கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

புறநானூற்றில் தமிழர் வரலாறுபுறநானூற்றில் தமிழர் வரலாறு
=========================

கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதியைச் சங்கக் காலம் என்பர். இக்காலத்தில் தோன்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பதினெட்டு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாகும். இவைகளில் உள்ள 2381 பாடல்களை 473 புலவர்கள் பாடி உள்ளனர். 102 பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் காணப்படவில்லை. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய முதன்மைச் சான்றாதாரங்கள் புறநானூற்றில் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் அனைத்தும் இருப்பதாகக் கூறமுடியாது. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான குறிப்புகள் உள்ளன. தொல்பொருள், கருவி, கலம், கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மனித எலும்பு, இலக்கியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நாட் குறிப்பு, பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்று ஆவணங்கள், செவிமரபுச் செய்திகள், பழக்க வழக்கங்கள், மொழிநூல் சான்றுகள், நில நூல் சான்றுகள், கடல் நூல் சான்றுகள் ஆகியவைகளை வரலாற்றை எழுதுவதற்குரிய ‘வரலாற்று மூலங்கள்’ என்று கூறுவர். புறநானூற்றில் தமிழர் வரலாற்றை வரைவதற்குரிய வரலாற்று மூலங்கள் காணப்படுகின்றன.

புறநானூற்றில்...

தமிழ் மொழியை ‘வண்டமிழ்’ (தொல்.1336) என்றும் ‘தமிழ் என் கிளவி’ (தொல்.386) என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஒரு நாட்டின் இனத்தை வரையறுப்பதற்கு, எல்லைகளை உடைய நிலம் நிலையான அரசு, மொழி , ஒரு பண்பாடுடைய மக்கள் என்ற நான்கும் அவசிய மானதாகும். இந்நான்கு பண்புகளும் தமிழ் இனத் திற்கு அடையாளமாக அமைந்துள்ளன. தமிழகமே தமிழ் மக்களின் ஆதி தாயகம் என்றும், தமிழர்களே தமிழகத்தின் மூலக்குடிகள் என்றும் மொகஞ் சதாரோ நாகரிகம், திராவிட நாகரிகமே என்றும் கீராசு பாதிரியார் மற்றும் சர் சான் மார்சல் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். புறநானூற்றிலிருந்து, (1) தமிழர் தோன்றிய வரலாறு, (2) அரசியல் வரலாறு, (3) பண்பாட்டு வரலாறு, (4) சமுதாய வரலாறு ஆகியவற்றை அறிந்துக் கொள்ளலாம்.

தமிழர் தோன்றிய வரலாறு.

தமிழர்களின் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு புறநானூறு ஓரளவு துணை செய்கிறது எனலாம்.

தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்று அறிஞர்கள் கூறுவர். கடல் கோளால் அழிந்து போன இக்குமரிக் கண்டத்திலிருந்தே தமிழர்கள் தோன்றினர் என்று தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். இலெமூர்களிடம் காணப்பட்ட சைவ வழிபாடு, பிணத்தைத் தாழியில் வைத்துப் புதைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு, தாய்வழி உரிமை போன்ற பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் தமிழர்களிடம் காணப்படுவதால், தமிழர்கள் இலெமூரியாவில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும் என்று கா.அப்பாதுரையார் கருதுகின்றார். குமரிக் கண்டத்திலிருந்து அழிந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி, ‘முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி’ (புறம்.9) என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. கடல் கோளுக்குப் பிறகு எஞ்சியிருந்த பழம் பாண்டிய நாட்டுப் பகுதியின் இடையே ‘குமரி’ என்னும் நதி ஓடியது என்பதை, ‘தெனாஅ துருகெழு குமரி’ (புறம்.6) என்னும் புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் (11:20௨1) இச்செய்தி சுட்டப் படுவதைக் காணலாம்.

அரசியல் வரலாறு.

சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றக் தொடங்கியிருந்த காலமாகும். அதனால், புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோருடைய ஆட்சி அதிகாரம் அரசியல் அமைப்பை வழி நடத்திச் செல்வதைக் காண முடிகிறது. மன்னனே உலகின் உயிர் போன்றவன் என்பதை ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ (புறம்.186) என்ற புறப்பாடல் உணர்த்துகிறது.

கரிகாற்சோழனின் முன்னோர் கடல் கடந்து கப்பல் ஓட்டி மீண்டதை புறநானூறு (புறம்.66) கூறுகிறது. பருந்து ஒன்று புறாவை உண்பதற்காகத் துரத்தியது. புறா அடைக்கலமாக செம்பியன் காலடியில் விழுந்தது. அதைக் காக்க பருந்திற்கு தன் தசையை அறுத்துத் தந்தான் என்னும் செய்தியை ‘தன் கைப்புக்க குறுநடைப் புறவின்’ (புறம்.43) என்ற புறப்பாடல் எடுத்துரைக்கிறது. இதன் மூலம் மன்னர்கள் எளிய உயிர்களின் மீது அன்பு கொண்டிருந்த பண்பு புலப்படுத்தப்படுகிறது.

சேர மன்னர்களுள் ‘இந்திரன்’ என்னும் பட்டப் பெயர் கொண்ட ஒருவன் வெளிநாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் பயிர் செய்தான். அவனுடைய மரபில் வந்த அதிய மான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ‘அரும்பெறல் மரபின் கரும்பி வட்டத்து’ (புறம்.99) என்ற பாடலும், அவனுடைய மகன் பொகுட் டெழினியைப் பற்றி ‘கரும்பில் வட்டத்தோன் பெரும் பிறங் கடையே’ (புறம்.392) என்ற பாடலும் எடுத்துரைக்கின்றன. பாரி (புறம்.109), எவ்வி (புறம்.24), எயினன் (புறம்.361), பிட்டங் கொற்றன் (புறம்.168), இருங்கோவேள் (புறம்.201), பேகன் (புறம்.141), அதியமான் (புறம்.91,95,99), ஓரி (புறம்.152), குமணன் (புறம்.160), விச்சிக்கோ (புறம்.200) ஆகிய குறுநில மன்னர்களைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகின்றது.

புறநானூற்றுக் காலத்தில் ஆரிய செல்வாக்கு தலை தூக்கி நின்றது. மன்னர்கள் தமிழர் பண்பாட்டைப் புறக்கணித்து, ஆரியர்களின் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாக மன்னர்கள் கருதினர். அதனால் தான் பாண்டியன் ‘பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பட்டப் பெயரை ஏற்றுக் கொண்டிருந்தான். அதுவும் ஆரிய முனிவர்களைப் போல ‘குடுமி’ வைத்துக் கொள்வதில் மன்னர்கள் பெரு விருப்பம் கொண்டிருந்தனர். இருங்கோவேள் (‘நீயே வடவால் முனிவன்’, புறம்.20), பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (‘இறைஞ்சுக பெரும நின் சென்னி’, (புறம்: 6), கரிகாற் பெருவளத்தான் (‘பெருவை நுகர்ச்சிப் பெருந்தூண் வேத வேள்வித் தொழின் முடித்து’, (புறம். 224) ஆகியோர் ஆரியத் துறவியர்களின் செல்வாக்கிற்கு அடிமைப்பட்டிருந்ததை புறநானூறு காட்டுகிறது.

“இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே”

(புறம்.252)

என்னும் ஒரே ஒரு புறப்பாடல் மட்டுமே துறவைக் கண்டித்துப் பேசுகிறது.

“வேத கால இலக்கியங்கள் துறவிகளின் பெருமையைப் பேச, சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு, வீரனாக இருந்து துறவியாக மாறிய ஒருவனின் துறவு வாழ்க்கையைக் கண்டு வருந்தி, மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டு வனாக இருந்து, பின் துறவியாக மாறிய அவனது நிலைக்கு வருந்திப் பாடுகின்றது”

என்று கூறுவர். மன்னர்கள் ‘வீரம்’ என்ற பெயரில் பிற மன்னர்களோடு அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தனர். போரில் தோற்ற மன்னனின் மகனை தேர்க்காலில் இட்டுக் கொல்லத் துணியும் (புறம்.46) அளவுக்கு அரசர்கள் இரக்கமற்றவர்களாகவும், போர் வெறியர்களாகவும் இருந்தனர். ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற பாடலில் ‘அல்லது’ (தீமை) செய்யாமல் இருக்குமாறு புலவர்கள், மன்னர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு மன்னர்கள் செய்த தீமை அளவு கடந்து காணப்பட்டது.

பண்பாட்டு வரலாறு.

பண்பாடு அல்லது நாகரிகம் என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் போன்றவைகளும் மனிதன் சமுதாய உறுப்பினனாக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கியதாகும் என்று டைலர் என்பார் குறிப்பிடுகின்றார். ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்பது எண்ணப்போக்கு செயல்பாடு, பொருள்களின் பயன்பாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவர். தமிழர்களின் இம்மூன்று பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்தும் போக்கு புறநானூற்றில் காணப்படுகிறது.

கருவிகளின் வளர்ச்சியைக் கொண்டு ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அளந்து காண்பர். கற்களால் கருவி செய்யப்பட்ட காலம் கற்கால மாகும். அஃதே போல் பொன்னால் பொருட்கள் செய்யப்பட்ட காலத்தைப் பொற்காலம் என்பர். பொன் (புறம்.5,9,116,117,123), வெண்கலம் (புறம்.3, 281), வெள்ளி (புறம்.390) ஆகியவைகளைப் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். நெல் (புறம்.331), உப்பு (புறம்.116,60) ஆகியவைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தினர். ‘பருத்திப் பெண்டிர் பனுவலன்ன’ (புறம்.125) என்னும் புறப்பாடல் பருத்தியைக் கொண்டு நூல் நூற்ற செய்தியை விளக்குகிறது. யவனர்கள் கொண்டு வந்த கலத்தில் மது அருந்திய நிகழ்ச்சியை ‘யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்’ (புறம்.56) என்னும் பாடல் சுட்டுகிறது. எனவே தமிழர் பொருள்சார் பண்பாட்டில் (ஆயவநசயைட உரடவரசன) மேலோங்கி இருந்தனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சமுதாய வரலாறு

‘மலினோவ்ஸ்கி’ போன்றோர் சமூகத்தின் செயல்கள், மக்களின் உணவு,உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டவை என்று கூறுகின்றனர். இதனை, ‘தேவைக் கோட்பாடு’ என்று அழைத்தனர். ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள சாதி, சமயம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஆராய்வது அவசியமானதாகும். ஆரியர்களின் சார்பால் புறநானூற்றுக் காலத்திலேயே சாதி வேறுபாடு தோன்றக் தொடங்கிவிட்டது. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் ‘வேற்றுமை தெரிந்து நாற் பாலுள்ளும்’ (புறம்.183) என்ற பாடல் நான்கு வகையான சாதி வேறுபாடுகளைக் குறிப்பிடுகிறது. மாங்குடி கிழார் ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை’ (புறம்.334) என்ற பாடலில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு வகைச் சாதிகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதில் ‘சாதி’ என்ற சொல்லைக் கவிஞர் கையாளவில்லை என்றும் ‘குடி’ என்று அவர் கூறியது பழங்குடிகளையே குறிக்கும் என்றும் ந.சுப்பரமண்யன் கூறுகின்றார். ஆனால் இது வலிந்து கூறுவதாகும்.

குடி என்பது சாதிகளையே குறித்து வந்துள்ளது. தேவநேயப் பாவாணரும் ‘இக்கூற்று ஒரு குறிப்பிட்ட இடம் பற்றியது அன்றிப் பொதுபடக் கூறிய தன்று’ என்று கூறுகின்றார். இதுவும் பொருத்த மானதாகத் தெரியவில்லை. ஆரியப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்த போது தமிழகத்தில் சாதியும் வர்ணமும் தோன்றிவிட்டன. ‘கட்டில் இழிசினன்’ (புறம்.82), ‘துடி எறியும் புலைய, எறிகோல் கொள்ளும் இழிசின’ (புறம்.267) போன்ற புறநானூற்றுத் தொடர்கள் ‘சாதி இழிவு’ குறித்துக் குறிப்பிடுகின்றன. கணவனை இழந்த பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டதை ‘நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே’ (புறம்.246) என்னும் புறப்பாடல் கூறுகிறது. இதில் பெண்ணே விரும்பி நெருப்பில் விழுந்ததாகப் பொய்யுரையைப் புலவர் கூறியுள்ளார். குழந்தைகளை யானையின் காலில் இட்டு கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதைப் புறநானூற்றுப் பாடல் (புறம்.46) சுட்டிக்காட்டுகிறது.

புறநானூற்றை மறுவாசிப்புச் செய்து கட்டுடைத்துப் பார்த்தால் ‘தமிழர் வரலாற்றின்’ வன்மை, மென்மைகளைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். கருவி, வாகனம், நெருப்பு, உணவு, அணிகலன், தொழில் போன்ற பொருட் பண்பாட்டில் தலைசிறந்து நின்ற தமிழர்கள், சமுதாயப் பண்பாட்டில் தரம் தாழ்ந்து நிற்கின்றனர். மன்னர்கள் ஆரியப் பண்பாட்டிற்கு அடிமையாகி தலை குனிந்து நின்ற காட்சியைப் புறநானூறு காட்டுகிறது. அரசர்கள் போர் வெறி கொண்டவர்களாக இருந்தனர்; குழந்தைகளைக் கொல்ல முயன்றனர். சாதி வேறுபாடும், தொழில் வேறுபாடும் சமுதாயத்தில் ஊடாடி நின்றன. ‘இழிசினர்’ என்று ஒரு பகுதி மக்கள் இழித்துரைக்கப்பட்டனர். பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். இவைகளெல்லாம் அக்காலத் ‘தமிழர் வரலாறு’ மேன்மைக்குரியதாக இல்லை என்பதையே காட்டு கின்றன. எனினும் மலையமான் மக்களை யானைக் காலில் இட்டுக்கொல்ல, கிள்ளி வளவன் முயன்ற போது, அதனைத் தடுத்து நிறுத்தி, மன்னனுக்கு அறிவுரைக் கூறிய கோவூர் கிழாரின் செயல் போற்றுதலுக்குரியதாகும். அதிகாரத்தை எதிர்க்கும் இவருடைய குரலில் மென்மையும் உள்ளடங்கிய தன்மையும் காணப்படுகிறது. ஆயினும் அதிகாரத்தை எதிர்க்கும் இத்தகைய குரலே தமிழர் வரலாற்றில் மின்னல் கீற்றாய் ஒளி வீசி நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.

வரலாறு உதவி : தூய தமிழ்ச்சொற்கள்

சுண்டைதமிழர் உணவே மருந்து..!

கசப்பு உடலுக்கு நல்லது...!

கசப்பான விடயங்கள் வாழ்கையில் நல்ல விளைவுகளைக் கொடுக்க வல்லன.

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.
நன்றி
சனி, 26 ஜனவரி, 2013

பரம்பரை என்றால்?நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை

நமக்கு அடுத்த தலைமுறைகள்:

நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)

ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.

எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..
நன்றி.
தமிழர் வரலாறு

ஜானகி அம்மாள்


இந்திய அரசின் விருதை புறக்கணித்த ஜானகி அம்மாளுக்கு தமிழர்களின் பாராட்டுகள்

இந்திய அரசு விருது கொடுத்தாலோ விருந்து கொடுத்தாலோ வரிந்து கட்டி ஓடிப் போய் வாங்கும் தமிழக கலைஞர்கள் நடுவிலே தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜானகி அம்மாள் வஞ்சகம் நிறைந்த இந்திய அரசு கொடுத்த தாமரை (பத்மா)
விருதை புறக்கணித்து உள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

வடஇந்திய மக்களுக்கு காலம் காலமாக இந்திய அரசு அதிக அளவில் விருதுகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டு வருகிறது . தென்னிந்திய கலைஞர்களை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது . ஆனால் இது குறித்து யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அதனால் தக்க சமயம் பார்த்து ஜானகி அம்மாள் இந்த விருதை புறக்கணித்ததின் மூலம் ஒட்டு மொத்த இந்திய ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் . இந்திய அரசின் வஞ்சகத்தையும் அம்பலப் படுத்தியுள்ளார் .

தமிழீழப் படுகொலையை நிறைவேற்றிய பின்னர் இந்திய அரசு கொடுக்கும் எந்த விருதுகளையும் தமிழக கலைஞர்கள் இந்திய அரசிடம் இருந்து பெறுதல் கூடாது . தன்மானமுள்ள எவரும் அந்த விருதை வாங்கக் கூடாது . இருப்பினும் பல தமிழகக் கலைஞர்கள் இந்திய விருதுகளை புறக்கணிக்காமல் அதை 2009 க்கு பிறகும் பெற்று வருகிறார்கள் .

இந்நிலையில் ஜானகி அம்மாள் இவ்வாறான புறக்கணிப்பை செய்திருப்பதை தமிழர்கள் நாம் மனமார பாராட்டுவோம் . இவரை பார்த்தாவது தமிழ்க் கலைஞர்கள் இந்திய அரசின் விருதுகளை புறக்கணிக்க வேண்டுகிறோம் . தன்மானத்தோடு தமிழர்களே புறக்கணியுங்கள் இந்திய அரசின் விருதுகளை .

புதன், 23 ஜனவரி, 2013

"வடக்கிருத்தல்"உண்ணாவிரதம் என்றால் சத்தியாகிரகத்தின் ஒரு போராட்டம் அதுவும் காந்திய வழி போராட்டம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் தமிழரின் தொல் மரபு "வடக்கிருத்தல்" என்ற பழக்கம் உண்டு. உணவை மறுத்து வடக்கிருப்பார்கள். அதை இன்று காந்தியவழி போராட்டம் என்று சொல்வது சரியா?

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதன், கபிலர், மற்றும் பாரி வள்ளல் என்று பலர் வடக்கிருந்து உயிர்விட்டவர்கள் இத்தனை பேரை பற்றியும் படித்த பிறகும் நாம் காந்தியவழி போராட்டம் என்று உண்ணாவிரதத்தை கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும்.

நன்றி - ஹரிஹரன்
நன்றி - தூய தமிழ்ச்சொற்கள்

சனி, 19 ஜனவரி, 2013

மல்லிகைப் பூமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்..!

மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நன்றி.
பசுமைப் புரட்சி 

தமிழீழ தேசியத்தலைவர்தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் கொழும்பிலிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலிச்சேவை மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவமானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் எவ்.எம் அலைவரிசையில் தைப்பொங்கல் தினமாகிய கடந்த திங்கட்கிழமை நிகழ்ச்சியொன்று ஒலிபரப்பாகியது.

“தமிழ் மக்களின் கலாசாரம் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுகின்றதா” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வாசகர்கள் தொலைபேசியூடாக கருத்துக்களைக் கூற அந்தக் கருத்துக்கள் நேரடியாகவே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.

இந்தநிலையில் வவுனியாவிலிருந்து தொடர்புகொண்ட பெண்ணொருவர் தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடுகள் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகிறது என்று கூறினார். தமிழ் மக்களில் அக்கறையுடைய நிர்வாகம் ஒன்று இல்லாமையாலேயே கலாசார சீரழிவுகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

பின்னர் வன்னியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலை செல்லும் வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவன் மாமரம் ஒன்றுக்கு அருகில் ஒழிந்து நின்று சிகரெட் புகைத்த போது அவ்வழியால் சென்ற சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவன் அங்கே வந்து அந்த இளைஞனை அடித்துள்ளார்.

அடிக்கும்போது “இந்த வயதில் சிகரெட் புகைக்கிறாயோ? பிரபாகரன் இல்லாத குணத்தைக் காட்டுகிறாயா? பிரபாகரன் இருந்தால் இன்று இப்பிடிச் செய்வாயா?” என்று கேட்டு அடித்துள்ளார்.

அதாவது பிரபாகரன் இருந்தால் வன்னி உட்பட தமிழர் தாயகத்திலுள்ள யாருமே சீரழிவுக்கு உள்ளாகமாட்டான் என்பதை ஒரு சிங்கள இராணுவ வீரனே அறிந்து வைத்திருக்கின்றார்.

அந்தளவுக்கு தலைவரின் ஆட்சியில் கலாசார சீரழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இன்று அவை கட்டுக்கடங்காமல் செல்கின்றன என்றும் அந்தப் பெண் வானொலி அலைவரிசையில் கருத்து தெரிவித்தார்.

இதைக் கேட்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வாயடைத்து நின்றனர்.

குறித்த பெண்ணின் உரையாடலை வானொலிகளில் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தேசியத்தலைவரின் வீரத்தை மனதுக்குள் மெச்சினர்.
நன்றி
தூய தமிழ்ச்சொற்கள்

புதன், 16 ஜனவரி, 2013

முதல் மாதமும் முதல்வர்களும்

தை முதல்
16
பதினாறைப் போற்றுதூம் பதினாறைப் போற்றுதூம்
பார்ப்பணியத்தின் கருத்துகளை களைந்தெடுத்தவர் 
வள்ளுவர்
பார்ப்பணியத்தின் சொல்லைக் களைந்தெடுத்தவர் 
தேவநேயப்பாவாணர்
பார்ப்பணியத்தின் செயலுக்கும் அவர் வழிவந்த ஆரியத்துக்கும் அதன் அடக்கு முறைக்கும் தீ வைத்தவர் 
கேணல் கிட்டு

பிரணவ் கல்யாண்அமெரிக்க கம்ப்யூட்டர் தேர்வில் தமிழக சிறுவன் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளான். இவனது தந்தை ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை பாலமேடு பகுதியை சேர்ந்தவராவார். இந்த சிறுவன் குறித்த விபரம் வருமாறு:-

மதுரை ஜல்லிக்கட்டு புகழ் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் வேலைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு அமெரிக்கன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது மகன் பிரணவ் கல்யாண். அங்கு உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

3 வயது இருக்கும் போதே கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கினான். இவனது ஆர்வத்தைக் கண்ட கல்யாண்குமார் கம்ப்யூட்டர் பற்றிய பல நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏ.எஸ்.பி. மற்றும் என்.இ.டி. என்ற ப்ரீ வெப் புரோக்ராம் என்ற தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வு, ஒருவரின் புத்தி கூர்மை மற்றும் திறனாய்வு ஆகியவற்றை சோதிக்கும் விதமான பகுதிகளை உள்ளடக்கியது.

2 மணி நேரத்துக்கான இந்தத் தேர்வில் 40 முதல் 90 கொள்குறி வகை வினாக்கள், டிராக் அன்ட் டிராப், மற்றும் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி., ப்ரீ வெப் புரோக்ராமை பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ்., ஜாவா ஸ்கிரீப்ட்டுகளுடன் வெப்சைட்டுகளை உருவாக்குவது தொடர்பான கேள்விகளும் உண்டு.

இந்த தேர்வில் உலக அளவில் சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்தான். சாதனை படைத்த அந்தச் சிறுவனைப் பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், அவனுக்கு, உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தது.

இதுபற்றி சிறுவன் பிரணவ் கல்யாண் கூறுகையில், என்ஜினீயர் மணிவண்ணன், கணித ஆசிரியை நதியா, சதீஷ், ஜோனாதன் உட்பரி ராஜேஷ் போன்றோர் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்ததால் இந்த சாதனையை செய்ய முடிந்தது என்றான்.

பிரணவின் தந்தை கல்யாண்குமார் கூறுகையில், எனது மகன் 6 வயதிலேயே கம்ப்யூட்டர் புரோக்ராம்கள் எழுத ஆரம்பித்து விட்டான். நான் அவனை மைக்ரோ சாப்ட் சர்டிபிகேட் வாங்க ஊக்குவித்தேன். இந்த இளம் வயதில் உலக அளவில் அவன் சாதித்தது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர் ராஜேஷ் கூறுகையில், ஏ.எஸ்.பி., மற்றும் என்.இ.டி. வெப் புரோக்ராம்கள் அமைப்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் பிரணவ் போன்ற 9 வயது சிறுவனுக்கு இது கடினமே. அவனிடம் உள்ள தனித்திறமையால் இந்த சாதனையை அவனால் செய்ய முடிந்தது என்றார்.

சிறுவன் பிரணவின் தாத்தா மோகன் (70) கூறியதாவது: பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு என்ற பரபரப்புகளுக்கிடையில் எனது பேரனின் இந்த உலக சாதனையை கேள்விப்பட்டு எங்கள் குடும்பமே உற்சாகத்தில் திளைத்திருக்கிறது. நான் மதுரையில் 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துள்ளேன். மதுரை பஸ் நிலையத்தில் கைக்குட்டை விற்றிருக்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என் பிள்ளைகள் படிக்க உதவினேன்.

எனது 5 பிள்ளைகளில் கல்யாண்குமார் மட்டும் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் அமெரிக்கா சென்றான். இன்று அவளது மகனும் இளம் வயதில் உலக சாதனை படைத்திருப்பது கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
தமிழ்.களம் 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தைத்திருநாள்தோழமைகள் அனைவர்க்கும் என்னுடைய உளங்கனிந்த உழவர் திருநாள், தைத்திருநாள், தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நன்றி

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை மற்றும் அயலூர் இளைஞர்களால் வருடா வருடம் பட்டம் விடும் போட்டி நடாத்தப்படுவது யாவரும் அறிந்ததே.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வேவில் இளைஞர்களால் கட்டப்பட்ட 35 அடி 3 அங்குலம் கொண்ட இராட்சத பட்டம் பொங்கலை முன்னிட்டு வானில் பறக்க விடப்பட உள்ளது.

இளைஞர்கள் பலரதும் கூட்டு முயற்சியினால் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு உள்ள இந்தப் பட்டம் உருவாக்கப்படுள்ள.


செவ்வாய், 8 ஜனவரி, 2013

பனை


நன்றி

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus)  என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2௩ மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2௩ மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 ௰ அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .

பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை 100 ௨00 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

சனி, 5 ஜனவரி, 2013

வெங்கடபதி


நன்றி

விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!

பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் செல்கிறார்.

வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கினால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசோம்கள், மரபணு மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.

''விஞ்ஞானத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?''

''ஆர்வம் எல்லாம் இல்லை. நிர்பந்தம். பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். முப்போகம் பண்ணினோம். ஆனா, உழவன் கணக்குப் பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதுங்கிறது ஒருநாள் எனக்கும் நேர்ந்துச்சு. ஊரைச் சுத்திக் கடன். தற்கொலை முடிவுக்கே வந்துட்டேன். கடைசியா ஒருமுறை வேளாண் துறை ஆளுங்களைப் பார்த்து யோசனை கேட்டுப் பார்ப்போம்; ஏதாவது வழி கிடைக்குமானு கிளம்பினேன். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநரா இருந்த சம்பந்தமூர்த்தியைச் சந்திச்சேன். மலர் சாகுபடி நல்ல வருமானம் தரும்னு சொன்னார். நெல்லை விட்டுட்டு, டெல்லி கனகாம்பரத்தைக் கையில் எடுத்தேன். நல்ல ஈரப்பதம் வேணும் அது வளர; சீதோஷ்ண நிலை 23 டிகிரியைத் தாண்டக் கூடாது; இங்கே எல்லாம் வளர்க்கவே முடியாது. ஆனா, வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்ன செய்யலாம்? அப்பதான் விஞ்ஞானத்தை வரிச்சுக்கிட்டேன்.''

''அயல் மகரந்தச் சேர்க்கை, மரபணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?''

''அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, ஒரு விஷயம் தோணுச்சுன்னா, அதை யார்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட போய்டுவேன். உயர் ரக மலர் உற்பத்தியில் ஜெர்மனிக்காரர்கள் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மனி அமைச்சர் ஒருத்தர் 'இந்தியாவுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு பேசியிருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் தொடர்பா எனக்கு உதவணும்னு கேட்டேன். அவர் ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு, திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.

ஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யா வைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம் பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு 'அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான் பூக்கும். அதுவும் பத்து மணி நேரம் கூடத் தாங்காது. ஆனா, 'அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும். இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம் 200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.''

''இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற என்ன செய்ய வேண்டும்?''

''இந்திய விவசாயிகளோட பெரிய எதிரி அறியாமைதான். எல்லாத் தொழில் லயும் இருக்குறவங்க எவ்வளவோ கத்துக்குறாங்கள்ல, விவசாயிகளுக்கும் அது பொருந்துமா இல்லையா? ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோமே... ஆனா, நவீன விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவசாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா? அவன் சொட்டுநீர்ப் பாசனம் செய்யுறான். நம்ம விடுற தண்ணியில நூத்துல ஒரு பங்கு தண்ணியில் நம்ம போடுற ரசாயன உரத்துல பத்துல ஒரு பங்கு உரத்தைக் கலந்து சொட்டுச்சொட்டா தண்ணீர் பாய்ச்சுறான். எனக்குத் தெரிஞ்சு உலகத்துல தண்ணியை நம்ம அளவுக்கு மோசமா எந்த நாட்டு விவசாயியும் பயன்படுத்தலை. தண்ணீர் கூடுதலா இருக்குறதாலதான் விஞ்ஞானம் இங்கே வேலை செய்ய மாட்டேங்குதுனு நெனைக்கிறேன். தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும். புது தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும். முக்கியமா விஞ்ஞானத்தை மிஞ்சினது எதுவும் இல்லைங்கிறதை உணரணும்!''

தமிழ் எழுத்து பிறந்த கதை


தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

!!~ இராஜேந்திரன் தமிழரசு ~!!

வீரமுனை படுகொலை


நன்றி
ஈழ மகான் தமிழ்

அம்பாறை வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் நாளை அனுஸ்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் உணர்வு ரீதியாக நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990௮௧2 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இன அழிப்பின் உச்சமாக 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் முகமாக 22 ஆவது ஆண்டு நிறைவு நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்த துர்சம்பவத்தை நினைவு கூர்ந்து வீரமுனை மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயச் சந்தியில் நினைவுத் தூபியொன்றை அமைத்துள்ளனர்.

1954 முதல் 1990 வரை இதே வீரமுனை மக்கள் பல காரணிகளாலும் இம்சைப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் 1990 ஆண்டு காலத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணமல் போயிருந்தனர்.

1990௮௧2 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை ஆகிய பிரதேச மக்களில் சுமார் 55 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் பல விசாரணைகள் நடைபெற்ற போதும் அது குறித்து சரியான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவோ இல்லை.

இதே போல் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்றதுடன், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன், ஆலயம் போன்ற இடங்களிலிருந்த அகதி முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

அத்துடன் பயணங்களின் போதும் வேறு இடங்களில் வைத்தும் பல தமிழர்கள் கடத்தப்பட்டுமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

தமிழ் இலக்கியங்களில் ஓசோன்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன் !.

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா - 365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர
தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒரு கை,

"விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று
திருமுருகாற்றுப்படை (107) யிலும்,

"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்" என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும் !.அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும் பரவ வழிவகை செய்ய ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும் !.

தமிழும் சித்தர்களும் 

புதன், 2 ஜனவரி, 2013

யாளியாளி - ஒரு புரியாத புதிர் ! 

தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!!!
நன்றி

வெந்தயம் – கீரை


நன்றி

தெரிந்துகொள்வோம் - வெந்தயம் – கீரை

ஆங்கில பெயர் -Fenu greek seeds

தாவரப்பெயர் :- TRIGONELLA FOENUM GTAECUM.

தாவரக்குடும்பம் :- FABACEAE.

பயன் தரும் பாகங்கள் :- இலை தண்டு, விதை முதலியன.

வளரியல்பு :-

இதன் தாயகம் கிழக்கு ஐரோப்பா மற்றும் எத்தியோப்பியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெந்தயம் அதிகமாகப் பயிரிடும் நாடுகள் இந்தியா, பாகீஸ்தான், நேபாள், பங்களாதேஷ், அர்ஜென்டினா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, மொராக்கோ மற்றும் சைனா. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வெந்தயத்தை வீடுகளில் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். தண்ணீர் அதிகம் தேங்கக்கூடாது. கடல் கரை சார்ந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளர்கிறது. நன்சை நிலத்திலும் புன்சை நிலத்திலும் வளரும். இதற்கு வெய்யிலும் தேவை. இது ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்..
இதன் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன்படுத்தலாம். பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதை தான் வெந்தயம்.

இது மூன்று மாதத்தில் வளரக்கூடியது. இந்தச் செடியை ஆதிகாலத்தில் மாட்டுத்தீவனமாகவும் பயன் படுத்தினார்கள். சமையல் மற்றும், மருந்தாகவும் பயன் படுகிறது.

மருத்துவப்பயன்கள் :

* பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

* 5 கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

* வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைந்து விரைவில் ஆறும்.

* வெந்தயப்பொடியை ஒரு தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

* இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரழிவு நோயின் வீரியம் சிறிது சிறிதாக குறையும்.

* தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருத்தரிக்காது.

* முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலைகுளித்து வர பலன் கிட்டும்.

* முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் பூசி கழுவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

வெந்தயக்கீரை.

* வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

* வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

* வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

* வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.

* வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடைய வாய்ப்பு இருக்கிறது.

* வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தய அல்வா

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். நெய்யை விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வெந்தயத்தை அவசியம் உங்கள் வீட்டில் தொட்டிகளில்/பிளாஸ்டிக் சாக்கில் விதைத்து வளர்த்துவாருங்கள்...கீரையை தொடர்ந்து உட்கொண்டு பலன் பெறுங்கள் !

உளுந்தூர்பேட்டை இளைஞர்கள்

நன்றி

உளுந்தூர்பேட்டை இளைஞர்கள் சாதனை: வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்

தமிழகத்தில் தற்போது மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் மின்சார தேவைகளுக்கு ஜெனரேட்டர் மற்றும் “இன்வெட்டர்” ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் மின்சாரத்திற்கு பதிலாக மண்எண்ணை விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6 ஆயிரம் செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீடுகளில் மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். சுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியன் படித்துள்ளார். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து மின் தட்டுப்பாட்டை போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்காததால் அதையும் தாங்களே உற்பத்தி செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி., பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினார்கள். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது.

அதிலிருந்து ஒரு மின் கம்பி கொண்டு வந்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது. அதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தை கொண்டே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின்கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்தி வருவதால் இந்த மாதம் ரூ. 200 மட்டுமே மின்கட்டணம் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இன்வெட்டர், ஜெனரேட்டர், சோலார் என பல்வேறு சாதனங்களை வாங்கினால் அதிக அளவு செலவு செய்ய வேண்டிய நிலையில் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து குறுகிய இடத்தில் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து வருகின்றார்கள். இதை அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தலாம் என கூறுகிறார், ராமு.

மேலும் கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப்பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கிறார். இதற்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் இதை அதிக அளவு தயார் செய்ய முடியவில்லை என்றும் இதற்கு தேவையான பொருட்களை தனியார் நிறுவனங்கள் செய்து கொடுத்தால் அதிக அளவு உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் கூறுகிறார்.

சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

நமது தொல்லியல்


நன்றி

இந்தியா மற்றும் தமிழகம் வரும் தமிழியல் ஆர்வலர்களுக்கு

கடலை வேலியாக கொண்ட மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளை அடிப்படையாக கொண்டு அதன் நடுவில் வாழ்ந்து ,முறைப்படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கை முறையை கொண்ட நாகரிக மக்கள்

அவர்கள் இயற்கையை புரிந்துகொண்ட ,

அதை உலகிற்கு இரு வழிகளில் ( நிலம் & கடல் ) உலகிற்கு பங்களிப்பை அளித்து உலக நாகரிகங்களில் அதன் பண்பாடு மற்றும் மொழிகளில் இருப்பதை

உலக அறிஞர்கள் மிகவும் பொறுமையாக ஏற்று கொள்ள தொடங்கும் இந்த காலத்தில்

தமிழியல் தொன்மை குறித்த கருதுகோள்களை கூட பன் முக பார்வைகள் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் மறுக்கும்

நம் சமுக கல்வி புல குழுமங்களில் நடுவில்

உங்களை போன்ற தமிழியல் ஆர்வம் கொண்டவர்கள்

1956 கு பிறகு பிரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொண்ட மாநிலத்தில் , மெட்ராஸ் மாநிலம் என்ற மாநிலத்தை அதற்க்கு 12 வருடங்களுக்கு பிறகு பல போராட்டங்கள் செய்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு மணிப்ரவாள முறையை மாற்ற முயற்சி செய்து இன்று வரை இருமொழி கலந்து நாம் பேசினால் தான் மக்களுக்கு புரியக்கூடிய சூழலும்

மறுபுறம் நமது தொல்லியல் சின்னங்கள் , பழங்கற்கால தடயங்கள் ,குகை பாறை ஓவியங்கள் ,கல்வெட்டுகல் ,செப்பேடுகள்,பானை ஓடுகள் ,ஓலைசுவடிகள் ,நாட்டார் வழக்கியல் ,பழங்கால வீடுகள் ,உணவு முறைகள் , கடலியல்தரவுகள் ,பண்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக

உலகமயமாக்கல் வளர்ச்சியால் அழிக்க பட்டு வரும் நிலையில் ,

வளர்ந்த நாகரிக மக்களின் அறியான்மை தன்மையால் மற்றவர்களையும் அவர்கள் மாற்றும் தன்மை உள்ள நிலைமைக்கு தள்ளப்பட்டு

மேலை நாட்டு அறிஞர்களுக்கு உள்ள சூழல் இங்கு தொன்மையை தேடுபவர்களுக்கு இல்லாத நிலையும்

உலக தரம் என்று சொல்லக்கூடிய கட்டுரைகளையும் அதற்கான வழிமுறைகளையும் , மேலை நாட்டினருடன் இணைந்து நாம் செயல் படக்கூடிய சூழல்களையும் உருவாக்க இந்தியா வரும் தமிழ் ஆர்வளர்கள தங்கள் பயணத்தில் உருவாக்க வேண்டும்

அறிவியல் உலகம் அறியாத பல தரவுகள் நாம் காணும் மக்களிடம் இன்றும் அமைதியாய் இருக்கிறது

தமிழியல் தரவுகள் உலகமெங்கும் கடல் மூலம் பரவி உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழின் தொன்மையை தமிழ் நாட்டில் மட்டும் தேடக்கூடாது

இந்தியா மற்றும் உலகமெங்கும் தேடவேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளதை

இன்று இணையம் துணைகொண்டு தேடுபவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளது.