கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

இவையாவும் கற்பனை

காலை நான்கு இருபத்தொன்பது மணியிருக்கும் நிலவைச் சிவந்த நிலையில் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கடம்பன் . திடீரென ஏதோ ஒரு நினைவு அவனைத் திரும்பிப்பார்க்க வைத்தது. அது ஒரு இருட்டறை அவனும் இன்னும் சில கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தார்கள். அந்தச்சில கைதிகள் பிலிப்பைன்சு நாட்டைச்சேர்ந்தவர்கள் கடற்கொள்ளையர் என ஐயங்கொண்டு சிறிலங்கா சுங்கத்தினர் கைதுசெய்திருந்தனர். அன்பு அவனும் வெளிநாடு போகவேண்டி திருப்பியனுப்பப்பட்டு தடுக்கவைக்கப்பட்டிருந்தான். தொலை பேசி பேசுவதற்கு எந்தப் பணமும் அவனிடம் இல்லை அந்த நண்பர்கள் வைத்திருந்த பணத்தில் ஆளுக்கொரு அமெரிக்க டொளரைf கொடுத்து உவதியிருந்தார்கள்.நினைவு மீளவும் மீண்டும் நிலவைப் பார்த்தான் வியப்போடு .....!
விகாரையில் வாழ்ந்த பசுமை வாழ்வு நெஞ்சை நெகிழ வைத்தது. அந்த  விகாரையும் அதில் வாழ்ந்த பிக்குமாரும் நினைவுகூறத்தக்கவர்கள். பிக்குக்களின் தலைமைபிக்கு மிகவர் நல்லவர் நல்லவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர். நெருங்கிப்பழகி அன்புகாட்ட வல்லவர். புத்தரின் மறு உருவம் என்றே சொல்லலாம். ஒரு நாள் விகாரையில் அடைக்கலம் புகுந்த காலம் தனியார் கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருந்தேன். காலையில் கல்விகற்கச் செல்வது வழக்கம் அன்று காலை புத்தகுரு வெளியே சென்று திரும்பியிருந்தார் அவர் வந்த வழியில் சோதனைசெய்து கொண்டிருந்தார்கள் சிறிலங்கா காவற்துறையினர். கல்விநிலையத்திற்குச் செல்வது நல்லதல்லவென்று தடுத்து நிறுத்தி மீண்டும் அறைக்குச்செல் என்று கூறியதால் தான் உயிரோடு இருப்பதை நினைத்து நிலவை பார்த்தான் வியப்போடு ......!

கருத்துகள் இல்லை: