கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 31 டிசம்பர், 2015

கலித்தொகை

தொல்காப்பியம் நீண்ட நெடித்த மாந்தனியலைக் கற்பிக்கும் நூல் திருக்குறளும் தொல்காப்பியமும் அறனை முன்னிறுத்தும் தமிழகம் ஈய்ந்த பெட்டகங்கள். முன்னையது வாழ்வை இயம்பிய நூல் இரண்டாவது வாழ்வை நெறிப்படித்திய நூல் இரண்டும் இலக்கண இலக்கிய நூல்களே! இவ்விரண்டும் உலகம் சார்ந்து உலக மக்களை முன்னிறுத்தி தமிழில் அமைக்கப்பட்டவை இவ்விரண்டும் வழிநூல்களே அல்லது தொகுப்பு நூல்களே என்று உற்றறிந்து கொள்க.இவ்விரண்டு நூல்களுக்கும் கருத்தியலில் நிறையவே ஒப்புமை உண்டு."முந்து நூல் முனைவர் கண்டவாறு".நாட்டார் பாடல்கள் உரைகள் கதைகள் பின் இது இப்படித்தான் நிகழும் என்றும் தொன்மைக்காதைகளால் மக்கள் வாழ்கை இலக்கியமாவதை ஆபிக்க குரங்கு காட்டுமிராண்டி மனித விலங்குகளில் இருந்து நாகு(நாகர்) எனப்பட்ட மாந்தர் அறிவு மாந்தராய் வலுப்பெற்றனர் எனலாம். ஓரிலக்கம் - பத்தாயிரம் - ஆயிரம் - நூறு என ஆண்டுகள் வளர்ச்சி பெற்று வள்ளுவருக்குப் பின் கரணத்தில் வாயிலாக வாழ்க்கை நெறிப்பட்டது. வள்ளுவம் - தொல்காபியம் - சிலப்பு என கற்பியல் பேணப்பட்டது தமிழர் குமுகாயத்தில் தான். வாழ்க்கை என்பது பொருண்மியம் அந்த பொருண்மியத்தைக் காக்க போராடும் திண்ணம் அதனால் ஏற்படும் கலி. ஒரு வாழ்க்கைத் திருத்தத்தையே காட்டிநிற்கிறது.

இனி கலிபற்றி தொல் காப்பு இயம் கூறுவதைப் பார்ப்போம்

துள்ளல் ஓசை கலியென மொழிப

கலித்தளை யடிவயின் நேரீற் றியற்சீர்
நிலைக்குரிய தன்றே தெரியு மோர்க்கே

அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி
இருநெடில் அடியுங் கலியிற் குரிய

எழுசீர் இறுதி யாசிரியங் கலியே

ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே
கொச்சகம் உறழோடு கலிநால் வகைத்தே

கலித்தொகையைத் தொகுத்தவர் மதிரை நல்லந்துவனார் . 
இவர் நல்லந்துவனார்  யார்? நல்லந்துவனார்  பிறப்பால் அந்தணர்(அம்+தண்+அர்) வசிட்டர் போன்றவரின் தண்மை போன்றே நீரின் குணத்தை ஒத்தவர்.

 "நல்லந்துவன் நெய்தல் கல்விவலார் கண்ட கலி"


 "கற்றறிந்தார் ஏத்தும் கலி"

மதுரை ஆச்சரியர் நல்லந்துவனார் கலித்தொகையை தொகுப்பதன் நோக்கம் என்ன? ஏன் இந்நூலைத் தொகுக்க வேண்டும். தொகுப்பதனால் ஏற்படும் விளைவுகள் எவை?

கலித்தொகைக்கு உரை எழுத்திவர் பேராசான் நச்சினிக்கினியர்

முனைவர் நல்லந்துவனார் மால் பத்தர். பின்னையவர் சிவபத்தர் அல்லது வேதபத்தர். மால் வழிபாடு ஆகமத்திலும் சிவ வழிபாடு வேதத்திலும் நிறைந்தன. பெண்ணை வழிபடுதல் கங்கைக்கு இப்பாலும் ஆணை வழிபடுதல் கங்கைக்கு அப்பாலும் காணலாம். திரு பெண்ணைக் குறித்ததும் பெரு ஆணைக்குறித்தலும் மரபு. பின்பு உள்ள காலத்தில் திரு ஆணையும் குறித்தது.பெரு, திரு இரண்டும் இணைந்து பெரியோன் திரு என்றாகி திருமான் திருமால் என்றழைக்கப்பட்டான்.வீற்றியிருப்பவன் - வீற்றினன் - விட்ணன் - விஷ்ணன் - விஷ்ணு என்றைக்கப்பட்டான். பாற்கடலில் வீற்றியிருப்பவன் அதாவது பால் மண்டலத்தில் வீற்றினன்.சிவனுக்கும் பெரியோய் சிவனையும் இயக்குபவன். சிவனின்றி சத்தியில்லை சத்தியின்றி சிவனுமல்ல. இதிகாயத்தின் தொடக்கமும் இதுவே!இவையின்றி உலமும் இயங்குவது அரிதே!
அகர முதல எழுத்தெல்லாம் மாதி
பகவன் முதற்றே வுலகு

வள்ளுவருக்கு பரிமேலழகர் நல்லந்துவனாருக்கு நச்சினாக்கினியர்.
வள்ளுவருக்கு நல்லந்துவனார்

கலித்தொகையை  எடுத்தாள்வதற்குரிய கரணியம்
கலியே வாழ்க்கை
1)பெண்ணியம் பாராட்டுதல்
2)தோழமை பாராட்டுதல்
3)மூத்தோரைப் பாராட்டுதல்
3)குடும்பம் பாராட்டுதல்
4)மாந்த நேயம் பாராட்டுதல்
5)உறுதி பாராட்டுதல்
6)சுற்றந்தாழால் பாராட்டுதல்
7)ஆண்மை பாராட்டுதல்
8)தம்மைப் பாராட்டுதல்
9)மரபு பாராட்டுதல்கடவுள் வழுத்து  1
ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்
கூறாமல் குறித்ததன் மேல்செல்லும் கடுங்கூளி
மாறப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி

படுபறை பலவியம்ப பல்லுருவம் பெயர்த்துநீ 
கொடுகொட்டி ஆடுங்கால் கோடுய ரகலல்குல்
கொடிபுரை நுசும்பினாள் கொண்டசீர் தருவாளோ
மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்றோள்
வண்டரற்றும் கூந்ததாள் வளர்தூக்குத் தருவாளோ

கொலையுழுவைத் தோலசைஇ கொன்றைத்தார் சுவற்புரள
தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முன்பாணி தருவாளோ

எனவாங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்றிவை
மாணிழை அரிவை காப்ப
ஆணமில் பொருளெமக்கு அமர்ந்தனை யாடி(1)

தரவு

ஆறறி அந்தணர்க்கு 
இறைவ!
ஆறு உறுப்புகளையும் அறியும் அந்தணர்க்கு,

நிருத்தம், வியாகரணம், கற்பகங்கள், கணிதம், பிரமம், சந்தம் இவ்வாறையும் அறியும் அந்தணர்

அந்தணர்
அழகிய கருணையை உடையவ
நிருத்தம்
உலகியல் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராய்வது.
வியாகரணம்
உலகியல் சொல்லையும் வைதிகச் சொல்லையும் ஆராயும் ஐந்திரம் முதலியவை
கற்பகங்கள்
பாரத்துவாசம், பரமார்த்தம், பரமாத்திரையம் முதலியவை.
கணிதம்
நாராயணீயம்,வராகம் முதலியவை
சந்தம்
எழுத்தாராய்ச்சியாகிய பிரமும் செய்யுள் இலக்கணமும்.


அருமறை பலபகர்ந்து
அரிவையான மறைகள் பலவற்றையும் நீ அருளினாய்.
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்
தெளிந்த நீரையுடைய கங்கையின் விரைவை அடக்கி அதனைச் சடையின் ஒரு பகுதியில் அடக்கினாய். மூன்று புரங்களில் தீயைச் செலுத்தினாய்
கூறாமல் குறித்ததன் மேல்செல்லும் கடுங்கூளி
மனத்தினால் எண்ணும் பொருளுக்கும் எட்டாமல் நிற்கும் கடிதான கூனியின் முதுகிடாத போரை உடையாய்.
மாறப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி
நீலமணி போன்ற கரிய கழுத்தை உடையாய். எட்டுத்தோள்களை உடையாய்.
இங்ஙனம் கண்ணுக்குப் புலனாய் நின்று இப்போது யான் கூறும் இதனையும் கேட்டருள்வாயாக.

தாழிசை

படுபறை பலவியம்ப பல்லுருவம் பெயர்த்துநீ 
(பேரொலி எழுப்பக்கூடிய நின் திருக்கைகளிலே இருக்கின்ற) பலபறை வாச்சியங்களையும் ஒலிக்கும் நீ கண்ணுக்குப்புலனாய்ப் பல வடிவங்களையும் மீண்டும் நின் திருவுருவிடத்தே அடக்கிக்கொள்கிறாய்

கொடுகொட்டி ஆடுங்கால் கோடுய ரகலல்குல்
கொடுமையான கொட்டி என்ற கூத்தை நீ ஆடினாய். ஆடிம் அக்காலத்தில் பக்கத்தில் இருக்கக் கூடிய மலைகள் போன்று உயந்துள்ள தோள்களையுடைய(அல்குல்-அது)

கொடிபுரை நுசும்பினாள் கொண்டசீர் தருவாளோ
கொடிபோன்ற இடையையுடைய உமையவளோ தாளம் முடித்துவிடும் காலத்தைத் தன்னிடம் பொருந்துய சீரைத் தருவாள்?(அவளே அளித்தருள் வேண்டும் ஏனென்றால் அங்கு வேறு ஒருவர் இல்லையே!)

தொடரும்.........


.

புதன், 30 டிசம்பர், 2015

கச்சிப்பட்டான்

பால் தெளிக்கு பல ஏக்கர் நிலமா? அப்போ செத்தவர் எத்தனை பேர்! பால் படுக்கைக்கு பக்கத்தில் உதிரப்படுகை குருதி ஆறாய் ஓடியது போல !! இதுவெல்லாம் திருப்புறம்பிய கொள்ளிடக்கரை அமைந்த இடம்.
இன்றும் வழிபாட்டுக்கு ஈட்டி,சூலம்,வேலும் நடப்பட்டுள்ள இடங்கள்.என்ன நம்ம ஆளு கொஞ்சம்,கொஞ்சமா சேர்த்துக்கிட்டது போக கும்பிடன்னு கொஞ்சம் விட்டு வைத்திருக்கிறார்கள்.நன்றி சொல்லனும்.ஆயிரம் வருஷ்மா வச்சிருக்கிறார்களே.அதில ஒரு திட்டு தான் அய்யனார் திட்டு.விளைஞ்ச வய காட்டு வரப்புல சாமத்தியமா நடந்தா ஊருக்கு மேற்கே கொண்டுபோய் விடும் இடம் தான் இந்த அய்யனார்த் திட்டு.உயர்நீதிமன்றம் வரை சென்று போராடும் சிங்காரவேலு பத்திரமாக வைத்திருக்கிறார்.அப்படியென்ன இந்த அய்யனார் திட்டுல.,எத்தனையோ மாவீரர்கள் குருதியால் நனைந்த இந்த மண்,கங்கர் மன்னன் முதலாம் பிருதிவிபதியையும் வீழவைத்தது.கருநாடகப்பகுதியை ஆண்டவர் கங்கர்,அவரு ஏன் இங்க வந்தார்? விதி,...அவர்கள் நாட்டிலிருந்து வரும் காவேரி மண்ணியாறாய் கொள்ளிடமாய் பிரிந்து ஓடும் மண்ணில் இதற்கு இடைப்பட்ட மண்ணில் வீழவேண்டும் என்று, அதை நான் எழுத நீங்க படிக்க...விதி.
வயக்காட்டின் நடுவே மூங்கில் தோப்பில் அய்யனாராய் வழிபடும் பள்ளிப்படையாகி அதை சதாசிவபண்டாரத்தார் கண்டு சொல்ல வேண்டும்...விதி.
கிபி 862-ல் அரிசிலாற்றாங்கறையில் (அசலாய் நம்ம இன்றைய அரசலாறு தான்) இவன் அப்பன் பராசக்ர கோலாகலப் பாண்டியனைத் தோற்றோட செய்த பின் அவனும் செத்து போக அவன் மகன் வரகுணபாண்டியனால் 18 ஆண்டுக்குப் பிறகு விழவேண்டிய நிலை இந்த முதலாம் பிருதிவிபதிக்கு வந்தது பல்லவனால் தான்.
என்ன செய்ய சோழப்பேரரசுக்கு அடித்தளம் போட்ட கணக்கு வழக்கு இங்கு தான் தொடங்குகிறது.
கச்சிப்பட்டான்( கச்சி என்பது காஞ்சியை அதாவது பல்லவரைக் குறிக்கும்,பட்டன் என்பது போரில் வீழ்ந்ததைக் குறிக்கும்) 

இவ்வாண்டு 2016

நத்தார் பிறந்த நாள் இவ்வாண்டு வெண்பனியில்லாமல் பிறந்தது. நத்தார் பாலனின் பிறந்தநாள் துருவக நாட்டில் எந்த பனித்துகள்களும் இல்லாமல் பிறந்ததின் செய்தி என்னவெனில் காலநிலை மாற்றமே. ஆண்டுகளுக்கு ஒருவிழுக்காடு பனி உருகுவதை உலகம் அறிந்திருக்கும் போழ்தும் அது பற்றிய அக்கறை இல்லாமல் உலக மயமாக்கல் சென்று கொண்டிருக்கிறது.இவாண்டோடு 15% பனி உருகியுள்ளது. முனைவர் அல்கோர் போன்றோர்கள் உலகத்தின் காலநிலை மாற்றம் பற்றி கூறியும் சில தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அமெரிக்கத்தின் வல்லாண்மைகரணியமாக பல மாற்றங்கள் ஏற்படலாம். அன்றியும் தொடர்ந்து வறுமையும் எளிமையுமே தோன்றும். உலகம் 2011 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றத்தையே நகர்த்துகிறது.புவியியல் மானுட சூழல் மாற்றம் இன்னும் நான்காண்டிலேயே நிகழும் என்பது திண்ணம்.