கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

சேதுபதி


ஸ்ரீமான் பாஸ்கர சேதுபதி:
பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக
்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது. இத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.
 

கருத்துகள் இல்லை: