கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 25 டிசம்பர், 2013

நத்தார் புத்தாண்டுப் பிறப்பு

இயேசு பாலன் 25 ஆம் நாளன்று பிறந்தார் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. இனி இயேசு என்ற சொல் பற்றிப் பார்ப்போம் யூதர்களின் தலைவன் என்பதும் யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டவர் என்றும் உலகம் விளங்கிக்கொள்கிறது. சரி,
யூதாசு (யூதன்) - யூசசு - யேசசு - யேசு - இயேசு என்பதே இயேசு என்ற சொல்லின் பொருளாகக் கொள்ளலாம்.அதாவது யூதர்களின் தலைவன் என்பதாம்.
இயேசு 25 ஆம் நாளன்று பிறந்தார் என்பதற்கான சான்றுகளை கிறித்துவ நம்பிக்கையாளர் கூறிவருகின்றனர். 25ஆம் நாள் என்ன நடைபெறுகின்றது சூரியன் மறைந்து மீண்டும் ஒளி பரப்பும் நாள் 24,25,26 அவற்றுள் கூடிய நாளான 25ஆம் நாள் அமைதிக்கான நாளாகக் கொள்ளலாம்.அதுவே பாலன் பிறப்பு. இந்நாளில் இசுரவேலில் பதற்றம் நிலவியதாகவும் பல பாலர்கள் கொல்லப்பட்டதாகவும் இதனால் இசுரவேல் மன்னனால் இசுரவேலுக்கு கொடுவினை நடைபெறுமென்று புலவர் பலர் புலம்பியதும் அதனால் இசுரவேலரும் அவர்களுக்குக் காட்டிக்கொடுத்த யூதாசின் குடிகளும் நாட்டை இழந்து கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேலாக ஏதிலிகளாகவும் மேலைத்தேய மன்னர்களாலும் மக்களாலும் கொல்லப்பட்டவருள் கிட்டமட்ட அரைமில்லியன் மக்களுக்கு மேல் அடங்குவர்.

மேலும் விளக்கங்களை அறிய...,
http://ta.wikipedia.org/s/ad
நோர்வே நக்கீரா அனுப்பிவைத்த மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைத்த வலைக்கட்டுரை இவ்வாறு கூறுகிறது ஈண்டு கவனிக்க

கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல- டிசம்பர் 25ல் யேசு பிறக்கவில்லை- நிராஸ் டேவிட்
Published on December 23, 2013-1:19 pm தினக்கதிர் இணையத்தளத்திலிருந்து.
நன்றி தினக்கதிர்:(http://www.thinakkathir.com/?p=55239)
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு- ஆனால் நத்தால்; என்பது போர்த்துகீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல).

நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக்கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை.
கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தைத்தான் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள் – இப்படித்தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்.

ஆனால் அது உண்மை கிடையாது.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் கிறிஸ்மஸ் தினம் என்கின்ற பெயரில் கொண்டாடப்படுகின்ற பண்டிகை கிறிஸ்வர்களுக்கு உரியதொன்றே அல்ல என்பது பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்குக் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடிய கூற்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் அதுதான் சத்தியம். அதுதான் உண்மை.

அசுரன் என்ற தமிழ் அரசனை ஆரியர்கள் அழித்த நாளாக நினைவுகூறப்படுகின்ற தீபாவளி எப்படித் தமிழர்களுக்கு உரிய ஒரு கொண்டாட்டம் இல்லையோ, அதேபோன்றுதான் கிறிஸ்மஸ் என்கின்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகையும் கிறிஸ்தவர்களுக்கு உரிய ஒருபண்டிகை அல்ல.

கிறிஸ்மஸ் பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்வர்களுக்கு உரியது அல்ல என்பது மாத்திரமல்ல, அந்தப் பண்டிகையைக் கிறிஸ்வர்கள் கண்டிப்பாகக் கொண்டாடக் கூடாது என்றும் அடித்துக் கூறுகின்றார்கள் சில கிறிஸ்தவ ஆர்வலர்கள்.

இந்த விடயம் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை?

கிறிஸ்மஸ் தினத்தை கிறிஸ்தவர்கள் கொண்டாடக் கூடாதா? இது என்ன புதுக்கதையாக இருக்கின்றது? – இவ்வாறு சிலர் கேள்விகள் எழுப்பலாம்.
ஆனால் உண்மையிலேயே இயேசுக் கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதிதான் பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிறிஸ்வர்களின் புனித நூலான பைபில் கிடையாது. கிறிஸ்துவின் பிறப்புப் பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும், அவரது போதனைகள் பற்றியும், இயேசு செய்த அற்புதங்கள் பற்றியும், அவரது இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் விரிவாகக் கூறுகின்றன. கிறிஸ்தவத்தின் எழுச்சி , வளர்ச்சி கோட்பாடுகள் பற்றி அப்போஸ்தலர் நடவடிக்கை மற்றும் நிரூபங்கள் என்று சுமார் 10 புத்தகங்கள் கூறுகின்றன. ஆனாலும் இவற்றில் ஒன்றிலாவது இயேசுக் கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும்படியான எந்தவித ஆதாரமோ அல்லது தகவலோ கூட இல்லை.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், பைபிளை அடிப்படையாகவைத்து நோக்கும் பொழுது, இயேசுக் கிறிஸ்து டிசம்பர் மாதத்தில் பிறந்திருப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை என்றே சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இஸ்ரவேலில் டிசம்பர் மதம் என்பது மிகவும் குளிரான காலம். குறிப்பாக இரவு வேளைகளில் காலநிலை சாதாரனமாக 0 முதல் 7 டிகிரி வரையில் இருக்கும். பனி கொட்டுகின்ற சந்தர்ப்பங்களும் உள்ளது. அதனால் இஸ்ரேலில் மந்தை மேய்பவர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது – ஒக்டோபர் மாதத்தின் இறுதிக் காலம் முதல் மார்ச் மாதத்தின் ஆரம்பம் வரையிலான காலப்பகுதிகளில் தமது ஆட்டு மந்தைகளை இஸ்ரேல் தேசத்திற்கு புறம்பாக உள்ள பாலைவனங்களில் கொண்டுசென்று விட்டுவிடுவார்கள். அல்லது மலைக்குகைகள் மற்றும் வேறு கொட்டகைகளில் அடைத்துவைக்கும் வசதி படைத்தவர்கள் அவ்வாறு தமது மந்தைகளை அடைத்துவைத்துப் பேணுவார்கள். இரவு வேளைகளில் நடுநடுங்கும் குளிரில் வெட்டவெளியில் தமது மந்தைகளை மேய்த்துக்கொண்டு சாகடிக்க முயலமாட்டார்கள்.

அப்படி இருக்க, இயேசுக்கிறிஸ்து பிறந்த பொழுது நள்ளிரவு வேளையில் மந்தை மேய்ப்பவர்கள் வயல்வெளியில் தங்கி தமது மந்தைகளைக் காத்துக்கொண்டிருந்ததாக பைபிளில் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்புப் பற்றி எழுதிய வைத்தியரான லூக்கா, தனது பதிவின் 2ம் அதிகாரம் 8ம் வசனத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இயேசுவின் பிறப்பு நிச்சயமாக டிசம்பர் மாதத்தில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அத்தோடு, இயேசு பிறந்த காலத்தில் நாடு முழுவதும் குடிசனப்பதிவு இடம்பெற்றதாகவும் அந்த குடிசனப்பதிவு நடைபெறும் நேரத்தில் அனைத்து பிரஜைகளும் தங்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லவேண்டி இருந்ததாகவும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை காலங்களில் அல்லது குளிர் காலங்களில் பொறுவாக இதுபோன்ற குடிசன மதிப்பீடுகளைத் தவிர்க்கும் வளக்கம் இருந்ததால் டிசம்பர் மாதத்தில் இயேசுவின் பிறப்பு இடம்பெற்றிருக்கச் சாத்தியம் கிடையாது என்று பல பைபிள் சரித்திர ஆராய்சியாளர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். அத்தோடு இயேசுவேடு இருந்தவர்கள் இயேசுவின காலத்தில் வாழ்ந்தவர்கள், இயேசுவின் சீடர்கள், இயேசுவைப் பின்பற்றியவர்கள் என்று எவருமே இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக பைபிளில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
அப்படியானால் டிசம்பர் காலப்பகுதியில் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் என்ற விவகாரம் எப்படி ஆரம்பமானது? ஏன் ஆரம்பமானது? யாரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது?
இந்தக் கேள்விகளுக்கான பதில் பலருக்கும்- குறிப்பாகக் கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

சூரியப் புதல்வன்

இற்றைக்கு 3000 வருடங்களுக்கு முன்னரேயே – அதாவது இயேசுக்கிறிஸ்து பிறப்பதற்கு பல நாறு வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே டிசம்பர் 25ம் திகதி ஒரு மிகப்பெரிய கொண்டாட்டதினமாக இருந்து வந்தது – ரோமர்களுக்கு.

ரோமர்கள் ஷமித்ரா| அல்லது சதுமாலியா(Saturnalia) என்ற தமது முக்கிய கடவுளின் பிறப்பினைக் கொண்டாடுகின்ற ஒரு தினமாகவே அந்த நாள் இருந்துவந்தது. மித்ரா என்பது சூரியப் புதல்வன். அந்த சூரியப் புதல்வன் வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி பிறப்பார். அந்தத் தினத்தை ரோமர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதி என்பது மிக மிகக் குறுகிய பகலைக் கொண்ட ஒரு தினம் என்பது எம் அனைவருக்கும் தெரியும். அதாவது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23ம் திகதியில் சூரியன் வெகு சீக்கிரமாகவே அஸ்தமித்துவிடும். ஐரோப்பாவில் அன்றைய தினத்தில் 4 மணிக்கெல்லாம் இரவு வந்துவிடும். சூரியனை இருள் கொலை செய்துவிடுகின்ற தினமாக நினைத்தார்கள் புராதன ரோமர்கள். சூரியனின் புதல்வனான மித்ரா மீண்டும் பிறக்கின்ற தினமாக புராதன ரோமர்களால் அடையாளப்பட்ட தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தினத்தில் ரோமர்களிடையே கொண்டாட்டங்கள் மிகப்பலமானதாக இருந்தது.

இயேசு பிறந்த காலப்பகுதியில் தற்போதைய இஸ்ரேல்தேசம் ரோமின் ஆழுகையின் கீழேயே இருந்தது. இயேசுவின் இறப்பு, உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து கிறித்தவம் மும்முரமாகப் பரவிய அனேகமான நாடுகள் ரோமாபுரியின் ஆட்சியின் கீழேயே இருந்துவந்தன. எனவே டிசம்பர் 25ம் திகதி ரோமர்களது மித்ரா பிறப்பின் கொண்டாட்டங்கள் ஒரு கலாச்சாரமாக, சம்பிரதாயமாக ஆதிகாலக் கிறிஸ்தவம் பரவிய அனேமான நாடுகளிலும் இருந்துவந்தது.

டிசம்பர் 25ம் திகதிக் கெண்டாட்டத்தின் உண்மையான வரலாறு இதுதான் என்பதை பல ஆராய்சியாளர்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் அதேவேளை உலகில் உள்ள அனைத்து Encyclopediaக்களும்- குறிப்பாகThe Catholic Encyclopediaகூட இயேசுக்கிறிஸ்து டிசம்பர் 25ம் திகதி பிறக்கவில்லை என்பதை வெளிப்படையாக, தெளிவாக உறுதிபடக் கூறுகின்றன.
அப்படியானால் டிசம்பர் 25 இல்தான் இயேசு பிறந்தார் என்ற கதையை யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்?

டிசம்பர் 25
கி.பி. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமாபுரியில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. ஆதிக்கிறிஸ்வர்கள் மறைந்து மறைந்தே தமது மத நடவடிக்கைகளை நிறைவேற்றி வந்தார்கள். ரோமர்கள் டிசம்பர் காலத்தில் தங்களுடைய ஷமித்ரா| தெய்வத்தின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக தமது வீடுகளை அலங்கரித்து, பரிசில்களைப் பரிமாறி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பொழுது ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்குப் பெரிய தர்மசங்கடம் உண்டானது.

அன்னிய தெய்வங்களுக்கு என்று நடாத்தப்படும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் முடியாது – ஏன் என்றால் அது ஒரு விக்கிரக ஆராதனை. அதேவேளை அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருக்கவும் முடியாது – ஏனென்றால் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்பதை ரோம ஆட்சிக்கு அடையாளம் காண்பித்துவிடும். கொலை செய்யப்பட்டுவிடுவார்கள்
எனவே ஒரு காரியம் செய்தார்கள். டிசம்பர் காலக் கொண்டாட்டங்களின் பொழுது மற்றைய ரோமாபுரி மக்களைப் போலவே ஆதிக்கிறிஸ்தவர்கள் தாமும் தமது வீடுகளை அலங்கரித்தார்கள். ஆனால் அவர்கள் கொண்டாடியது

அன்னிய தெய்வப் பிறப்பை அல்ல. மாறாக அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூர்ந்தார்கள்.

இயேசுவின் பிறப்பு டிசம்பரில் நிணைவுகூறப்படத் தொடங்கியது இப்படித்தான். கால ஓட்டத்தில் ரோமாபுரி முழுவதுமாக கிறிஸ்தவ தேசமாக மாறி, கிறிஸ்தவ மதம் ரோமின் உத்தியோயபூர்வ மதமாக மாறியதைத் தொடர்ந்து இயேசுவின் பிறப்பு பகிரங்கமாகவே நினைவுகூறப்படத் தொடங்கியது.

அந்தக் காலகட்டங்களில் – அதாவது முதலாம் இரண்டாம் ழூன்றாம் நூற்றாண்டுகளில் இயேசுவின் பிறப்பு எப்பொழுது என்பது தொடர்பான பலவித தடுமாற்றங்கள் கிறிஸ்தவர்களிடையே காணப்பட்டு வந்தது. கிரேக்கத்தில் ஒரு தினமும், தற்போதைய துருக்கியில் வேறொரு தினமும், ரோமில் வேறு வேறு தினங்களிலும், கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்திருந்த மற்றய தேசங்களில் வேறு வேறு தினங்களிலும் கிறிஸ்துவின் பிறப்பு நினைவுகூறப்பட்டு வந்தது. மே 20ம் திகதி, ஏப்ரல் 18 ம் திகதி;, ஏப்ரல் 19 ம் திகதி, மே 28 ம் திகதி, ஜனவறி2 ம் திகதி, நவம்பர்27 ம் திகதி, நவம்பர் 20 ம் திகதி,மார்ச் 21 ம் திகதி, மார்ச் 24 ம் திகதி.. இந்த நாட்களிலெல்லாம் இயேசுவின் பிறந்த தினம் நினைவுகூறப்பட்டு வந்ததாக சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இயேசு பிறந்து சுமார் 350 வருடங்கள் வரை இயேசு பிறந்த திகதி தொடர்பான பலத்த தடுமாற்றம் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படவே செய்தது.

ஆனாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக டிசம்பர் 25ம் திகதி தமது சூரியப் புதல்வனுக்கு விழா எடுத்துவந்த கலாச்சாரத்தில் இருந்து ரோமாபுரி மக்காளால் மீள முடியவில்லை. எனவே டிசம்பர் 25ம் திகதியை இயேசுவின் பிறப்பாக மாற்றுவதின் மூலம் ரோமாபுரி மக்களை கிறிஸ்தவத்தின் பக்கம் கொண்டுவரலாம் என்று திட்டமிட்ட கத்தோலிக்கத் திருச்சபை ஒரு அறிவித்தலைச் செய்தது.
கி.பி. 350 வருடம் ரோமத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் பாப்பாண்டவர் முதலாவது ஜூலியஸ் ஆண்டகை இயேசுவின் பிறந்த தினமாக டிசம்பர் 25ம் திகதியே உலகம் முழுவதும் கொண்டாடப்படவேண்டும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலை விடுத்தார். அந்த நேரத்தில் (அந்த நேரத்தில் மாத்திரமல்ல இந்த காலகட்டத்திலும் கூட) கடவுளின் ஒரு பிரதிநிதியாகவே போப்பாண்டவர் பார்க்கப்பட்டார். போப்பாண்டவரின் கட்டளையை யாரும் மீறமுடியாது.

டிசம்பர் 25ம் திகதி இயேசுவின் பிறப்பு நினைவுகூறப்பட ஆரம்பித்த வரலாறு இதுதான்.
சில ஆபிரிக்க நாடுகளில் இயேசுவின் சிலைகள் உருவாக்கப்பட்ட போது இயேசு கறுப்பினத்தவராக வடிவமைக்கப்பட்டது போன்று, இந்தியாவிலுள்ள சில தேவாலயங்களில் இயேசுவின் தாயாரான மரியாள் சேலை கட்டியுள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது போன்று, ரோமர்களின் ஒரு முக்கிய கலாச்சாரம் கிறிஸ்தவத்திற்குள் தவிர்க்க முடியாமல் உள்வாங்கப்பட்டது – கத்தோலிக்கத் திருச்சபையால்.

புரட்சி

அந்தக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் சாதாரமாக பைபிளை வாசிப்பதற்கு அனுமதி இல்லை. சாதாரன கிறிஸ்தவர்கள் பைபிளை தம்முடன் வைத்திருக்க முடியாது. தேவாலயங்களில் மாத்திரம்தான் பைபிள்கள் இருக்கும். குருமார் மாத்திரம்தான் பைபிளை வாசிக்க அனுமதி. 1611ஆண்டு லண்டனில் கிங் ஜேம்ஸ்;(King James ) மொழியாக்க பைபிள் சாதாரன கிறிஸ்தவர் கரங்களில் கிடைக்கும் வரை கத்தோலிக்கத் திருச்சபை வெளியிடும் கட்டளைகளை மாத்திரமே வேதவாக்காக நினைத்து கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு கிறிஸ்வர்களுக்கு இருந்து வந்தது. எனவே இயேசு டிசம்பர் 25ம் திகதிதான் பிறந்தார் என்று பைபிளில் கூறப்பட்டிருக்கின்றது என்பதான ஒரு தோற்றப்பாட்டை அவர்களால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இலகுவாக ஏற்படுத்தமுடிந்தது.

சாதாரன கிறிஸ்வர்களின் கரங்களில் பைபிள்கள் கிடைத்து அதனை அவர்கள் படித்துத் தேறியபொழுதுதான் சலசலப்புக்கள், எதிர்ப்புக்கள், வாதிப்பிரதிவாதங்கள் ஏற்படலாயின. பலர் எதிர்த்தார்கள். சிலர் புரட்சி செய்தார்கள்.
‘சரி அந்தத் தினத்தில் இயேசு பிறக்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் இயேசு பிறந்ததை அன்றைய தினத்தில் கிறிஸ்வர்கள் அனைவரும் ஒரு மனதாக நினைவுகூறலாம்தானே’ என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் வாதமாக இருந்தது.

இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து வழிபடுவது வேததத்தின்படி ஒரு விக்கிரக ஆராதனை. அன்னியதெய்வ வழிபாடு ஒன்றை கடவுளின் வழிபாடாக கடைப்பிடிப்பதும் ஒருவகை விக்கிரகவழிபாடுதான். எனவே கிறிஸ்தவர்கள் அதனை கண்டிப்பாகச் செய்யக்கூடாது| என்பது மற்றவர்களது நிலைப்பாடாக இருந்தது.

ஆனாலும் டிசம்பர் 25ம் திகதியே இயேசு பிறந்தார் என்று பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த மாயையை இலகுவாக யாராலும் உடைத்துவிட முடியவில்லை.
வரலாற்றை ஆராய்கின்றபொழுது ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவத்தின் தூனாக மாறியிருந்த அமெரிக்கா, டிசம்பர் 25ம் திகதியை இயேசு பிறந்த தினமான ஏற்றுக் கொள்வதில் பலத்த தயக்கம் வெளிப்படுத்தியதைக் காண முடிகின்றது.

1836ம் வருடம்தான் அமெரிக்காவில் டிசம்பர் 25ம் திகதி இயேசு பிறந்த தினமாக அமெரிககாவில் உள்ள அல்பானா என்ற மானிலம் ஏற்றுக்கொண்டிருந்தது. 1870ம் ஆண்டு ஜூன் 26ம் திகதிதான் டிசம்பர் 25ம் திகதியை முதன் முதலில் ஒரு விடுமுறை தினமாக அறிவித்திருந்தது அமெரிக்கா.

இருந்த போதிலும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக்கொண்ட அமெரிக்க மானிலமான ஒக்லாகோமா மாநிலம் 1907ம் வருடம் வரை டிசம்பர் 25ம் திகதியை ஒரு விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
டிசம்ர் 25ம் திகதிய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் Pரசவையளெ என்ற அதி தீவிர பெரும்பாண்மை கிறிஸ்தவப் பிரிவினரால் 1659 முதல் 1681 வரை தடை செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ் என்பது ஒரு கிறிஸ்தவ விரோத நடவடிக்கை அது ஒரு விக்கிரக ஆராதனை என்று கூறப்பட்டு கிறிஸ்மசை கொண்டாடுபவர்களுக்கு கசை அடி தண்டனை வழங்கியதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று கிறிஸ்மஸ் தினம் என்பது ஒரு விக்கிரக வழிபாடு என்று கூறி 1649 முதல் 1660 வரை இங்கிலாந்திலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கால ஓட்டத்தில் உலகம் வியாபாரமயப்படுத்தப்;பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்ங்களை வியாபார உலகம் தனது கரங்களில் எடுத்துக்கொண்டது. இன்று கிறிஸ்மஸ் என்பது தவிரக்க முடியாத ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது – கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமல்ல – அனைத்து உலகத்தவருக்கும்.

கிறிஸ்மஸ் தாத்தா

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்மஸ் தாத்தா என்பது இயேசு பிறப்பின் நினைவு கூறலில் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளமாக மாறிவிட்டுள்ளது. கிறிஸ்மஸ் தின நினைவு கூறலில் இயேசுவின் பிறப்பு பற்றிய நற்செய்தி இருக்கின்தோ இல்லையோ சன்டகுளோஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா கண்டிப்பாக இருந்துவிடுவார். கிறிஸ்மஸ் தாத்தா பரிசில்களை வழங்குவது ஒரு கிறிஸ்மஸ் சம்பிரதாயமாகவே மாறிவிட்டுள்ளது.
கிறிஸ்தவம் தன்னை அறியாமல் (அல்லது அறிந்துகொண்டே கூட) கண்களை மூடிக்கொண்டு உள்வாங்கிவிட்டுள்ள பல விக்கிரகங்களுள் இந்த கிறிஸ்மஸ் தாத்தாவும்; ஒன்று என்று சில பல கிறிஸ்தவ ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

இயேசு பிறந்த பொழுது கிழக்கில் இருந்து வந்த வான சாஸ்திரிகள், இயேசுவைத் தொழுது பரிசுகளைக் கொடுத்ததாக பைபிளில் கூறப்பட்டிருந்தாலும், டிசம்பர் தினக் கொண்டாட்டங்களின் பொழுது பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் ரோம் நகர கலாச்சாரத்தைக் கொண்டுதான் ஆரம்பமானதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
டிசம்பர் காலப்பகுதியில் தமது சூரியப் புதல்வனின் பிறப்பினைக் கொண்டாடிய ரோமர்கள் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் காலகட்டத்தில் பரிசுகள் பரிமாறுவதென்பது இங்கிருந்துதான் ஆரம்பமானதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதேவேளை, ஸ்கன்டினேவிய நாடுகளில் இருந்து வந்த ஓடன் தெய்வ வழிபாட்டுமறையும், கிஸ்மஸ் தாத்தவின் உருவாக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். குதிரையில் வானத்தில் பறக்கு வளக்கத்தை உடைய நீண்ட வெள்ளைத் தடிவைத்த ஓடன் தெய்வம் வேண்டுபவர்களுக்குப் பரிசுகளையும், வரங்களையும் இல்லம் தேடி வந்து தருகின்ற ஒரு கடவுளாகப் பார்க்கப்பட்டுவந்தார். கையில் நீண்ட கம்பு, தொப்பி, தொப்பை, வெள்ளைத்தாடி இந்த ஓடன் தெய்வத்தின் அடையாளங்களுள் சில. கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவகம் இந்த ஓடன் கடவுளின் பிம்பமாக இருக்கலாம் என்று சில ஆராய்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

செயின்ட் நிக்களஸ்

4ம் நூற்றாண்டில் பட்டாரா(தற்போதைய துருக்கி) என்ற இடத்தில் பிறந்து கத்தோலிக்கத் திருச்சபையின் ஒரு பிஷப்பாக இருந்த நிகலஸ்( Nikolas of Myra) என்பவர் ஏழைச் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி உதவி செய்தார், பலரை வறுமையில் இருந்தும், மரனத்தில் இருந்தும் தனது உதவிகளினால் காப்பாற்றினார் என்பது உண்மையான வரலாற்றுச் சம்பவம். அந்த நிக்கலாஸ் என்ற பிஷப் பின்நாட்களில் கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதப்பட்டம் பெற்று சென்ட் நிகலஸ்( Saint Nicholas) ஆக அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அவரது பெயர் சன்டாகுளோஸ் (Santa Claus)ஆக மாறியது. உண்மையான நிகலஸ் அடிகளாருடைய (Saint Nicholas) புகைப்படம், மற்றும் அவர் பிறந்த துருக்கியில் உள்ள அவருடை சிலையின் புகைப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக அடையாளப்படுத்தப்பட்டுவரும், சிவப்பு உடை தலையில் தொப்பி, பன்னிரெண்டு மான்களை இணைத்து வானத்தில் மிதந்துவரும் ரதத்தில் வலம்வருவதாகக் காட்சிப்படுத்தப்படும்; நபருக்கும்; செயின்ட் நிக்களசுக்கும் – பரிசுப் பொருட்கள் என்பதற்கு அப்பால் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையான Saint Nicholas இற்கும் தற்காலத்து சன்டகுளோசுக்கும் இடையில் சம்பந்தம் இல்லை என்பது மாத்திரமல்ல- உண்மையான கிறிஸ்தவச் சிந்தனைகளைத் தத்துவார்த்தங்களை சிதறடிக்கின்ற ஒரு அடையாளம்தான் இந்த நவீன கால சன்டகுளோஸ் என்று வாதிடுகின்றார்கள் சில கிறிஸ்தவ ஆர்வலர்கள். அவர்களது வாதத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை என்பதற்கு நானே ஒரு சாட்சி.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நானும் எனது சகோதர சகோதரிகளும் கிஸ்மஸ் நெருங்கும் பொழுது ஒரு பட்டியல் தயாரிப்பது வளக்கம். எமக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், பாடசாலை உபகரனங்கள், புது ஆடைகள்.. ஒரு நீண்ட பட்டியலை எழுதுவோம். அந்தப் பட்டியல் நத்தார் தாத்தாவுக்கான எமது விண்ணப்பம். எமது தலையணைகளுக்குக் கீழே அந்தப் பட்டியலை வைத்துவிட்டுத் தூங்கிவிடுவோம். 24ம் திகதி ஒரே பதட்டமாக இருக்கும். அன்றைய தினம் நள்ளிரவு கண்விழித்துப் பார்த்தால் நாங்கள் தயாரித்த பட்டியலில் உள்ள பரிசுப் பொருட்கள் அழகாகப் பொதி செய்யப்பட்டு எங்களது தலையனையின் அருகே வைக்கப்பட்டிருக்கும். ஷநாங்கள் குளப்படி செய்யாமல்; நல்ல பிள்ளையாக இருந்ததால் நத்தார் தாத்தா நாங்கள் கேட்ட அத்தனை பரிசுப் பொருட்களையும் இரவில் பறந்துவந்து வைத்துவிட்டுச் சென்றதாக| எமது பெற்றோர் கூறுவார்கள் நமட்டுச் சிரிப்புடன். எங்களுக்கோ மிகுந்த மகிழ்ச்சி. கிறிஸ்மஸ் தினம் என்றால் இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பை விட கிறிஸ்மஸ் தாத்தாதான் எங்களுக்கு முக்கியாமாகத் தெரிவார். இன்றும் குறிப்பாகக் கூறுவதானால் இயேசுவை விட கிறிஸ்மஸ் தாத்தாதான் எங்களுக்கு ஹீரோ. எனக்கு மாத்திரமல்ல கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்த ஆனேகமான சிறுவர்களின் அனுபவம் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

கோக்கோகோலாவின் சாதனைcokelore_santa_toys_cutout-150x150

கடவுளுக்குக் கொடுக்கவேண்டிய மகிமையை இன்னொருவருக்குக் கொடுப்பது விக்கிரக ஆராதனை என்று பைபிள் கூறுகின்றது. எனவே சண்டக்குளோசை கிறிஸ்தவத்தின் ஒரு அடையாளமாகக் கருதக்கூடாது என்று சில கிறிஸ்தவ ஆர்வலகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
சரி, உண்மையான Saint Nicholas எப்படி தற்காலத்து சன்டகுளோஸ் ஆக மாறினார் என்று தேடியபொழுது ஒரு சுவாரசிமான பதில் கிடைத்தது. Saint Nicholas என்ற கத்தோலிக்க பிஷப்பை நகைச்சுவையான, குஸ்தி அடித்து வேடிக்கை காண்பிக்கும் நவீனகாலத்து சன்டகுளோஸ் ஆக மாற்றிய பெருமை கொக்கோகோலா நிறுவனத்தையே சாரும்.
1931ம் வருடம் கோக்கோகோலா நிறுவனத்தின் விளப்பரத்திற்காக நடாத்தப்பட்ட பொப் இசை நிகழ்சி ஒன்றில் பிரபல பொப் இசைப் பாடகர் ஹடோன்( Haddon Sundblom) ) சிவப்பு ஆடை, தொப்பி, தாடி அனிந்து கொண்டு மக்களைப் பரவசப்படுத்திய தோற்றம்தான் இன்றைய சண்டகுளோஸ்.

கிறிஸ்மஸ் மரங்கள்(Christmas Trees)Free-christmas

கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்களின் பொழுது வீடுகளில், ஆலயங்களில், வியாபார நிலையங்களில் வைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் மரங்கள்(Christmas Trees) கூட கிறிஸ்தவம் அல்லாத கலாச்சாரப் பின்னனியைக் கொண்டதாகவே பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்னதாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக ஜேர்மனியில் யூலே(லுரடந) என்ற தெய்வத்திற்கான வழிபாட்டின் பொழுது, பச்சை மரங்களைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். மார்கழிமாத்தில் இந்த சம்பிரதாயங்களை ஐரோப்பியர்கள்- குறிப்பாக ஜேர்மனியர்கள் செய்வது வளக்கம். இதுதான் பின்நாட்களில் கிறிஸ்மஸ் மரங்களாக உருவானது.
1500ம் வருடத்தில் புரட்டஸ்டாந்து மதத்தின் ஸ்பகரான ஜேர்மனியைச் சேர்ந்த மார்டின் லூதர் டிசம்பர் மாதம் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது ஒரு அழகான காட்சியைக் கண்டார். ஒரு மரத்தின் பின்னணியில் வானத்து நட்சத்திரங்கள் ஜெலித்துக்கொண்டிருந்த காட்சி அவரை மிகவும் கவர்ந்தது. நீண்ட நேரம் அந்தக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பிய அவர் அந்தக் காட்சியை தனது குடும்பத்தாருக்கும் செய்து காண்பிக்க விரும்பினார். வீட்டின் நடுவே ஒரு மரத்தை வைத்து அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றி தான் வெளியே நட்சத்திரங்களின் பின்னணியில் கண்ட மரத்தின் காட்சியை காட்சிப்படுத்தினார். இதுதான் பின்நாட்களில் கால ஓட்டத்தில் வர்னமின்குழிழ்கள் ஜொலிக்கும் கிறிஸ்மஸ்மரம் ஆக மாறியது.

இவ்வாறு கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் எம்மத்தியில் உலாவருகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் உருவானவைகளாகவும்;, வேறு மத கலாச்சாரப் பின்னனிகளைக் கொண்டதாகவுமே சரித்திரப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே சம்பிரதாயங்கள், சடங்குகள் என்பன சந்தர்ப்பவசத்தால் உருவாகின்ற விடயங்கள்தான். இயேசுக்கிறிஸ்துவிற்கும், அவரது போதனைகளுக்கும், கிறிஸ்தவத்திற்கு, கிறிஸ்தவ தத்துவங்களுக்கும், அதன் சத்தியத்திற்கும், எந்தவிதத் தொடர்பும் இல்லாத பல அம்சங்கள் இன்று கிறிஸ்தவ சம்பிரதாயங்களாக மாறிவிட்டுள்ளதும், அன்றாடம் வேதத்தை வாசிக்கின்ற கிறிஸ்தவர்கள் கூட இந்தச் சம்பிரதாயங்கள், சடங்காச்சாரங்களுக்குள் தம்மை இணைத்துக்கொண்டுள்ளது நியாயமானதுதானா என்பதை கிறிஸ்தவ ஆர்வலர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

இலண்டன் பயண நாளுலா

இலண்டன் அரச மாளிகையைச் சுற்று வட்டாரத்தைப் பார்வையிட்டுவிட்டு குகைவண்டி பிடித்துக்கொண்டு இலண்டன் பாலத்தை அடைந்தோம்


அவ்விடத்தில் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது இலண்டன் நாட்டைக்காக்கும் போர்க்கப்பல் உலகத்தின் கடல்பாதுகாப்பிலேதான் அந்த நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் அடங்கியிருக்கிறது முதலாம் எலிசபத்து கடல்ற்பாதுகாப்பிலும் வணிகத்திலும் அதிகம் அக்கறை எடுத்தாள் அதன் பிரதிபலிப்பு தான் பெரிய பாரிய வளர்ச்சியாக வளர்ந்துள்ளது. இந்த கப்பற்படையைக் கொண்டுதான் உலகத்தை கைப்பற்றியது எலிசபத்து அரசு

போர்க்கப்பல் உருவாகத்தில் இங்கிலாந்து பல உத்திகளைப் பயன்படுத்தி கப்பலைச் செய்தது அவற்றுள் முந்தியது இக்கடலுந்து


ஞாயிறு, 3 நவம்பர், 2013

இலண்டன் பயணம் தொடர்கிறது.....


அந்த மாலைப்பொழுதில் மணிக்கூட்டுக் கோபுரத்தைத் தாண்டிச் சாலையோரமாக உள்ள கட்டிடங்கலையும் இளையவர்களின் உருட்டித்தட்டு விலையாட்டையும் பார்த்துக்கொண்டு அரச மாளிகையிருக்கும் இடத்துக்குச் செல்கிறோம். தங்க முலாமிட்ட கதவுகள் வேலிக்கம்பிகளைப் பார்த்தோம்.இங்கிலாந்தின் பாதிப் பொருள்கள் தெற்காடியாவிற் சுட்டதுதான். ஒரு கொள்ளைக்கார நாட்டின் அரசியை வெள்ளைக்கார அரசி என்று எம்மவர்கள் அழைப்பதற்க்கு அறிவூட்டும் ஆங்கிலேமே கரணியம். பல இந்தியத் தேசியங்களை அறிவதற்கும் படித்த ஐரோப்பியரையும் அறிவதற்கு ஆங்கிலேமே ஊடகம். இங்கிலாந்தின் அரச பரம்பரையினர் மளிகையைச் சுற்றி அழகாக அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் காலாற பூங்காவென்று அருமையாக இருந்தது அந்த முற்றம் .அன்று அரச பரம்பரையினர் மட்டும் பயன்படுத்திய இடங்கள் எங்கும் இன்று மக்கள் மயமாக இருக்கிறது என்றால் அதற்குக் கிட்லருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால் இரண்டாம் உலகப்போர் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அரச மாளிக்குள் செல்லமுடியாது அதனால் அதன் சுற்று வட்டாரத்தைப் பார்த்துக்கொண்டு திரிந்தோம் நிழல்பிடித்துக் கொண்டோம். அந்த இடத்தில் என்னைக் கவர்ந்த படிவங்கள் பல இருந்தன அவற்றுள் ஒன்று தாய் சேய் உருவகித்த சிலை.
சாலையோரத்தில் பழைய தெம்போடு கட்டிடம்

உயர்மட்ட அரச ஊழியர்கள் வணங்கும் வேலைப்பாடுடைய வணக்கத்தலம்

மக்களை நெறிப்படுத்தும் நெடுஞ்சாலை சாலை

கதலர்களும் நூல் வாசகர்களும் ஓவியர்களும் இடைஞரும் மகளிரும் கவிஞர்களும் படப்பிடிப்பலர்களும் பறவைகளும் அணில்களும் ஆரவாங்கள் என கலகலப்பாfஅ இயங்கும் பூங்கா


இதுதான் இமயத்தையே வென்ற இங்கிலாந்து நாட்டின் அரச பரம்பரை உலவித்திரிந்த முற்றத்தின் முன்வாயில். இதுவே மனதை உள்ளே இழுக்கும் வாயில்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இலண்டன் பயணத் தொடர்ச்சி

மணிக்கூட்டுக் கோபுர வளாகத்தைச் சுற்றிப்பார்த்த போது அங்கு காவற்பணியில் நின்ற காவற்றுறையைச் சேர்ந்த காவலாளியோடு நின்று நிழல் பிடித்துக் கொண்டு நடந்தோம்.


அந்த வளாகத்துள் இருந்த அந்தச் சிலை எம் கண்ணில் மலைப்பைத் தந்தது

அவர்தாம் ஒலிவர் கிறொம்வேல்(Olivar Cromwell)

இங்கிலாந்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஒலிவருக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமல்லாது அடிமட்ட மக்களுக்களின் உரிமைக்காக பெரும் பாடுபட்ட மனிதர் எனலாம்.அம்மனிதரின் படிமத்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்வாக இருந்தது. ஏன் இந்த மகிழ்வென்றால் உலகத்தில் மாற்றாம் ஏற்படுமாயின் அது ஐரோப்பியர்களாலேயே ஏற்படும் .முதலாம் உலகப்போருக்கு கரணியம் ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி.இரண்டாம் உலகப்போருக்குக் கரணியமும் பொருளாதார வீழ்ச்சி தான். ஐரோப்பியரின் நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டதும் பொருளாதாரம் தான். அது பிரித்தானிய உலகாள விரும்பும் மேல்தட்டு வருக்கத்தினால் ஏற்படுவதால் அங்கு ஒரு மக்களாட்சியை தொற்றுவிக்க கரணியமாக விரும்பிய ஒலிவர் போற்றுதற்குரியவர்.அவர் சிந்தித்தது பிரித்தானியர்களுக்காகத்தான் ஆனாலும் அதுவே உலக மாற்றமாக இன்று மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

யாம் பார்த்த இலண்டன்

உலகத்தையே ஓரளவு ஆண்ட ஒரு நாட்டுக்கானபயணம். பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. நோர்வேயில் இருந்து இலண்டன் இலண்டனில் இருந்து நோர்வே என அமைந்த பயணம் எட்டு நாள் வரை அமைந்தது. இறயன் என்ற விண்ணூர்தியில் ஏறி கிட்டமட்ட இருமணிநேர பயணத்தில் பின்னிரவு இலண்டனை யாம் வந்தடைந்தேம்.


நோர்வே நாட்டு விண்ணூர்ர்தி நிலையம் போலல்லாமல் மிகவும் பெரிதாகவும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் விண்ணூர்தி நிலையம். பேருந்துகளின் ஊழியம் மகிழுந்துகளின் ஊழியம் மிகவு அருமையாக இருந்தது. நிறைய மக்களைக்கொண்ட நாடான போதும் அந்த நாட்டின் ஒழுங்கமைப்பு  மிகவும் சிறப்பானது. உலகுக்கே நேர்த்தியைச் சொல்லிக்கொடுத்த நாடல்லவா!

நாடு நல்லது நம்மினம் கூடாது என்பதைப் போல  கரோ என்ற இடத்தில்
தங்கியிந்தபோது அறிந்து கொண்டேம். யாம் தங்கியிருந்தது தென்கரோவில் கூடுதலாக இந்தியர்களும் இலங்கையர்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட இடம் போல் இருந்தது இலண்டனின் பழைய நாகரிக நிலம் கரோ . குப்பை களுக்குக்குறைவில்லை அவற்றை வெள்ளையர்கள் துப்புரவு செய்வது அருது போலும்,நோர்வேயில் இருந்து போன எமக்கு இடத்தைப் பார்த்ததும் அருவருப்பாக இருந்தது.எச்சித்துப்பல்களையும் வெற்றிலைத்துப்பல்களையும் துப்புரவு இல்லாத்த குப்பைத்தொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக எம்மவர்களும் இடங்களே இப்படி இருக்கும் என்றல்ல சீக்கியர்களின் பொற்கோயிலுக்குச் சென்றிருந்தேன் என்ன எழில் தூய்மையின் இருப்பிடம். அதே நேரம் தமிழ்க் கோயிலுக்குச் சென்றிருந்தேன் பத்தி வருவதை விட வாந்தி வந்துவிடும் அவ்வளவு அழுக்கு நிறைந்த கழிவறைகள்.கருவறை மட்டும் துப்புரவாய் இருந்தால் போதாது இறைபத்தி நிறையவேண்டுமென்றால் சுற்றாடல் துப்புரவாக இருக்க வேண்டும்.

ஆனால், எம்மக்களின் வீடுகள் துப்புரவாகவும் கோயில்கள் போலவும் இருந்தன.ஆனாலும் ஒரு கவலை நிறைந்த்திருந்தது மூத்தோரின் நிலைதான் பிள்ளைகளின் வேலைப்பழுவும் பேரப்பிளைகளோடு ஒட்ட முடியாத மொழியும் அவர்களை புறம்பாக்கியே வைத்திருக்கிறது.பாழடைந்த கட்டிடத்தில் மூத்தோர் முற்றம் என்ன கொடுமை உலகத்திலேயே இரண்டாவது பணக்காரன் ஒரு தமிழன். இலணடன் மக்களிம் இல்லாத் பணமா? ஒற்றுமை இன்மையால் இந்த இனம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.ஆளாளுக்கு தமிழ்ப்பள்ளிகள் ஆளாளுக்கு வானொலிகள். ஒன்றுபடாத எதுவும் உருப்படியாகாது.

நிற்க,
இலண்டனின் நகரப்புறத்திலிருந்து நகருக்குச் சென்றிருந்தேன். பழைய வரலாற்றைப் பேணுவதோடு புதிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கிக்கொண்டு பிரித்தானியா என்ற நாட்டை மேம்படுத்தும் மக்கள். இதுதாம் பிரித்தானியர்களின் வெற்றி அவர்கள்  வெற்றிக்கு அனைத்து நாட்டு அறிவாளிகளும் தம் மூளைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பணம் கிடைத்தால் போதும் தாம் வாழ்ந்தால் போதும் என்பதே வேற்று நாட்டு மக்களின் மோகம் அதை வெள்ளையர்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகம் என்றதும் தஞ்சைப் பெருங்கோயில் இந்தியா என்றும் தாச்மகால் இலண்டன் என்றது பெரிய மணிக்கூட்டுக் கோபுரம் தான் கண்ணில் வரும்.


காலை எழுந்து நண்பன் எழிலோடும் என் மகன் தாரகனோடும் இலண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டேம்.குகைவண்டி(Tube) பிடித்துக்கொண்டு புறப்பட்டோம்.ஒரு வண்டியில் ஏறி மாறி மற்ற வண்டியில் ஏறி முதலில் மெழுகுபொம்மைகள் வைத்துள்ள அருங்காச்சியத்துக்குச் சென்றடைந்தோம். ஆடி கால பள்ளி விடுமுறை விடாத்ததால் பெருங்கூட்டத்தில் இருந்து தப்பித்தோம்.அதிக நேரம் காவல் நில்லாது அருங்காச்சியில் உள்ள மெழுகு பொம்மைகளைக்(உலக சாதனை மாந்தரைக்) கண்டுகளித்தோம்.


அத்தனை பொம்மைகளும் அப்படியே அச்சொட்டாக அந்த மாந்தரைப் போலவே இருந்தன. பல ஆசைகளோடு வந்தத மக்காள் தம் விருப்புகளை நிழல் பிடித்துக்கொண்டனர்.அங்கு எனக்கு பிடித்தவர்கள் பலரிருந்தனர் முதலாம் எலிசபத்து,காந்தி,நெல்சன் மண்டேலா,ஒபாமா,நியுட்டன்,மைக்கல், உலக ஓட்டவீரர் இப்போதிருக்கின்ற உசைன் போல்த்து, இன்னும் பலர் எனக்குப் பிடித்தமானவர்களோடும் நிழல் பிடித்துக்கொண்டேன்.

முதலாம் எலிசபத்து இலண்டனில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய வணிக நாடக பிரித்தானியத்தை மாற்றியமைத்தார் அவரின் அந்த உறுதிக்குத் துணையாக நின்றவர் ஒரு கிறித்துவ பாதிரியார் ஆவார் 
உள்நாட்டுக் குறும்பரையும் வேற்றுநாட்டு ஒற்றரையும் வேரறுத்தாள்.


அவர்கள் குடும்பத்தினருக்கும் இடையூறில்லாமல் குற்றவாளிகளையே கொன்று முடித்தார். அதுவே அவ்வரசியின் வெற்றி அவரின் வரலாறு போல் தமிழருக்குத் தலைவர் மே.தகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சொன்னால் மிகையாகாது. 
பெரு மாந்தரை பார்க்காத நாம் நேரிலே அவர்களை பார்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஒரு பெண். சிந்தனையும் செயல் வடிவமும் கொண்டவர்கள் இங்கிலாந்துப் பெண்கள். இங்கிலாந்துப் பெண்ணே பெண்ணுரிமையைப் பாடுதற்கு வித்திட்டவர்."கேளடாமானிவா எம்முள் கீழோர் மேலோர் இல்லை"_மாகவி சுப்பிரமணிய பாரதியார்.ஐரோப்பிய பெண்களைப் போல தமிழீழப்பெண்களும் தரணியோங்க வாழ்ந்தனர் தலைவன் வேலன் மகன் காலத்தில்.
எத்தனை அடக்கு முறைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்ட இலண்டன் போல் ஆபிரிக்க் அரிமா நெல்சன் மண்டேலாவுக்கு வந்தது. ஈட்டி முனை என்ற இயக்கத்தைக் கூட்டிப் போராடுகையில் வெள்ளையரால் சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் சிறைக்கோலம் கொண்டு இனத்தின் அமைதிக்காக வாழ்ந்து வருபவர் ஆவர்.

மெழுகு பொம்மைகளின் அருங்காட்சியம் உருவாக்குவதற்கு சிந்தனையும் செயல் வடிவமும் கொடுத்தவர் அம்மையார்
தொடரும்.....?

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிப்பெருவேந்தர் வாலிவாலியின் இயற்பெயர் டி.எஸ்.இரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
`"ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊங்குவிற்பவனும் தேக்குவிற்பான்"
என்பது கவிஞர் வாலியின் வரிகள்
1931 இல் இருந்து 2013 இவ்வாண்டு வரை வாழ்ந்தவர் வாலி.நான்கு தலைமுறைக்கும் பாட்டெழுதி வெற்றிகண்ட வாலிபக்கவிஞர் வாலி.முருகனை தன் வரிகளால் போற்றிப்பாடியவர்
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" மனமுருகப் பாடிய இப்பாடல் முருகப்பக்தர் அனைவருக்கும் அமுதம்.

1958 ஆம் ஆண்டு அழகர்மலைக் கள்ளன் திரையில் தொடங்கி ஏராளம் பாடல்களை சாகும் வரை வடித்தார் நம் கவிப்பெரு வேந்தர் வாலி.

சிவாசிகணேசனின் 156 திரைக்கும் எம்சிஆர் அவர்களுக்கு 128 பாடல்களும் எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட 15000 பாடல்களை எழுதி பெயர் பெற்றார் என்று திரையுலகம் புகழாரம் சூட்டுகிறது.
வாலியவர்கள் அம்மாவுக்காக எழுதிய பாடல் அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

அவர் எழுதிய இறுதிப்பாடல்

அவன் அறிவான் எது தீமை
அவன் அறிவான் எது நன்மை
யார் அறிவார் அவன் தீர்ப்பு
அவன் கையில் நம் வாழ்கை

அவர் எழுதிய இறுதிக் கவிதை

நேற்றிரவு சுவாசம் மிகமோசம்
நரசிம்மனையே பயமுறுத்தி விட்டேன்
நன்றியுடன்
வாலி


சனி, 29 ஜூன், 2013

கிறிசியான் மாநிலம் (Kristiansand)

நோர்வேயின் தென்னகத்தே அமைந்துள்ளது கிறிசியான்சன்(Kristiansand) என்னும் இந்த நகரம் முன்பு இந்நிலத்தை ஆண்ட மன்னன் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் பல சிறப்புகள் உள. இந்நகரைச்சுற்றிக்கடல் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெருங்கப்பல்களின் இறங்கு துறையாக அமைந்துள்ளது.கணிசமான மழைவீழ்ச்சி காணப்படுவதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை இடருக்குள் தள்ளுவதுண்டு.
சாலையோர வழிகாட்டி
கிறிசியான் தலைமுறையில் இவர் நான்காம் அரசர்
இவள் பெயர் கமிலா
கமிலா.கொல்லத்து 1813 ஆம் ஆண்டு பிறந்து 1895 ஆம் ஆண்டு தமது எண்பதிரண்டாவது அகவையில் இயற்கையெய்தினார். இவருடைய தந்தையார் திறமையான ஓவியர் இவருடைய உடன்பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகையால் இவருக்கு இயல்பாக குடும்பச்சூழல் கலை சூழ்ந்ததாய் அமைந்ததால் மிகத்திறன்பட்டவராய் வளர்ந்து நோர்வேயின் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்திருக்கிறார். இவரைச் சிறப்பித்து நோர்வே நாட்டுப் பணத்தாளான 100 குறோனரில் திருவுருவைப் பதித்துள்ளனர்.இவரது பதினான்காம் அகவையில் இருந்து பதினாறாம் அகவை வரைக்குள் மொழியிலும் இசையிலும் மிகத்திரனுள்ளவராய்த் திகழ்ந்துள்ளார். கவிதாயினியாகவும் பாடலாசிரியராகவும் குமூக அக்கறையுள்ள எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.தம் கணவரின் பேருதவியோடு செல்லச்செழிப்போடு வாழ்ந்தவர் கணவர் தம் இறப்புக்குப் பின்னர் மிகவும் வறியவராக வாழ்ந்து இயற்கையெய்துள்ளார்.
இவர் வரலாற்றை மேலும் பிறமொழியில் படித்துக்கொள்ள
                                  http://en.wikipedia.org/wiki/Camilla_Colleஞாயிறு, 2 ஜூன், 2013

ஐம்பூதங்களே மன்பதை

மன்பதை எனும் சொல்லை பாவாணர் தேவநேயப்பாவாணர் அவர்களின் நூல் தொகுப்பிலிருந்து கற்றுக்கொண்டேன். மன்பதை எனும் மாந்த நேயம் இன்று நம்மிடை அற்றுப் பேவதற்கு என்ன கரணியம் என்று உலகம் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றது. மதத்தைத் தோற்றுவிக்காமல் மன்பதையைத் தோற்றுவிப்பதற்கே பல துறவிகள் முன்வந்துள்ளனர்.சித்தார்த்தர்(புத்தர்),இயேசு,நபிகள்,வள்ளளார்,விவேகானந்தர் அவர் கிளைப்பிறப்பினர். ஒருவருடைய திறன் அவரோடு முடிவடையும் என்பதே உலகப் போக்கு.அவரைப்போல அவரே அவரைப் போல் வேறொருவரை உருவாக்க முடியாது. ஆனால் அவரைப் போல் உருவாகலாம் அவர் தாம்.  போதிதர்மர். மன்பதையை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் அதுவும் பொற்றோரில் இருந்தல்ல அவர் பரன் பரையில் இருந்து தொடங்க வேண்டும். அவர் தம் போக்குகளே செயல்களாக வடிவம் பெறுகின்றன.போக்குகளை செயல் வடிவமாக்குவது எவ்வாறு அதற்கு தமிழரின் பண்பாடும் அவர் தாம் அறிவியலுமே எடுத்துக்காட்டுகள்.

ஐம்பூததோடு ஒரு சேர வாழ்தல் அதற்கு உள்ளங்கையே எடுத்துக்காட்டு. ஐந்து விரலும் ஐம்பூதங்கள் அவற்றுள் கட்டவிரல் - தீ, சின்னிவிரல் - நீர், மோதிரவிரல் - காற்று , நீட்டுவிரல் - நிலம், சுட்டுவிரல் - வானம் இவற்றுள் ஒரு உண்மையைக் கவனியுங்கள் இந்த ஐந்து விரல்களையும் சேர்தே நாம் உண்ண வேண்டும் என்பதே நம் பெரியோரின் சட்டம்


தீயோடு சேரா நீர் அருகில் இல்லை ஆனால் காற்றோடு சேர்ந்திருக்கும் அதாவது இருபங்கு நீர்மம் ஒருபங்கு உயிர்மம் இவற்றோடு நிலம் நிலதோடும் வானத்தோடும் தீ சேர்ந்திருக்கும் என்பதே ஐந்து விரல்களின் ஐம்பூதம் காட்டும் உண்மை. இந்த ஐம்பூதங்கள் சரியாக செயற்பட வேண்டும் என்றே ஐந்து கோயில்களைத் தமிழகத்தில் நம்முன்னோர் கட்டிவைத்தனர் அந்தக் கோயில்கள் தனித்தனியே இருப்பது கண்டு நம் சத்குரு மனம் நோகுவர்.
சத்குரு ஜக்கி வாசுதேவன்

ஐம்பூதங்கள் சரியாக இயங்கவில்லையெனில் எந்தப் பயனும் இல்லை. அவை சரியாக இயங்கும் போது தான் இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டாக இருபத்தொராம் நூற்றாண்டின் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்

அவர்களைக் கூறலாம். ஐம்பூதங்கள் சரியாக நம்மூளையை இயக்கும் போழ்தே மனநிலை மன்பதையாக மாற்றம் பெறுகின்றது.

எழுதுனன்:
 கதிரவேலு பொன்னம்பலம் சத்தியானந்தன் உதயன்

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழக மாணவர்கள்தமிழீழத்துக்காக தமிழக மாணவர்கள் வடக்கிருத்தலை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பெருஞ்சோழன் கத்தியின்றி அரத்தமின்றி நடத்திய இந்தப் பாடுகிடத்தல் என்னும் வடக்கிருத்தல் இந்திய மத்திய அரசை நோக்கியும் ஐநாவை உலுக்கவும் தொடங்கியிருக்கிறது. வெற்றி உறுதி தமிழீழம் அருகில் மலரும் நன்றி மாணவர்களே.http://youtu.be/sGj7LiiZVtA
அன்புடன்
தமிழாசான்.


புதன், 27 பிப்ரவரி, 2013

சுஜாதாரங்கராஜன்இன்று - பிப்.27 : சுஜாதா நினைவு தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!

* முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

* பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது..!
நன்றி.
இன்று ஒரு தகவல்.

பழங்களின் அரசன் 'மாங்கோ'


மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் "மாங்கோ' என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே!

இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி!

ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன.

பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.

இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் "உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்' என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன.

எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே "பழங்களின் அரசன்'தான்!
நன்றி.
தமிழும் சித்தர்களும் 

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

இன்னும் என்ன தோழா


சோர்வு அடையும் போதெல்லாம் நான் கேட்கும் பாடல்களில் ஏழாம் அறிவு பாடலும் ஒன்று

பல வருட தேடலில் பல மன சிக்கல்களில் நடக்க இருந்த தற்கொலைகளை நான் தினம் ரசிக்கும் பாடல்கள் தவிர்த்து இருக்கின்றன

இசையும் பாடல்களும் அன்றாட வாழ்கையில் அவசியம் தேவை

இன்னும் என்ன தோழா பாடல் வரிகள்

இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட

நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!

என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!

மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!

இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!
எழுக!!!!

இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்!
தொடு வானம் இனி தொடும் தூரம்!
பலர் கைகளை சேர்க்கலாம்!

விதை விதைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?

ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்

அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்

கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்

பனி மூட்டம் வந்து படிந்தென்ன
சுடும் பகலவன் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா?

இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு!
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு!

யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல இடை போட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே!
என்ன இல்லை உன்னோடு!
ஏக்கம் என்ன கண்ணோடு!
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!

வந்தால் அலையாய் வருவோம்!
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்!
மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்!
இன்னும் இன்னும் இறுக!
உள்ளே உயிரும் உருக!
இளமை படையே வருக!

மல்லர் கம்பம்தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம் .

பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான்.

சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய
கம்பத்தின் மீதும், கயிற்றில் தொங்கும் கம்பத்தின் மீதும், அந்தரத்தில் தொங்கும் கயிற்றின் மீதும் தாவி ஏறி ஆசனங்கள் செய்யும் மல்லர் கம்பம் வித்தையும் மிக அருகி வரும் கலைகளில் ஒன்றாகும்.

வீரம் செறிந்த விளையாட்டான மல்யுத்தம், சிலம்பம், களாரி, போன்று மல்லர் விளையாட்டிலும் நம் முன்னோர்கள் சிறப்பு பெற்ற கலைகள் ஆங்கிலேயர்களாலும் அன்னிய ஊடுருவலாலும் அழிக்கபட்டது போல் மல்லர் கம்பம் விளையாட்டும் நம்மில் இருந்து அழிக்கபட்டது.

மல்லர் கம்பம் யோகாசனம்,தியானம் போன்று மனதையும் உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடல் பயிற்சி ஆகும்.

சிலம்பத்துக்கும் மல்லர் விளையாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சிலம்பத்தில் வீரன் நிலையாக நின்றிருப்பான் கம்புதான் சுற்று சுழலும். ஆனால் மல்லர் விளையாட்டில் கம்பம் நிலையாக இருக்க வீரன் அதன் மேல் சுற்றி சாகசம் புரிவான்.

மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறைவணக்கத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

இதுபோல் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியுள்ளன.

விழுப்புரம் அருகே உள்ள வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த உலகதுரை என்ற உடற்பயிற்சி ஆசிரியர் மல்லர் விளையாட்டுப் பயிற்சியை முடித்தபின் மாணவர்களுக்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்தார். தமிழகம் முழுவதும் 200 மல்லர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் உடற்கல்வியியல் பல்கலை கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த மதுரையை சேர்ந்த திருமலைசாமி கூறுகையில், நான் குவாலியரில் லட்சுமிபாய் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் படித்த போது மல்லர் விளையாட்டு ஒரு பாடமாக இருந்தது. தமிழர் விளையாட்டு என்பதால் அதன் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நான் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது மல்லர் விளையாட்டை அனைத்து கல்விநிலையங்களிலும் கொண்டுவரும் திட்டத்தை அரசுக்கு அளித்தேன். தமிழக அரசு அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்றார்.

திராவிட, பார்பண ஆட்சிகளில் தமிழர் கலைகளும் தமிழர்களும் மதிக்கபடுவதில்லை . மனிதர்களுக்குப் பயன்படும் தமிழர் சொல்லிய நல்ல விசயங்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் கொடுப்பதும் இல்லை. இன்றும் இவ் அங்கிகாரம் நிலுவையில் இருக்கின்றது.

ஆங்கிலய ஆட்சியில் தமிழர்கள் தற்காப்புக் கலைகள் அழிக்கபட்டன. தற்காப்புக் கலை பயின்ற தமிழர்கள் சிந்தனைவாதிகளாகவும் அடிமைப்பட விரும்பாமல் இருந்ததே இதற்குக் காரணம். பிற்காலத்தில் திராவிட பார்பண ஆட்சியிலும் தமிழர் கலைகள் தமிழர் வரலாறு, தமிழர் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்க பட்டன. இதற்கு இந்து எதிர்ப்பு என்று காரணம் சொல்ல பட்டது.தமிழ் சித்தர்கள் சொல்லிகொடுத்த யோகாசனம், தியானம் என்ற மக்களுக்கு பயன் படக்கூடிய உன்னத கலைகள் கூட இந்துமத முத்திரை குத்தி ஒதிக்கிவைக்க பட்டன திராவிட ஆட்சியில். , பார்ப்பண ஆட்சியில் தமிழர் அங்கிகாரங்கள் இழந்தனர்.
நன்றி.
( செம்மொழி )

ஆழிக்குமரன் ஆனந்தன்


எத்தனை பேர் அறிவோம் ஆழிக்குமரன் ஆனந்தனை. இந்தச் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்போம்.

ஆழிக்குமரன் ஆனந்தன் ஈழத்து நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன்.

1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை. இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாயில்.
நன்றி.
( செம்மொழி )

திங்கள், 25 பிப்ரவரி, 2013

வள்ளுவரின் வீடு


வீடுதோறும் கலையின் விளக்கம் 
- 2-
ஒரு வீட்டிற்குள் என்ன இருக்கிறது? பாரதியார்  சொல்கிறார்:
ஒற்றைக் குடும்பம் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை!
மற்றைக் கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை!!
ஏவல்கள் செய்பவர் மக்கள் - இவர்
யாவரும் ஓர் குலம் அன்றோ?
ஆனால் நவீன வீடு மிகவும் மாறி விட்டிருக்கிறது. தாயும் பொருள் ஓங்க வளர்க்கிறாள்; தந்தையும் மற்றைக் கருமங்கள் செய்கிறார்.

வள்ளுவரின் வீட்டைப் பாருங்கள். அங்கே குடும்பத் தலைவன் தனது மனைவி, பெற்றோர், குழந்தைகளுக்கு உற்ற துணையாக விளங்குகிறான்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)
தனது முன்னோர், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் என்ற ஐந்து வகையினரையும் அறநெறி தவறாமல் அவன் காப்பாற்றுகிறான்:
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத் தார்ஓம்பல் தலை. (குறள் 43)

குடும்பத்தலைவி தன்னையும் காத்து, தன் கணவனையும் பேணி, பெருமை நிறைந்த புகழையும் காத்துத் தருகிறாள்:
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள் 56)
இப்படிபட்ட கணவனும், மனைவியும் பெறக்கூடிய செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் அறிய வேண்டியவைகளை அறியும் ஆற்றலுள்ள நல்ல குழந்தைகளைப் பெறுவதுதான்:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கள்பேறு அல்ல பிற. (குறள் 61)

இந்தப் பொறுப்பான, உயர்ந்த பெற்றோர் தங்கள் பச்சைக் குழந்தைகளின் “சிறுகை அளாவிய கூழ்” அமுதத்தைவிட இனியது (அமிழ்தினும் ஆற்ற இனிதே) என்பதை உணர்ந்திருக்கிறார்கள் (குறள் 64). அந்தக் குழந்தைகளின் மழலைச் சொல் குழலை விட, யாழை விட இனிது என்று தெரிந்திருக்கிறார்கள் (குறள் 66). தம் குழந்தைகளின் உடல்களைத் தீண்டி இன்பம் அடைவது போல, அவர்கள் சொல் கேட்டு செவி இன்பத்தையும் நுகர்கிறார்கள்:
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் 65)
நல்லதொரு வீட்டில் நடக்கும் நயமானக் குழந்தை வளர்ப்பில் “மெய் தீண்டல்,” “சொல் கேட்டல்” போன்றவை எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவரானதும், தந்தை தன் மகனை/மகளை சான்றோர் சபையில் முந்தியிருக்கச் செய்கிறார்:
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல். (குறள் 67)
அதுபோல, தன் குழந்தையை உயர்ந்தவர் எனக் கேட்கும் தாய், தான் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த நேரத்தைவிட பெரிதும் மகிழ்கிறார்:
ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் 69)
இப்படிப்பட்ட அருமையான தாயையும், தந்தையையும் பெற்ற மகன்/மகள் இவன் தந்தை எவ்வளவு பெரிய பாக்கியவான், இவள் தாய் எவ்வளவு பெரிய பாக்கியவதி என்று ஊரார் புகழும்படியாக நடந்து கொள்கிறார்கள்:
மகன் தந்தைக்குஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள் 70)

இப்படிப்பட்ட ஓர் அற்புதமான வீட்டை நாம் அமைத்துக் கொள்வதில் பரந்துபட்ட சமுதாயத்தின் பங்களிப்பும் இருக்கிறது என்றாலும், அறுதிப் பெரும்பான்மையான பங்கு அந்தந்த வீட்டாருக்கே உள்ளது. இந்த வீட்டை வடிவமைக்கும் பணியில் பிறரின் தலையீடுகள் வரலாம், ஆனால் நம்மை யாரும் முழுவதுமாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது. “கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்” என்பதை வெறும் பொருளாதார கோணத்திலிருந்து பார்க்கிறோம் நாம். அது தவறான அணுகுமுறை என்றே நினைக்கிறேன். ஒரு வள்ளுவரின் வீட்டைக் கட்டும், கட்டியெழுப்பும், கட்டிக்காக்கும், கையாளும், கரையேற்றும் கலையைத்தான், அதிலுள்ள கடினங்களைத்தான் அப்படிச் சுட்டியிருக்க வேண்டும் நம் முன்னோர். அரசியல்வாதிகளை, அதிகாரிகளை, அடுத்தவரை, ஏனையோரைப் பழித்துக் கொண்டிருப்பதைவிட, நம் வீட்டைக் கட்டும் செயலில் நாம் இறங்குவதுதான் சிறப்பு. அந்த சீரிய பணியை நாம் கையிலெடுப்பதும், நம் கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் பொறுப்பு.


நன்றி.
S.p. Udayakumar


சனி, 23 பிப்ரவரி, 2013

போகர்.!

சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
நன்றி
சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்

துளசி


நன்றி

தமிழ் -கருத்துக்களம்-
தெரிந்துக் கொள்வோம் - துளசி


அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி துளசி.

1) இதன் வேறு பெயர்கள்:

துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க.

யானையின் தமிழ்ப்பெயர்கள்வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

நன்றி.
 Kavin Bharathi

வியாழன், 21 பிப்ரவரி, 2013

நான்
நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் ....!

சுயநலமற்ற தந்தைக்கு 

மகனென்பதாலும்,
வீரப்பரம்பரையின்
விழுதென்பதாலும்
அவசர அவசரமாக
அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்...

தனியே பள்ளி செல்லத் தவிக்கும்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில்,
பகைவனிடம் செல்லுகையில் கூட
பயப்படவில்லை நீ...
அது சரி....,
தப்பாமல் பிறந்த
தமிழ்மகனல்லவா...


ஏதுமறியா அப்பாவியாய்
இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய்
என்பதை
ஏங்கித் தவிக்கும் உன் விழிகள்
எமக்குத் தெரியப்படுத்துகின்றன..

வரவேற்று உணவளித்து
வாழ்த்தியனுப்புவது
தமிழன் பரம்பரை .
உணவளித்த பின்
உயிரை எடுப்பது
சிங்களவன் வரைமுறை

ஆயுதபூசைகளுக்கு நடுவில்
அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ ..
இப்போது தான்
உலகக் கடவுள்களில்
ஓரிருவர் கண்கள்
நீர்த்து நிறைகின்றன...!

கத்தி ஏந்தியவன்
கத்தியால் குத்தப்படுவான் என்ற
கோமணக் காந்தியின்
குருட்டு வாசகம்
உன்னில் பொய்த்து
உருக்குலைகிறது ..

பிறந்ததிலிருந்து
இறந்ததுவரைக்கும்
எறும்பைக்கூட மிதித்திருக்கமாட்டாய்...
உன்மீது அதற்கான பரிசு
ஒன்பது துளைகளாய் ...!


தலைவன் மகன் என்றால்
அர்த்தம் வேறாயிற்றே..?!!!
அரண்மனை வாழ்க்கை,
அரசவைப் பல்லக்கு,
முன்னேயும் பின்னேயும்
முப்படை.....,
பாடங்களில் இப்படித்தானே
படித்திருக்கிறோம்...


எந்த அடையாளங்களும் இன்றிய
உந்தனின் உடல் - உலகில்
´´முந்தியிருக்கச் செய்கிறது´´
உந்தன் பரம்பரை எளிமையை...

உந்தனின் தியாகத்திற்கு
உண்மை விளக்கம் சொல்ல
எவராலும் முடியாதிருக்கிறது...

ஆனால்;
உனது சாவை
உலகம் முழுவதும்
காட்சிப்பொருள் ஆக்கவே நினைக்கிறேன்
இப்பொழுதும்....


''படம்'' காட்ட மட்டுமே
பழகியிருக்கும் என்னை
´´போராடு´´ என்று சொல்கிறது
உன் சாவு...

ஆனாலும்;
நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் ...
எப்பொழுதும் செவிடனாய்..!!!


-தேவன்-

உலக தாய்மொழி தினம்


நன்றி
தாய் மொழியை போற்றும் அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துகள். அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து நம் தாய் மொழியை காப்போம் . தாய் மொழியில் பெயர் சூட்டுவோம் தாய் மொழியில் கலப்பின்றி பேசுவோம். தாய் மொழியில் கையெழுத்து போடுவோம். உயிரினும் மேலாக தாய் மொழியை நேசிப்போம். இந்திய நாட்டின் மொழித் தீண்டாமை கொள்கையை மாற்றி அமைத்து நம் தாய் மொழியை பேணுவோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்.


உலக தாய்மொழி தினம் 

ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில், இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில், "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.கடந்த, 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.

சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு.
"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

இனத்தின் அடையாளம் மொழி:

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும். இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மொழிகள், தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன. பேச்சு வழக்கை தாண்டி, கல்வியிலும் மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்துகிறது.

எத்தனை மொழிகள்:

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எப்படி தொடங்கியது:

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உருது இருந்தது. 1952ம் ஆண்டு, அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்தனர். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1952, பிப்., 21ம் தேதி ஊரடங்கு உத்தரவையும், மீறி தாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக, 1999ல் இத்தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது.

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.தாய் மொழியின் பெருமை பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

க.ஞானசம்பந்தன் பேராசிரியர், தியாகராஜர் கல்லூரி, மதுரை.:தாயிடமிருந்து பெறுகிற முதல் விஷயம், அவள் கற்றுத் தரும் மொழி தான். "அவள் வாத்திச்சி... அறை வீடு கழகம்' என்பார், பாரதிதாசன். அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, உயர்வடைவர்.

வி.தங்கமணி குடும்பத்தலைவி, மதுரை:எனக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்திருந்தேன். தமிழே வரவில்லை. எனவே, நான்காம் வகுப்பில் இருந்து தமிழ்வழிக் கல்விக்கு மாற்றினேன். தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறாள். மகன் தமிழ் வழியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். தாய்மொழி நன்கு தெரிந்தால் தான், பிறமொழிகளை எளிதாக படிக்க முடியும். எனவே, கல்லூரி செல்லும் வரை, தமிழுக்கே முக்கியத்துவம் கொடுப்போம்.

இ.வீரத்தேவன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆத்தூர்:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். எங்கள் பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துகிறோம். நன்றாக உச்சரிக்கும் ஒரு மாணவன், உச்சரிப்பு சரியில்லாத மாணவனை தத்தெடுக்க வேண்டும். அந்த மாணவனுக்கு உச்சரிப்புத் திறனை கற்றுத் தர வேண்டும். இந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பர். தமிழின் சிறப்பு எழுத்துக்களை, பழைய பழமொழி, புதிர், விடுகதைகள் மூலம் கூறுகிறோம்.

கருவில் கற்கும் மொழி :

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்: இன்றைய தலைமுறையினருக்கு, தாய்மொழி தினம் இருப்பதே தெரியாது. அதைக் கொண்டாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். எதற்கெடுத்தாலும் தமிழ், ஆங்கிலம் கலந்து பேசும் சூழல்; அதை விட அவலமான விஷயம், தமிழில் படிப்பதை, பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்பது. மேலை நாடுகளுக்குச் செல்லும் போது, ஒரு ஆப்பிரிக்கன் இன்னொரு ஆப்பிரிக்கனை சந்தித்தால், நைஜிரிய மொழியில் தான் பேசுவார். எல்லா மொழி பேசுபவர்களும் அப்படித்தான். ஆனால் தமிழன் இன்னொரு தமிழனை சந்தித்தால், ஆங்கிலத்தில் பேசுகின்றார்.தமிழ் மொழி, 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும், புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ், செம்மொழி ஆக்கப்பட்ட பின், ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ், வானவியல் சாஸ்திரம், கணிதம் குறித்த சொற்கள், பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை, இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் பெயர்களை, தமிழில் சொல்ல முடியவில்லை என, கூறமுடியாது. தமிழனைப் போல அகம், புறம் என, வாழ்க்கையை பிரித்து, அதன்படி வாழ்ந்தவர்கள், வேறு நாட்டில் கிடையாது.