசு - பேய் பிரகாசம் - பேரொளி
பிரகாரம் - படி
பிரச்சாரம் - பரப்புரை
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசாதம் - திருச்சோறு, அருட்கொடை
பிரவசம் - பிள்ளைப்பேறு
பிரபல - பெயர்பெற்ற
பிரசுரம் - வெளியீடு
பிரதமம் - முதல்
பிரத்தியட்சம் - கண்கூடு
பிரதசஷிணம் - வலஞ்செய்தல்
பிரதிக்ஞை - மேற்கோள், சூளுரை
பிரதி - படி
பிரபந்தம் - பனுவல்
பிரமாணம் - அளவை
பிரயாசம் - முயற்சி
பிரயாணம் - வழிப்போக்கு
பிரயாணி - வழிப்போக்கன்
பிரயோகம் - எடுத்தாட்சி, வழக்கு
பிரயோசனம் - பயன்
பிரவேசி - புகு
பிரஜை - குடிமகன்
பிராகாரம் - சுற்றுமதில்
பிராணன் - உயிர்
பிராணி - உயிரி
பிராயச்சித்தம் - கழுவாய்
பிரியம் - விருப்பம்
பிரேரேபி - முன்மொழி
பிரேதம் - பிணம்
புண்ணிய தோத்திரம் - திருக்களம்
புண்ணியம் - நல்வினை ( அறப்பயன்)
புத்தி - மதி
புத்திமதி - மதியுரை
புத்திரன் - மகன்
புராதனம் - பழைமை
புருஷன் - ஆடவன்
புஷ்டி - தடிப்பு ( சதைப்பிடிப்பு)
புஷ்பம் - பூ
புஷ்யவதியாதல் - முதுக்குறைதல் ( பூப்படைதல்)
பூமி - ஞாலம், நிலம்
பூர்வீகம் - பழைமை
பூர்வ ஜென்மம் - பழம்பிறவி
பூரணசந்திரன் - முழுமதி
பூஜை - வழிபாடு
போதி - கற்பி, நுவல்
போஜனம் - சாப்பாடு
போஷி - ஊட்டு
பௌரணை - நிறைமதி,முழுநிலா,வெள்ளுவா,மதியம்
மத்தி - நடு
மத்தியானம் - நண்பகல் ( உச்சிவேளை)
மயானம் - சுடுகாடு , சுடலை
மரியாதை - மதிப்பு
மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - வழி
மிருகம் - விலங்கு
முத்தி - விடுதலை
முகஸ்தூதி - முகமன்
மூர்க்கன் - முரடன்
மைத்துனன் - அத்தான் ( கொழுந்தன்), அளியன்
மோசம் - கேடு
மோசஷம் - வீடு, பேரின்பம்
யதார்த்தம் - உண்மை
யமன் - கூற்றுவன்
யஜமான் - தலைவன் ( ஆண்டான்)
யாகம் - வேள்வி
யாத்திரை - வழிப்போக்கு
யுத்தம் - போர்
யோக்கியம் - தகுதி
யோசி - எண்
யௌவனம் - இளமை
ரகசியம் - மறைபொருள்,மருமம்,குட்டு,கமுக்கம்
ரசம் - சாறு
ரணம் - புண்
ரத்தினம் - மணி
ரதம் - தேர்
ரசை - காப்பு
ரசாயனம் - சாற்றியம் , கெமியம்
ராசி - ஓரை
ராஜன் - அரசன்
ரிஷி - முனிவன்
ருசி - சுவை
ரோமம் - மயிர்
லட்டு - இனிப்புருண்டை
லஜ்ஜை - வெட்கம்
லசஷ்மி - திருமகள்
லாபம் - ஊதியம்
லீலை - திருவிளையாடல்
லோபம் - இவறன்மை
லோபி - இவறி ( கஞ்சன், பிசிரி )
வசனம் - உரைநடை
வந்தனம் - வணக்கம்
வமிசம் -மரபு
வயசு - அகவை
வர்க்கம் - இனம்
வர்த்தகம் - வணிகம்
வருஷம் - ஆண்டு
வஸ்து - பொருள் , பண்டம்
வாகனம் - ஊர்தி, அணிகம்
வாசனை - மண்ம்
வாத்தியம் - இயம்
வாயு - வளி
வார்த்தை - சொல்
விகடம் - பகடி
விகாரம் - திரிபு
விசுவாசம் - நம்பிக்கை
விசனம் - வாட்டம்
விஷயம் - பொருள்
விசாரி - வினவு, உசாவு
விசாலம் - சாலம், அகல்ம்
விசேஷம் - சிறப்பு
வித்தியாசம் - வேறுபாடு
வித்துவான் - புலவன்
விநோதம் - புதுமை
வியபிசாரம் - அலவை
விபத்து - இடுக்கண்
வியவகாரம் - வழக்கு
வியர்த்தம் - வீண்
வியவசாயம் - பயிர்த்தொழில்
வியாதி - நோய்
வியாபாரம் - பண்டமாற்று, விற்பனை
விரதம் - நோன்பு
விருத்தாப்பியம் - கிழத்தன்மை, மூப்பு
விரதம் - நோன்பு
விரோதம் - பகை
விவாதம் - திருமணம்
விஸ்தீரணம் - பரப்பு
விஷம் - நஞ்சு
வீரன் - வயவன் ( விடலை)
வேசி - விலைமகள்
வேதம் - மறை
வைசியன் - வணிகன்
வைத்தியம் - மருத்துவம்,பண்டுவம்
ஜ்வரம் - காய்ச்சல்
ஜயம் - வெற்றி
ஜலதோஷம் - நீர்க்கோவை, தடுப்பு
ஜன்மம் - பிறவி
ஜன்னி - இசிவு
ஜனம் - நரல் (நருள்)
ஜனசங்கியை - குடிமதிப்பு
ஜனன மரணம் - பிறப்பிறப்பு
ஜாக்கிரதை - விழிப்பு
ஜாதகம் - பிறப்பியல்
ஜாதி - குலம்
ஜீரணம் - செரிமானம்
ஜீரணோத்தாரணம் - பழுது பார்ப்பு
ஜீவன் - உயிர்
ஜீவனம் - பிழைப்பு
ஜீவியம் - வாழ்க்கை
ஜோஷ்ட - மூத்த
ஜோதி - சுடர்
ஜோதிடன் - கணியன்
ஸ்தாபனம் - நிறுவனம்
ஸ்திதி - நிலை, நிலையம்
ஸ்துதி - போற்று, புகழ்
ஸ்திரீ - பெண்டு
ஸ்தோத்திரி - பராவு,வழுத்து
ஸ்நானம் - குளிப்பு
ஸ்வீகாரம் - தத்தெடுப்பு, தத்து
சஷீணம் - மங்கல்
சேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு)

நூல்>ஒப்பியன் மொழிநூல் ஆசிரியர்>மொழிஞாயிறு