கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

மனிதத்தின் பூர்வீகம்

ஆபிரிக்காவில் தொடங்கிய புலப்பெயர்வு தெற்கே அவுத்ரேலியாவரை நீண்டது.பின் அங்கிருந்து தொடங்கிய மனித குமுகம் மீண்டும் ஆபிரிக்காவுக்கு மிகப்பெரிய நாகரிக்கத்தைக் கொடுத்தது. அந்நாகரிகத்தில் இன்றளவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரிகம் சுமேரியம்.அந்நாகரிகமே தமிழநாகரிகம் என்பது கண்கூடு மெய்ப்பொருள் ஆய்வாளர்கள் தரும் தரவுகளை பார்ப்பம்
சங்கம் - சங்குஅம் தமிழில் விளத்தம் வலம்புரி முத்தம் (வலதுபுறமாக அமைதல் முத்தமிழின் மாண்பு)
ஆரியன் - அரிமா போன்று நடக்கும் மன்னன் அல்லது ஆண்மகன்(அரி -ஆரி-ஆரிஅன்)
காதம் -இன்றைய அளவீடு பத்து மைல்(கால் - கால்தம் - காதுஅம் -காதம்)
சன் - சனம் - ஜனம்
தமுள் - தமுஸ் (தவசி - தவுசி - தமுசி - தமுஸ் - தமுள் - தமிள் - தமிழ்) - துமுசி
அ - அம் (உம் - அம் - எம்(M))
அக - அகம் (ஆகுதல் - ஆகு - அகு - அக - அகம்)
அம்பர் - அம்பரம்
அம்மா - அம்மை
அர -அரை
அலரி -அலறு
அரளி -அரளி
அபல் -அவல்
உனமே - உலமை
கரா - கரை
கலம் -கலம்
அ -எ - ஏ - ஏய் - ஏலே - எலோ -எலேலோ
தார் - திற
நாறு -ஆறு
நாறு - நாது - நாதி - நதி
சீறு - சீறு
தரு -துரு
எல -எழு


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வாழ்த்துகள்நோர்வே நாட்டு அரசரும் தென்மார்க்கு நாட்டு பரம்பரையை சேர்ந்த
கறால் (Harald) அவர்களின் இருபத்தைந்தாண்டை தற்பொழுது கொண்டாடுகிறார். 


இருபத்தைந்தாம் ஆண்டை நிறைவு செய்த நோர்வே நாட்டு அரசரரசியருக்கு தமிழர் நாமும் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். தென்மார்க்குப் பரம்பரையாக இருந்தாலும் நோர்வே நாட்டை செம்மையாக ஆண்டுவரும் இவர்கள் போற்றுதலுக்குரியவர். மாந்த நேயம்நேயம் மிக்க செங்கோல் அரசுதான் நீண்ட காலம் வாழும். அமைதியை விரும்பும் நாடான போதும் சில தேசியங்களை நோர்வே தான் முன்னின்று அழித்ததும் கண்கூடு ஆயினும் இவர்கள் மிகவும் நல்ல நேயத்தினர். தாம் அரசர் என்ற போக்கு அறவே அற்றவர்கள். ஒருநாள் மே 17 கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போழ்து. திடீரென ஒரு உந்துருளி காவற்துறை காவலர் விரைவாக ஓடிவந்து சாலையை மறித்தார் ஆனால் எவரையும் அதட்டவில்லை இயல்பாக நின்று பார்த்தார் பின்னே இவர்களின் சொகுசுந்து வருவதைக் குடுப்பத்தோடு பார்த்தோம்.அவர்கள் எங்களைப்பார்த்து சிரித்துக் கைகாட்டிக்கொண்டு சென்றனர்.நாமும் பதிலுக்குக் கைகாட்டினோம்.அப்படி ஒரு இயல்பான குடும்பத்தினர்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொங்கலோ பொங்கல்

சிறைப்பட்டோர் மீண்டுவர
குறைப்பட்டோர் தெளிந்துவர
உறைபடுத்த போர்வாள்
உறைகழற்றி மீண்டும்வர
திறல்காளைகள்  திமிராட
அறத்துக்காய் மறமோங்க
அடுப்பிலே ஏற்றுவோம்
புதுப்பானை அதிலே
ஊற்றுவோம் ஆவின்பாலை
நம்மாழ்வார் நம்தலைவர்
போற்றி பாடி வரவேற்போம்
பொங்கலோ பொங்கல்

செவ்வாய், 12 ஜனவரி, 2016

"மஞ்சு விரட்டு"


கலித்தொகையில் முல்லைக்கலியில் சல்லிக்கட்டு என்ற விளையாட்டு பற்றிக்கூறியுள்ளது உவப்புக்குரியது. நல்லுருத்துவச் சோழன் முல்லைத்திணையை நன்கு ஆய்வு செய்து எழுதியுள்ளார். நல்லந்துவனார் கலித்தொகையில் தொகுத்துள்ளார். தமிழரின் வீரவிளையாட்டுகளில் மஞ்சு விரட்டு முக்கிய விளையாட்டாகும். தமிழர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய தொன்மைமிக்க விளையாட்டு .கரப்பா கல்வெட்டுகள் மிகத் திறன்பட காட்டுவது சல்லிக்காளையைத்தான்.
முல்லையில் கொடிய விலங்குகளில் இருந்து பெரும்பாலும் புலியிடமிருந்து காக்க காளையில் வீரம் பார்ப்பார். காளையை அடக்கும் தமிழ்க்காளையையே தமிழ்ப்பெண்டிருக்கு வதுவை செய்து கொடுப்பர்.


"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்"

அதாவது காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயமகள் கணவனாக ஏற்கமாட்டாள் என்கிறது இச்செய்யுள்.


ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும் மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபட்ட பின் தொழுவிற் கூடுவர். தொழுவென்பது காளையடக்கும் இடத்தைக் குறிக்கும். ஏறுகள் விளையாட்டுக்கு அணியமாக நிற்கும். அவற்றின் கொம்புகள் கூர்மையுடைய கணிச்சி என்ற படை போன்று விளங்கும். இச்சல்லிக்கட்டு (சல்லியைக் கட்டுதல்) பின்னாளில் ஜல்லிக்கட்டென மருவிற்று. சுப்புரமணியம் போன்று வாயால் வீரவிளையாட்டு புரியும் பார்ப்பார்க்குத் தெரியுமே தமிழர் வீரவிளையாட்டின் மகிமை?