கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

தமிழாசான் பதிவேடு விருது 2019

இவ்வாண்டு முதல் தமிழாசான் விருது தமிழ்ச்செயப்பாளருக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளோம். அதை முன்னிட்டு பத்து விருதுகள் திருவள்ளுவராண்டு ௨0௫0 (2050) 01.01.2019 அன்று வழங்கப்பட்டது.
௧) தமிழாயருக்கான விருது இரமேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௨) செந்தமிழ் வாணருக்கான விருது சாந்தக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௩) சிறந்த தமிழாசியருக்கான் விருது வனிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௪) கலைவாணருக்கான விருது சுதன் அவர்களுக்கு வழங்கப்பது.
௫) தலைக்கோல் விருதுகள்  சமந்திக்கும் சப்தகிக்கும் வழங்கப்பட்டன.
௬) தற்காப்புக்கலைர் சாதனையாளருக்கான விருது சிவகணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௭) சிகரச்செல்வருக்கான விருது தாரகன் பாவலன் கோவேரன் மூவருக்கும் வழங்கப்பட்டன.

வருகிற ஆண்டு முதலாம் நாள் 2020 விருதுக்காய் காத்திருங்கள்

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

நோர்வே நாடும் இயற்கையும்( Noreg og Natur )

நானிலதில் ஒன்றான குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த நிலனும். நோர்வே நாட்டுப் பெயர் சேர்மன் சொல்லில் இருந்து வடக்கே செல்லும் வழி என்றானது.தலை நகரம் ஓசுலோ. ஓசுலோ என்பதன் விளக்கம் வெண்படலம் அல்லது தேவதை இருப்பிடம். இங்கு தேவதைகள் மட்டுமல்ல மாந்தர் வாழத்தக்க நல் மனித நேய நாடு. இந்நாட்டின் சிறப்பு அமைதி. மலைத்தொடரைக் கொண்ட மேட்டூர்.
பார்வைக்குச் சில படங்களுடன் பயணக்குறிப்பு.

சாய்வுச்சி( Galdhøpiggen)
தழை எடுத்துத் தங்கிவிட்டு மறுநாள் காலை திறப்பை உரியவித்தே வைத்துவிட்டு உரிமையாளரிடம் அதற்கான தகவைக் கொடுத்துவிட்டு பதினொன்றரை மணியளவில் மலைக்குப் புறப்பட்டோம். நீண்ட ஊர்திப்பணம். மலையுச்சியின் உயரம் 2683 மீற்றராகும். ஊர்தியில் சென்று அங்குள்ள தழையில் தங்கி காலையிலேயே புறப்பட வேண்டும் மலையின் உச்சியைத் தொட்டு வர குறைந்தது ஒன்பது மணி நேரம் தேவை.இம்மலையின் உச்சியில் பனி சூழ்ந்துள்ளது அதனால் மலையில் ஏறுவோரின் உதவியோடே ஏறவும் வேண்டும். ஏறுவதற்குரிய அனைத்து ஏந்துகளையும் கொண்டு செல்ல வேண்டியது அகத்தியமாகும். அழகான இயற்கை. காலநிலை மாற்றத்தால் பனி உருகும் நிலை ஏற்பட்டிருப்பது கவலையே. கவுத்தா உச்சி (Gausthatoppen)


அத்லாந்திக்கு தீவுகளின் பாதை
(Atlantiskvei)உச்சிவிளிம்பு (Bessenggen)


அமைதியிருக்கை
(Preikestolen)
சனி, 3 ஜூன், 2017

கவிக்கோ எனும் அப்துல்ரகுமான்அப்துல்ரகுமான்
வைகறையும்
அந்தியுமான
அழகிய
வான்
அந்த
வானை
அடைய
விண்கலமேறிச்
சென்று
கொண்டிருந்தாலும்
போய்க்கொண்டிருக்கும்
முடிவின்றி
தொடுவானமாய்
_  முட்டைவாசிகன்_

புதன், 8 பிப்ரவரி, 2017

இராவண காவியம்

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஈடிணையல்லாப் புகழ் காவியம் தான் இராவண காவியம். கம்பனிடமும் இல்லாத கலைசொல்வடிவம். ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு காலத்தில் புரட்சியின் அடிப்படையாய் அமைந்தவை. இருபதாம் நூற்றாண்டுப் புரட்சியிலே மலந்தது தான் இராவண காவியம்.இக்காவியத்தை இந்தியா தடை செய்துள்ளது. பார்ப்பணச்சூழ்ச்சிக்குள் சிக்குண்ட காந்தியாலும் பார்ப்பனரை எதிர்த்து ஐக்கிய இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வாங்கித்தர முடியவில்லை.இந்தியச் சுதந்திரம் வெறுமனேபார்ப்பன பார்ப்பணச் சுதந்திரமே அன்றி மக்கள் சுதந்திரமன்று என்பதை உணர்ந்த பெரியார் மாற்றம் வேண்டி பெரும் புலவர் பலரைத் தேடினார் கிடைத்தது ஏனோ "உண்டதைக் கக்கும் கூட்டம் தாம்" அந்த புலவர்களியே முற்றிலும் எளிமையாய் பெயரிலும் குழந்தையாய் அமைந்த புலவர் தாம் புலவர் குழந்தை எப்பொழுது கேள்விகேட்கும் சுயமரியாதைக்காரர் தமிழகத்தில் பார்ப்பன சாதித்துவக் குப்பைக்குள் முற்றிலும் வேறுபட்ட போக்கில் ஒரு குன்றிமணி அயோத்திய தாசரை அடியொற்றிய அம்பேக்கரை சற்றுக் கவனித்தார் பெரியார் தமிழகத்தில் புத்துயிர் பிறந்தது. அப்புத்துயிர்ப்பில் பிறந்தது இராவண காவியம்.புலவர் குழந்தையின் அவையடக்கம்

"ஏசு வார்சிலர் ஈதுண்மை யேயெனப்
பேசு வார்சிலர் பேச எதிர்மனம்
கூசு வார்சிலர் கூக்குர லார்சிலர்
மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே!

தமிழகத்தையும் தமிழீழத்தையும் நன்கு உணர்ந்ததாலேயே இவ்வரிகள் பனுவலாய் விரிந்தது.

"ஆயிரம் முகத்தால் அகன்ற தாயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே"
என்ற பழம் பாடலுக்கு இண்டையாய் பாயிரத்தில் அமைந்த முதல் பாடல் தமிழின் தொன்மையு தமிழர் வரலாறும் தொன்மையன்றோ

"உலகம் ஊமையா வுள்ளவக் காலையே
பலகலைப் பயன் பாங்குறத் தாங்கியே
இலகி இன்றுநான் என்னும் மொழிக்கெலாம்
தலைமையாம் தமிழ்த் தாயினைப் போற்றுவாம்"

காவிய மீள் பார்வை........

ஞாயிறு, 13 நவம்பர், 2016

போசினியா முக்கோணக் கோபுரங்கள்

உலகில் மிக அதிசயத்தக்க கோபுரத்தை போசினிய பழங்குடி மக்கள் அமைத்துள்ளனர். இது உலகின் மிகத்தொன்மையான  சான்றாக இன்று கிடைத்துள்ளது.கீழடி தமிழகத்தின் வராலாறு போல். எகித்து பெருமிடு அறிவியல் தொன்மைபோல் சுமேரியம் மொழியியல் ஆவணம் போல் போசினியம் உலகின் மிகப்பேணவேண்டிய தொல்சான்று.