கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வாழ்த்துகள்



நோர்வே நாட்டு அரசரும் தென்மார்க்கு நாட்டு பரம்பரையை சேர்ந்த
கறால் (Harald) அவர்களின் இருபத்தைந்தாண்டை தற்பொழுது கொண்டாடுகிறார். 


இருபத்தைந்தாம் ஆண்டை நிறைவு செய்த நோர்வே நாட்டு அரசரரசியருக்கு தமிழர் நாமும் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். தென்மார்க்குப் பரம்பரையாக இருந்தாலும் நோர்வே நாட்டை செம்மையாக ஆண்டுவரும் இவர்கள் போற்றுதலுக்குரியவர். மாந்த நேயம்நேயம் மிக்க செங்கோல் அரசுதான் நீண்ட காலம் வாழும். அமைதியை விரும்பும் நாடான போதும் சில தேசியங்களை நோர்வே தான் முன்னின்று அழித்ததும் கண்கூடு ஆயினும் இவர்கள் மிகவும் நல்ல நேயத்தினர். தாம் அரசர் என்ற போக்கு அறவே அற்றவர்கள். ஒருநாள் மே 17 கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போழ்து. திடீரென ஒரு உந்துருளி காவற்துறை காவலர் விரைவாக ஓடிவந்து சாலையை மறித்தார் ஆனால் எவரையும் அதட்டவில்லை இயல்பாக நின்று பார்த்தார் பின்னே இவர்களின் சொகுசுந்து வருவதைக் குடுப்பத்தோடு பார்த்தோம்.அவர்கள் எங்களைப்பார்த்து சிரித்துக் கைகாட்டிக்கொண்டு சென்றனர்.நாமும் பதிலுக்குக் கைகாட்டினோம்.அப்படி ஒரு இயல்பான குடும்பத்தினர்.

கருத்துகள் இல்லை: