கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

"மஞ்சு விரட்டு"


கலித்தொகையில் முல்லைக்கலியில் சல்லிக்கட்டு என்ற விளையாட்டு பற்றிக்கூறியுள்ளது உவப்புக்குரியது. நல்லுருத்துவச் சோழன் முல்லைத்திணையை நன்கு ஆய்வு செய்து எழுதியுள்ளார். நல்லந்துவனார் கலித்தொகையில் தொகுத்துள்ளார். தமிழரின் வீரவிளையாட்டுகளில் மஞ்சு விரட்டு முக்கிய விளையாட்டாகும். தமிழர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய தொன்மைமிக்க விளையாட்டு .கரப்பா கல்வெட்டுகள் மிகத் திறன்பட காட்டுவது சல்லிக்காளையைத்தான்.
முல்லையில் கொடிய விலங்குகளில் இருந்து பெரும்பாலும் புலியிடமிருந்து காக்க காளையில் வீரம் பார்ப்பார். காளையை அடக்கும் தமிழ்க்காளையையே தமிழ்ப்பெண்டிருக்கு வதுவை செய்து கொடுப்பர்.


"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்"

அதாவது காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயமகள் கணவனாக ஏற்கமாட்டாள் என்கிறது இச்செய்யுள்.


ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும் மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபட்ட பின் தொழுவிற் கூடுவர். தொழுவென்பது காளையடக்கும் இடத்தைக் குறிக்கும். ஏறுகள் விளையாட்டுக்கு அணியமாக நிற்கும். அவற்றின் கொம்புகள் கூர்மையுடைய கணிச்சி என்ற படை போன்று விளங்கும். இச்சல்லிக்கட்டு (சல்லியைக் கட்டுதல்) பின்னாளில் ஜல்லிக்கட்டென மருவிற்று. சுப்புரமணியம் போன்று வாயால் வீரவிளையாட்டு புரியும் பார்ப்பார்க்குத் தெரியுமே தமிழர் வீரவிளையாட்டின் மகிமை?




கருத்துகள் இல்லை: