கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிப்பெருவேந்தர் வாலிவாலியின் இயற்பெயர் டி.எஸ்.இரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
`"ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊங்குவிற்பவனும் தேக்குவிற்பான்"
என்பது கவிஞர் வாலியின் வரிகள்
1931 இல் இருந்து 2013 இவ்வாண்டு வரை வாழ்ந்தவர் வாலி.நான்கு தலைமுறைக்கும் பாட்டெழுதி வெற்றிகண்ட வாலிபக்கவிஞர் வாலி.முருகனை தன் வரிகளால் போற்றிப்பாடியவர்
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" மனமுருகப் பாடிய இப்பாடல் முருகப்பக்தர் அனைவருக்கும் அமுதம்.

1958 ஆம் ஆண்டு அழகர்மலைக் கள்ளன் திரையில் தொடங்கி ஏராளம் பாடல்களை சாகும் வரை வடித்தார் நம் கவிப்பெரு வேந்தர் வாலி.

சிவாசிகணேசனின் 156 திரைக்கும் எம்சிஆர் அவர்களுக்கு 128 பாடல்களும் எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட 15000 பாடல்களை எழுதி பெயர் பெற்றார் என்று திரையுலகம் புகழாரம் சூட்டுகிறது.
வாலியவர்கள் அம்மாவுக்காக எழுதிய பாடல் அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

அவர் எழுதிய இறுதிப்பாடல்

அவன் அறிவான் எது தீமை
அவன் அறிவான் எது நன்மை
யார் அறிவார் அவன் தீர்ப்பு
அவன் கையில் நம் வாழ்கை

அவர் எழுதிய இறுதிக் கவிதை

நேற்றிரவு சுவாசம் மிகமோசம்
நரசிம்மனையே பயமுறுத்தி விட்டேன்
நன்றியுடன்
வாலி