கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 19 டிசம்பர், 2012

தமிழ் வணிகனின் பானை ஓடு..!


தமிழ் வணிகனின் பானை ஓடு..!

படத்துக்கும் பதிவுக்கும் நன்றி
 ‘அலெக்ஸியா பவன்’ அவர்களுக்கும் நன்றிஅரபு நாடான ஓமனில் நக்கீரன் என்ற பெருவணிகனின் பெயர் பொறிக்கப் பட்ட முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பானை ஓடொன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.ஓமனிலுள்ள (Khor Rori)  எனும் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பண்டைய பானை ஓட்டில் தான் இந்த வணிகனின் பெயர் பதியப்பட்டுள்ளது.பண்டைய தமிழான பிராஹ்மி மற்றும் தமிழ் வரி வடிவத்தில் ‘ண-ந்-தை கீ-ர-ன்’ என இவ் வணிகனின் பெயர் பதியப் பட்டுள்ளது. சுமார் 1900 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பானை ஓடு பண்டைய வர்த்தக நகரமான ‘சும்ஹுரம்’ இல் கண்டுபிடிக்கப் பட்டதாக் கூறப்படுகின்றது. இப் பானை ஓட்டின் மூலம் புராதன இந்திய நகரங்களுக்கான கடல் வழி வணிகம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து முக்கியமான விவரங்கள் தெரிய வரலாம் என்பதால் இது மிக முக்கியமான தொல் பொருள் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகின்றது.இந்தப் பானை ஓடு செப்டம்பரில் ‘அலெக்ஸியா பவன்’ எனப்படும் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்பொருளியலாளரால் இந்தியாவின் ‘கோச்சி’ நகரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஒரு பட்டறையில்  (workshop) காட்சிப் படுத்தப்பட்டது. இப்பட்டறையில் தலைப்பு ‘கேரளாவின் பட்டனத்தை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் கடல் வர்த்தகம் தொல்பொருளியல் மற்றும் தொழிநுட்பம்’ என்பதாகும்.இந்தப் பட்டறையில் தொல்பொருளியலாளர்கள் உட்பட இந்தியாவின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பற்றினர்.

கருத்துகள் இல்லை: