கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 23 ஜூலை, 2015

நம்மாழ்வார்

அகத்தியனார் அருளிய நற்பனைத் தானே
அழகாக நம்மாழ்வார் அருளிச் சென்ரார்
உகந்தபணி நமக்கெல்லாம் உழவுத் தொழிலொன்றே
உலகைக் காக்கும்  - அந்த
உயந்த பணிக்காய் உழைப்போம் மக்காளே!
அண்டத்தில் உள்ள பற்பல பேர்களோடு
அடங்காமல் சண்டையிட்டு உருளும் ஞாலம்
பிண்டமாய் இருக்கும் உடலை எல்லாம்
பிணமாய் ஆக்காது - நல்
உயிராய் உய்க்கின்ற நிலையைக் காண்பாயே
ஆதியும் பகவனும் சேர்ந்தால் அல்லவோ
அதைத்துக்க்கும் வாழ்வுண்டாம் நல்வாழ்வும் அதுவே
கதிரையும் காற்றையும் நீரையும் மண்ணையும்
காப்பாற்ற முன்வருவோம் அனைவரும் ஒருங்கிணைந்தே!

 
 
 
 
 
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காமல்
சீரகத்தைத் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!
 
 
 
 

 
 
 
 
 
 
 

 
 
 

புதன், 22 ஜூலை, 2015

சுமேரியரிடமிருந்து......!

சுமேரியரிடமிருந்து கடன் பெற்றனர் மதக்கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அத்தோடு நிற்காது அவர்களின் சின்னங்களையும் திருடிக்கொண்டனர். மதங்களின் காலம் 3000 எனில் சுமேரியரின் காலம் 4000 ஆண்டு காலம் இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 


 
 
 
 
அதுமட்டுமல்ல இன்றைய அறிவியலையும் கண்டறிந்தவன் அன்றைய தலைச்சங்கக் குமரிநாட்டு சுமேரியனே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகத்தியர் சித்தம்


Bagdad battery 2000 years old ( IRAK )

 
நாவலம் பொழிலிலிருந்து சுமேரியம் சென்றதா ?
சுமேரியத்திலிருந்து நாவலம் பொழிலுக்குச் சென்றதா?
என் கேள்விக்கென்ன பதில்?
 

 
"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
கீழே மந்திரம் மறைந்துள்ளது

 
"தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
இது அகத்தியர் மந்திரமாமே

http://siththanarul.blogspot.no/2013/06/blog-post_3.html


 

ஏடல்கள்

நாவலம் பொழிலுக்குக் கொண்டு வரப்பட்ட ஏடல்கள் கிட்டத்தட்ட
 2500 ஆண்டுகள்
 

செவ்வாய், 21 ஜூலை, 2015

எஃகிப்தின் சுவரில்எஃகிப்தின் சுவரில் காணப்படும் மின்கலவடிவமும் அகத்தியர் வடிவமைத்த மின்கலத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டு தெளிக. எஃகித்தின் சுமேரியத்தின் கரப்பாவின் ஏடலையே அகத்தியர் கற்று நாவலம் பொழிலில் சிறந்து விளங்கினார். அவர் ஐம்பூத வழிபாட்டை தொடக்கி வைத்தார் வேல் எஃகித்து மக்கள் பயன்படுத்திய காவல் கருவி இந்தியாவின் முழு திறனுக்கும் எஃகிப்தியமே மூலம்.

தமிழ் பூர்வீகம்


16 பில்லியன் ஆண்டுகாலம் இருக்கும் நம் பிரபஞ்சத்தின் தோற்றவளர்ச்சி.அதில் இருநூறு ஆயிரம் ஆண்டு காலமிருக்கும் குரங்கு வடிவிலான தோற்றம் நூறு ஆயிரம் காலப்பகுதி நெருப்பின் பயன்பாடு பத்தாயிரம் ஆண்டிலிருந்து மனிதவளர்ச்சி வேட்டையும் வளர்ச்சியும் கலந்த கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை. நாகரிக மனித வளர்ச்சி எனலாம். இன்றிருக்கும் சகாரா ஒருபகல் பூஞ்சோலையாக இருந்தது.

 

அப்பூஞ்சோலை எவ்வாறு பாலையானது அந்த பாலைக்குக் கீழே படிந்துள்ளது மனிதத் தோற்றம். சகாராவுக்கும் அருகே உள்ள நாடுகளை எடுத்தால் அவர்கள் பண்பாடு புரியும். அவர்கள் பேசும் மொழியை உற்று நோக்கினால் நாம் பேசும் தமிழ் தான் என்பது புரியும்.

                                      

  
 
 
எந்த மொழிக்கும் இல்லாத அச்சிறப்பு வல்லினம் _ ஆபிரிக்கம் மெல்லினம் _மொங்கோலியம் இடையினம் _ஐரோப்பியம் என்பது புரியும். நான்காவது பண்ணை இந்தியம் என்று புரியும்.தமிழில் உள்ள ககரம் கரப்பாவின் தோற்றத்தைக் கூறும்.அகரம் ஆங்கு குடிகொண்ட அதாவது தலைச்சங்கத்தில் முடிசூடிய சிவனைக்குறிக்கும். ஓங்காரம் அவன் மேனி உருவத்தைக் குறிக்கும்.அதாவது சிவலிங்கத்தைக் குறிக்கும். சிவன் தோற்றம் முதற்சங்கம் சுமேரியம் அல்லவா! மூத்த சங்கம் எகிப்து அல்லவா நாகர் பிறந்தகம் அதுவல்லவா கடற்கோளால் சிதையுண்ட பின் சிறப்பாய் உருவான சிவமல்லவா முதற்சங்கத்தின் நபி முதல் நபி

எல் - அல் - எஸ் - இஸ் -அஸ்
அல்ல - இல்லை - இலை - அலை
ஏல் -எல் -எலும்பு -எழு - எழுதல்
அல்ல - அல்லா -அல்லது - அல்லாஷ்
அஸ் -அஸ்ஸாம் -அஸ்லாம் - இஸ்லாம்
சால்பு - சால் - ஸல்
நம்பு- நம்பி -நபி
அஸ்லா மழைக்கும் மழைக்கும் ஸலாம்
அல்லா வழி உன்னை அழைக்கிறது ஆம் சால்புடையனாக அழைக்கபடுகிறேன்

ஒருதட்டில் உணவருந்தும் உயரிய பண்பாடு இசுலாத்திடமல்லவா இருக்கிறது. தந்தை சொல்கேட்டே மண்மகனைத் தெரிவு செய்யும் பண்பாடு எதியோப்பியரிடமல்லவா இருக்கிறது.எதியோப்பியம் எரித்திரியம் கென்யா நீகர் சூழ்ந்த நிலமே தமிழின் முதல் தயகம் இரண்டாம் தாயகம் நாகர் வழிவந்த வேல்கொண்ட திருநாடு எகிப்து வானவர் வழிவந்த தாயகம் சுமேரியர் பெருநாடு நான்காம் உயர் நாடு நாவலம் பொழில் நாடு. செம்மொழியாம் தமிழ் நாடு. இவ்வெடுத்துக்காட்டுகளால் கூறவிழைவது ஆபிரிக்கம் முதல் தாயகம் அரேபியம் இரண்டாம்தாயகம்(அரேபியம் வடவிந்தியம்)மொங்கோலியம் மூன்றாம் தாயகம். ஆபிரிக்கம் மேற்குத்தொடர் குமரி நான்காம் தாயகம்.போதுமடா சாமி

வரலாறு என்பது மாயை. அதில் மதங்களும் மாயா
sa.uthayan

நடிகர் சிவாஜி நினைவுகள்....* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!...


* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
thank you
மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினம்

சனி, 18 ஜூலை, 2015

தைலசயின்


 
 
 
மனிதனால் அழிக்கப்பட்ட , ஒரு மார்சூப்பியல் , இதன் பெயர் தைலசயின் (Thylacine) , இவைகள் கங்காருவை போல குட்டிகளை இதன் வயிற்றுப் பைய்யில் வைத்து பாதுகாக்கும்,மாமிச உ...ண்ணிகளான இவைகள் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா முழுமைக்கும் இருந்தது, ஆனால் ஐரோப்பிய வேட்டைக்காரர்களால் இவைகள் கொன்றொழிக்கப் பட்டு இறுதியில் தாஸ்மேனியாவில் மட்டும் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இருந்தது..
இவற்றின் முதுகில் புலி போன்ற வரிகள் இருக்கும், ஆகவே இவைகளை தாஸ்மேனிய புலிகள்(Tasmanian tiger) என்றும் அழைப்பார்கள். இவைகள் 20ஆம் நூற்றாண்டு இருதியில் முழுமையாக நம்மை விட்டு அழிந்தது..
நம்மால் நம்மைவிட்டு பிரிந்த இவைகளை ஒருநிமிடம் மனதில் எண்ணி , இயற்கையை போற்றுவோம் !

"இசை அணிகலம் மெல்லிசை மன்னர்"இன்றைய சமுதாயத்தினர் பலருக்கு MSV என்றால் ,
தாத்தா , அப்பா கேட்கும் பழைய பாடலை தந்தவர்( இந்த பாட்டை ஏன் இப்படி உருகி கேட்குறாய்ங்களோ என்று சலித்தும் கொள்வர் )...... இவர் காதலா காதலா, காதல் மன்னன் படத்துல நடிச்சாரு ... இப்படி தான் தெரியும் ..
ஒரு சிலருக்கு - விடை கொடு எங்கள் நாடே , சங்கமம் பாட்டுலாம் நல்லா பாடினார் .. சூப்பர் சிங்கர் ல வந்துருக்காரு ... இப்படி ...
இதை நான் பதிவுக்காக சொல்லலைங்க , இது தான் 35 வயதிற்குள் இருக்கும் பெரும்பாலானோர் MSV பற்றி தெரிந்து வைத்து பேசுவது!

உண்மை என்னவென்றால் ,
MSV... இந்த மாமனிதர்க்கு தமிழ் கூறும் நல்லுலகம் பட்டிருக்கும் கடன் என்றுமே அடைக்க முடியா கடன் .... இன்றும் நம் கேட்கும் ஒவ்வொரு மெல்லிசைக்கும் மூலாதாரம் அவரிடமிருந்து வந்தது என்று சொன்னால் அது மிகையல்ல ..
பாரம்பரிய நாடக இசை , அதன் இலக்கணத்திலேயே வழி வந்த ஆரம்பகால சினிமா பாடல்களை தாண்டி , பாமரன் ரசிக்கும் விதமாக இசையையும் , ஒலியையும் கொடுத்த பிரம்மா இவர் .. இந்தி பாடல்களில் தான் புதுமை இருக்கும் என்று புரியாத மொழியிலும் பாடல்கள் கேட்டு வந்த தமிழர்களை , தமிழுக்கு அழைத்து வந்தவர் இவர் என்பது வரலாறு ...
கண்ணதாசனும் இவரும் கை கோர்த்ததால் , இசையும் தமிழும் சங்கமித்து காதல்க்கொண்டு பெற்றெடுத்த பாடல்கள் போல்,
தமிழனை கடந்த நூற்றாண்டில் எதுவும் பாதித்ததில்லை ..
வேறெதுவும் தமிழும் பண்பும் கற்பித்ததில்லை ,
வேறெதுவும் காயங்களுக்கு மருந்தாகியதில்லை ,
அவைகளை போல் ஒரு பொக்கிஷமும் இல்லை !
" கர்ணன் " என்கிற ஒரு திரைப்படத்தின் பாடல்கள் போதும் ... இன்னும் 1000 ஆண்டுகள் சான்றாக நிற்க !
இன்று இசை தெரியுதோ இல்லையோ தொழில்நுட்பம் தெரிந்தால் இசையமைப்பாளர் என்கிற சூழலில் , எவ்விதமான நவீன தொழில்நுட்பம் இல்லாமல் , அவர் படைத்த அத்தனை முத்துக்களும் live recording, அதாவது பாடகர்களுடன் வாத்தியங்களும் ஒன்றாக இசைக்க பெற்று , பதிவு செய்யப்பட்டவை . யோசிக்க யோசிக்க பிரமிப்பு விலகாது .
இன்று கட்டமைக்கப்பட்டு அழியா ஆலமரமாக வேறூன்றி நிற்கும் திராவிட அரசியல் இவர் பாடல்களை வைத்து தான் வளர்ந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது ... உலகம் போற்றிய உன்னத கலைஞன் சிவாஜி அவர்கள் இவர் தோள் மீது ஒரு கால் வைத்தே மேலும் வெளிச்சம் பெற்றார் ..
அவர் போட்ட இசையை தான் நான் போட்டேன் என்றார் இசைஞானியார் ...
He's the true original composer, என்று சொன்னார் ரஹ்மான் ..
1200 படங்கள் , பல மொழிகள் , 60 ஆண்டுகள் என்று இசைராஜ்ஜியம் நடத்திய சக்கரவர்த்தியின் உடல் மறைந்து விட்டது ...ஆனால் தமிழ் இருக்கும் வரை இவர் இருப்பார் .. தமிழிசை இருக்கும் வரை இவர் விட்டு சென்ற பொக்கிஷங்கள் இருக்கும் ...
அன்றும் இன்றும் தமிழ் பள்ளிகளில் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தை இசையமைத்தவரும் இவரே ..
"கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை ... மண்ணை விட்டு போனாலும் தமிழர்களை விட்டு போகவும் இல்லை "
இந்திய அரசின் பத்ம விருதுகள் இவருக்கு தர படாததை , இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் எழுதி விட்டு , இந்த மாமன்னரை தலை வணங்கி போற்றுவோம் !!!
போய் வாருங்கள் ஐயா ...
எங்கள் கவலைகளை மறக்க செய்த உங்களுக்கு எதை திருப்பி தந்தாலும் ஈடாகாது .. இப்போதைக்கு எங்கள் கோடானுகோடி நன்றிகள்....வாழ்ந்தவர் கோடி ..மறைந்தவர் கோடி ..மக்களின் மனதில் நிற்பவர் யார் !!!???!!!!
வீடு வரை உறவு ..வீதி வரை மனைவி ..காடு வரை பிள்ளை ..கடைசி வரை MSV
நன்றி
‪#‎RipMSV‬