கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 16 நவம்பர், 2015

தழையில் தங்கியிருந்தக்கால்( Hytte Life )

  

தழையைச் சென்றடைந்ததும் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டோம். பண்ணைவளர்ப்பில் முன்னெடுத்துக்காடாக விளங்கினார்கள். மாடுவளர்ப்பு மந்தைவளர்ப்பு கோழிவளர்ப்பு

அவர்கள் பண்ணைவளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள் அதுமட்டுமல்லாமல் சிறந்த கல்விமான்களாக விலங்கினார்கள். நாங்கள் தழையில் தங்கும் நாளில் அவர்களும் வேறொரு தழைக்குச் செல்வதற்கு அணியமாக இருந்தார்கள். அங்கு அவர்கள் குழந்தைகளை மலை ஏறுவதற்குக் கொண்டு செல்வதாக என்னிடம் கூறியிருந்தார். வேற்று கிரக வாசிகளைப்போன்று எம்மோடு பழகவில்லை தங்களுடைய உறவுகளாகவே பழகினார்கள். வெள்ளையினத்தவர் பண்ணைமுதலாளிகள் பெரும் தேசத்துக்கே சொந்தக்காரர்கள் ஆனால் மனிதர்களோடு எப்படி பழவேண்டும் என்று கற்றிருக்கும் பண்பாளர்கள். எங்கள் தமிழைப்போன்று பேசுவதால் தானோ நல்லவர்களாக உள்ளார்கள்.
  


அடுத்தநாள் நாங்கள் செங்குத்து மலைக்கு செல்ல இருந்ததால் அதைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்தோம். பிரட்டிவந்த புலால் துண்டுகளை வாட்டி உண்பதற்கு அணியமானோம். இலையுதிர் காலத்தில் காடுகளிலிலோ அல்லது தீபற்றக்கூடிய இடங்களிலோ வாட்ட முடியாது அப்படிச் சட்டத்தை ,மீறினால் பணம் தண்டமாக கொடுக்கவேண்டி வரும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலாகத்தான் இருக்கும் சரியாகத் தெரியவில்லை. தழைக்கு முன்னால் நிலவு எறித்துக்கொண்டிருந்தது புத்தம்புதிய நிலவு மஞ்சள்காகக் காட்சியளித்தது. நிறைமதியில் மகன் பாவலன் நிலாச்சோறு கவளமாகத் தரவும் இரட்டிப்புச்சுவை இது போல் போறு எல்லோருக்கும் வாயப்பதில்லை மற்றைய இரு சிறுவர்களும் இறைச்சி வாட்டுவதற்காக காத்திருந்தனர். பாவலனுக்கு புலால் அதிகம் பிடிக்காது.உயிரினங்களைக் கொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பான்.

   

எனக்கும் உயிரினங்களைக் கொல்வது பிடிக்காது. கறியாகிக் கொடுத்தால் நன்றாக சுவைத்துச் சாப்பிடுவேன். மூத்தவனுக்கு பாட்டன் முப்பாட்டன் போல் இறைச்சி வேண்டும்.கடைக்குட்டிக்கு சுவையிருக்கவேண்டும். புலாலை வாட்டுவதற்கு இருவரும் காத்திருந்தனர். நாம் இருவரும் சோறுண்டுவிட்டு புலாலை வாட்டினோம். முதலில் சூட்டில் வைத்துவிட்டு பின் வாட்டினோம். உணவை உண்டுவிட்டு இருந்து கதைக்கத்தொடங்கினோம்.ஓரிரவு என்பதால் நீண்ட நேரம் பேச இயலவில்லை மலை ஏறும் ஆவலில் நால்வரும் உறக்கத்துக்குச்சென்றோம். ஆளுக்கொரு பொத்தகத்தைக் கொடுத்துவிட்டு எனது இயல்பான பொத்தகக்கட்டுடன் படுத்திருந்து வாசிக்கத் தொடங்கினேன். தழையில் தங்குவதற்கு நானும் குழந்தைகளும் எண்ணூறு குரோணர்கள் செலித்தினோம்.ஆ.....மறந்து போனேன் நாங்கள் சென்ற பின்னேரம் மாடுகள் ஆரவாரத்துடன்கானப்பட்டன. மாடுகளை தழையின் சொந்தக்காரரின் தகப்பன் வந்து அடக்கிவிட்டுச்சென்றார்.மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன் எல்லாம் கடுவன் மாடுகள்.நிற்க ஆழ்ந்த வாசிப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு இரவெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தேன்.வாசித்த நூல் சிலப்பதிகாரம் புகார் காண்டம்.பின் அறிதுயில்


காலையில் எழுந்து காலைக்கடனை முடித்து விட்டு நாங்கள் தங்கிய அறைகளை துப்புரவாக்கி குளித்துவிட்டு மலைக்குப் புறப்பட்டோம். அதற்கு முன் கோழிகளோடும் சேவல்களோடும் விளையாடிவிட்டு திறவு கோலை கதவத்தில் கொழுவிட்டுப் புறப்பட்டோம். இப்படியொரு தழைவாழ்வை முன்னர் ஆகூழாக எண்ணியதில்லை. மலையும் மலை சார்ந்த நிலத்தில் கிடைக்கும் உவப்பு நாம் பெற்றபேறு. வடதுருவத்து மலைத்தொடர் அழகோவழகு.
"நீர்சூழ் மலைத்தொடர் நன்னாடு
நீண்டு கிடக்குது ஒளியோடு
பாரில் உதித்த வளநாடு
பார்பார் நோர்வே முதல்நாடு
பார்பார் நோர்வே முதல்நாடு"
 _ச.உதயன்_

கருத்துகள் இல்லை: