கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஜெனிவாவில்


ஜெனிவாவில் தமிழின படுகொலையை காட்சிபடுத்தப்பட்ட புகைப்படங்கள் முன்னர் மண்டியிட்டு மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய வெள்ளையர்!

இராஜேந்திரனின் கல்லறை


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம்.
நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது. கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறைதான் அந்தக் கட்டடம்.

தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்திய ஒன்றியத்தின் தொல்பொருள் துறை அதை அழிக்கத் திட்டமிடுகிறது.ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ‘மடவலத்துக் கோயில்’ என்றுதான் சொல்கிறார்கள். சிலர் “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா?” என்று அடையாளப்படுத்துகிறார்கள். சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள். மிக அரிதாக யாரேனும் ஒருவர்தான் ராஜேந்திர சோழனின் சமாதி என்று சொல்கிறார்கள்.
ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் எப்படி தமிழர்களின் தொன்மையை பாதுகாப்பார்கள்? தமிழினத்தையே அழிக்கத் துடிக்கும் தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் தமிழர்களின் வரலாற்று சின்னங்கலையா விட்டு வைப்பார்கள்?

ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவன்; தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவன். பல போர்களில் வெற்றி வாகை சூடியவன். ‘பண்டித சோழன்’ என்றெல்லாம் வரலாற்றில் புகழப்பட்டவன். இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திரனின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக் கிடக்கிறது. இதைப் பார்க்கும்போது “மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே…” என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது. ஆனால் வரலாறு அப்படி அல்ல. ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். அவன் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவுகொள்வதாகவே அமையும். அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி @ ஆம் நாங்கள் தமிழர்கள்

தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !

Anandh Ooty
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

“இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும்.” (புறநா – 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்.” (புறநா – 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

“மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்.” (புறநா – 365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் “திசை” என்னும் பகுதியில் காற்று இருக்கும். “ஆகாயம்”, “நீத்தம்” என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. “நீத்தம்” என்பது இன்றைய அறிவியலார் கூறும் “வெறுமை” (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான “ஸ்ட்ரோட்ஸ்பியர்” என்னும் பகுதியில் தான் “ஓசோன்” எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

“நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள.” (புறநா – 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, “புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்” என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

“விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது” என்று
திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

“சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்” என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி – 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும் !.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் !.

திருவாசகத்தின் ஆறு வரிகளில்..திருவாசகத்தின் ஆறு வரிகளில் அண்டம் விரிகிறது!
ம.செந்தமிழன்

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ என்பது திருவாசகம்.

’அண்டமாகிய இந்தப் பிரபஞ்சத்தின் காட்சியை விளக்குவதென்றால், இங்கே உள்ள பொருட்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து அழகுற திகழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையோ நூறு கோடிகளுக்கும் மேற்பட்டது. இந்த எண்ணிக்கையும் நிலையாக இருப்பதில்லை அவை விரிந்துகொண்டே செல்கின்றன. இது எப்படி இருக்கிறதென்றால், வீட்டுக் கூரையில் உள்ள சிறிய ஓட்டை வழியாக வெயில் நுழையும்போது, அந்த நீண்ட குழல் வடிவமான ஒளியில் பல கோடி தூசுத் துகள்கள் சுழலுமல்லவா! அதைப்போல அண்டம் முழுவதும் அணுத் துகள்களும் அவற்றாலான பெரும் பொருட்களும் எல்லை வகுக்கவே இயலாத வகையில் சுழல்கின்றன. இந்த அண்டத்தின் அணுக்களில் சிறியதாகத் தெரிபவன் யாரென்றால் யாவற்றுக்கும் பெரிதான இறைவன்’ – என்பது இப்பாடலின் கருத்து.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடிய இதே கருத்தைத்தான் நவீன அறிவியல் இப்போது செயற்கைக்கோள் உதவியுடனும் தொலைநோக்கிகள் துணையுடனும் முன்வைக்கிறது.

நவீன இயற்பியலின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு. ஒன்று, பகுதிக் கோட்பாடு (quantum theory). மற்றொன்று, தொடர்புக் கோட்பாடு (relativity theory).

பகுதிக் கோட்பாட்டின் சாரம், ‘பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் ஒளி பயணித்துக் கொண்டுள்ளது. இந்த ஒளி இடைவிடாத அலைபோலப் பயணிப்பதில்லை.
ஏனெனில் ஒளி என்பது ஒரே கற்றையான பொருள் அல்ல. அது எண்ணற்ற துகள்களின் தொகுப்பு. ஒவ்வொரு ஒளித்துகளுக்கும் இடையில் இடைவெளி உள்ளது.

இவ்வாறு பகுதி பகுதியாக பயணிக்கும் ஒளிக் கற்றைகள் பொதுப் பார்வைக்கு ஒரே அலைபோலத் தெரிந்தாலும் உண்மையில் அவை தனித் தனித் துகள்கள்தான். எல்லாத் துகள்களுக்கும் இடையில் வெளி (space) உள்ளது. இந்த வெளி நிலையானது அல்ல, விரிந்துகொண்டே இருக்கிறது’

’இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய
சிறியோனாகப் பெரியோன் தெரியின்’ எனும் இரு வரிகள் மிக அழகாக இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன.

‘வீட்டினுள் நுழையும் ஒளிக் கற்றையைப் பாருங்கள். அது பொதுத் தோற்றத்தில் ஒரே ஒளிக் கற்றைபோல் இருக்கும். ஆனால், அக்கற்றையின் உள்ளே எண்ணற்ற நுண் அணுத்திரள்கள் இருக்கின்றன. இதேபோல் அண்டம் முழுவதும் ஒளிக் கற்றையின் பயணம் நிகழ்கிறது. வீட்டில் விழும் ஒளிக் குழலில் நுண் துகள்கள் இருப்பதைப் போல அண்டத்தில் பெரிய கோள்களும் பிற பொருட்களும் உள்ளன. இறைவன் பெரியவன். ஆனாலும் அவனைச் சிறியோனாகவும் காண இயலும். எப்படி என்றால், வீட்டுக் கூரையிலிருந்து கசியும் ஒளியில் துகள்கள் மிதப்பதும், அண்டத்தில் பெரும் பொருட்கள் மிதப்பதும் ஒரே விதமாக இருக்கிறதல்லவா. அதைப் போல இறைவன் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கிறான்’

தொடர்புக் கோட்பாடு என்பது, ’அண்டத்தில் உள்ள பொருட்களைத் தனித்தனியே புரிந்துகொள்வதும் மதிப்பிடுவதும் சாத்தியமற்றது. அதாவது, பூமி எவ்வளவு வேகமாக சுழல்கிறது என்பதை, பூமியை மட்டுமே ஆய்வு செய்து கூறிவிட இயலாது.அவ்வாறு கூறினால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கும். ஏனெனில் பூமியின் வேகம் சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இயக்கம் பால்வெளியின் இயக்கத்தைச் சார்ந்துள்ளது. பால்வெளியின் இயக்கமோ அண்டத்தின் கோடிக் கணக்கான பகுதிகளைச் சார்ந்துள்ளது. இவ்வாறு ஒன்றோடு ஒன்று சார்ந்தும் தனித்தும் உள்ளன. இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுள்ள வெளி (space) எப்போதும் விரிவடைந்துகொண்டே இருக்கிறது. அதாவது, எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக இருக்கும் வெளி, நிலையாக இல்லாமல் விரிந்துகொண்டே உள்ளது. ஆகவே, பிரபஞ்சத்தை மதிப்பிடுவது துல்லியமான (absolute) செயலாக ஒருபோதும் இருக்காது. மாறாக, ஒன்றுக்கு ஒன்று ஒப்பிட்டுக் கூறுவதே சாத்தியம். இவ்வாறு ஒன்றோடு மற்றொன்று கொண்டுள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதால், இதன் பெயர் தொடர்புக் கோட்பாடு’

” அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வாசகங்களுக்கு வேறு எந்தப் பொருளும் இல்லை.

நேரடியாகவே பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன இவ்வாசகங்கள்:
1. அண்டம் என்பது ஒன்றல்ல, பல்வேறு பகுதிகளை அடக்கியது. ஆகவே ’அண்டப் பகுதி’ எனப்பட்டது.

2. ’உண்டை’ எனும் சொல்லுக்கு ‘உருண்டை, கூட்டம்’ உள்ளிட்ட பொருட்கள் உண்டு. உருண்டை வடிவமான கூட்டம் என்பதை உண்டை எனலாம்.

3. ‘பிறக்கம்’ எனும் சொல்லுக்கு, ‘ஒளி, உயர்ச்சி, குவியல்’ ஆகிய அர்த்தங்கள் உள்ளன.

4. ஆக, ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’ என்றால், ”எண்ணற்ற அளவில் உள்ள அண்டத்தின் ஒரு பகுதி, உருண்டை வடிவத்தில் கூட்டம் கூட்டமாக, ஒளிக் குவியலாக உள்ளது” என்று அர்த்தம்.

5. இந்தக் காட்சியைக் காணும்போது, அது அளவிடுவதற்கே இயலாததாகவும் மேன்மை பொருந்திய காட்சியாகவும் (வளப்பரும் காட்சி) உள்ளது.

6. ’ ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்றால், பின்வரும் பொருள் கொண்ட வாசகம், ’இந்த அண்டப் பகுதியின் பொருட்கள் யாவும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்கு ஒன்று பொருந்துமாறு நின்றுகொண்டுள்ளன. இதன் அழகை விவரிப்பதானால்...அவை நிலையாக நில்லாமல் நூற்றுக் கணக்கான கோடிகள் எனும் எண்ணிக்கையில் விரிந்துகொண்டுள்ளன’

மேற்கண்ட விளக்கங்களில் ஒரே ஒரு சொல்லைக் கூட மிகைப்படுத்தி நான் எழுதவில்லை. திருவாசகத்தில் உள்ள பொருள் மாறாமல் நேரடியாக விளக்கியுள்ளேன்.

திருவாசகம் இயற்றப்பட்டு ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்பாடல் உள்ள பதிகத்திற்கு ‘திருவண்டப் பகுதி’ எனப் பெயரிட்டுள்ளார் மாணிக்கவாசகர். அதாவது, பெருமைமிகுந்த அண்டத்தைப் பற்றிய பகுதி என்று பொருள். பிரபஞ்சத்தை ‘திரு’ எனும் அடைமொழியால் அழைக்கும் பணிவு திருவாசகத்தின் சிறப்புகளில் ஒன்று.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் திருவண்டப் பகுதி எனும் சொல்லை, ‘Nature and Development of the Universe’ என்று மொழி பெயர்த்துள்ளார். ‘பிரபஞ்சத்தின் இயல்பும் வளர்ச்சியும்’ என்று இதற்குப் பொருள். ஏனெனில், திருவண்டப்பகுதி இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நுட்பமான விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.

தமிழர்களின் அறிவியல் மரபிற்கும் இறையியல் மரபிற்குமான சிறந்த உறவை ஏற்படுத்திய பெருமை திருவாசகத்திற்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, இறையாற்றலை ஓர் உருவத்திற்குள் அடக்காமல் உணர்ந்த பெருஞ்சிறப்பும் மாணிக்கவாசகருக்கு உண்டு.

இறையை நோக்கி ‘ஆக்கம் அளவு இறுதி இல்லாய்’ என்றவர் அவர். ’உனக்கென ஒரு வடிவமும் அளவும் முடிவும் இல்லை’ என்பது இதன் கருத்து. ‘ஆணாகி பெண்ணாகி அலியாகி’ நின்றாய் என்றும் இறையைப் பாடியவர் மாணிக்கவாசகர்.
சமயங்களுக்கு அப்பாற்பட்ட பேருண்மைகளைத் தாங்கியுள்ள மந்திரத் தொகுப்பாக திருவாசகத்தைக் காண்கிறேன் நான்.

வெள்ளி, 23 அக்டோபர், 2015

தமிழீழத் தாயே தமிழினி

                       


        

பார்த்ததுண்டோ உமைப்போல் போராளிகளை
தூற்றுவோர் அனைவரும் தமிழினத்துத் துரோகிகளே
நேர்த்தியான போர்ப்படைக் கட்டமைப்பு
நிமிர்வான செந்நோக்கு 
சூரியப் பிரகாசமாய் உடலமைப்பு - இது
புலிகளுக்கே உரித்தான இலட்சியக் கோட்பாடு
கிளிகளை வளர்த்து குரங்கிடம் கொடுத்தது போல்
புலிகளை வளர்த்து சிறிலங்காவிடம் கொடுத்தது காலம்
அன்றொரு காலம் அஞ்சிய காலனும்
பின்னொருகாலம் சிரித்துக் கொண்டே
எருமையில் ஏறிப் பவனி வருகிறான்
எங்கே புலி எங்கே புலியென்றே
ஒவ்வொரு வீட்டிலும் தேடுகிறான்
காலா! கேள் உனைக் காலால் உதைவேன்
என்றந்தப் பாரதி உரைத்தது போல்
என்றோ ஒருநாள் எங்கள் புலிகள்
காலிலும் மிதிபடுவாய் போ...
சிறைப்பட்ட புலிகளுக்கு என்னென்ன நடந்தன
சிறைவாசம் தமிழருக்கு எனென்ன கொடுக்கும்
என்ற நிதர்சனத்துக்கும் சமானத்துக்கான அரசியல்
பெண்போராளி கொடுக்கும் சாட்சியம்
கால்களை கைகளை வாயைக் கட்டி
காவாலிச் சிங்களத்தின் கொடூரம் எவ்வகை
உரிமையைக் கொடுக்கும் என்ற சுயநிர்ணய
நிர்வாணத்து தரும் ஒவ்வொரு புலிக்குமான
சாட்சியம் தான் இந்தப் புனிதவதியின்
பூ உடல்,
தாயே
தமிழ்ப்பதியே
தமிழினி!
நீங்கள் ஆடியது கொற்றவைக் கூத்து
அக்கூத்து பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் எதிரானது
ஆடத்தெரியாது அருகிருந்து பார்த்த போக்கிலிகள்
இன்று அரசியல் பேசட்டும்
கோடாலிக்காம்புகள்
ஒரே மரத்தில் பிறந்த
தீக்குச்சிகள்!
அவை மூட்டிய நெருப்பிலேயே அவையே
நீர்த்துப் போகும்.... அவற்றையெல்லாம் ஏந்த
எங்கள் தாயகம் குப்பைத் தொட்டியல்ல
தமிழீழம் மாவீரர் தாயகம்
அக்கா!
ஊடகங்களில் நீ உதிர்த்த வார்த்தைகளும்
போர்க்களத்தில் ஆடிய தமிழ்ச்செருக்கும்
அரசியலில் ஈட்டிய பெருமதிப்பும்
அகிலம் அறியும் சகத்தின் அத்தனை
பெண்போராளிகளுக்கும் நீங்களே பாடம்
மணிப்பூரும் காஸ்மீரும் இன்னும் பலவும்
பிரளயமாய் உருவெடுக்கும் அதில்
ராஜீவுகளையும் மகிந்தாக்களையும் மோடிகளையும்
மண்டியிட வைக்கும் தாயகங்கள் மலரும்
தமிழீத் தாயே புன்னகையோடு வாழ்த்துவாள்
வாழ்க தமிழீழத்தின் தமிழ்ப்பதிகளே!
வாழ்க நூற்றொரு காலம்..........