கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தானி ஓட்டுனர் க. சி. வாசன்

                      
சென்னையில் ஆட்டோ  ஓட்டுனர் சங்கத்தை பார்த்திருப்பீர்கள் . எங்காவது அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை பார்த்ததுண்டா ? ஆட்டோவிற்கும் தானிக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள். ஆட்டோ என்பதின் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி - AUTO) . இப்படி தன் வாழ்வியலை முழுவதும் தமிழாகவே தமிழ் தேசியத்தின் அடிப்படையில் கட்டமைதுள்ளார் தோழர் திரு .க
. சி. வாசன். இவரை பற்றி ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் . பிரபாகரன் என்னும் பெயரை தனது கையில் பச்சையாக குத்தியவர் இவர்.



இந்த திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை ஏற்படுத்தியவரும் இவரே. தானி ஓட்டுனர். இவரின் தானிக்கு தனிச்சிறப்பு உண்டு. தானி எங்கும் தமிழரின் குரலாக தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக் குமரன். திருவள்ளுவர் படங்கள் , உள்ளே பிரபாகரன் படம் (இடது புறம் தானியின் கண்ணாடியின் உள் எடுக்கப்பட்ட படம் )

பயணிகள் பலரும் உள்ளே ஏறியவுடன் ஒலிக்கும் பாடல் 'வருவாண்டா பிரபாகரன்' என்னும் பாடல் தான் . எல்லோரும் இவரை கேட்கும் கேள்வி பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தான். அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்பது தான் இவருடைய பதில்.

தானியில் தமிழ் ஈழ தேசிய, தமிழர் எழுச்சிப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதில் பயணம் செய்பவர்களுக்கு , இறங்கும் போது கொஞ்சம் தமிழ் உணர்வையும் ஊட்டி விடுகிறார் திரு வாசன். தன்னுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்களையே வைத்துள்ளார். தமிழ் தேசிய கருத்தில் ஆழமாக வேரூன்றியவர். இப்படி சில தமிழர்கள் இருப்பதால் தான் தமிழும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் படுகிறது.

இவர் சொல்லும் செய்தி : தமிழர் அடையாளங்களை , தலைவர்களை வெளியே பகிரங்கமாக பயன்படுத்துங்கள் . எல்லோரும் அறியும் படி செய்யுங்கள் . யாருக்கும் அஞ்சவேண்டாம் , அரசுக்கும் அஞ்சவேண்டாம் . நாம் தமிழர் என்பதில் கர்வம் கொள்வோம் என்பது தான். இவருக்கு நம் வாழ்த்துகளை பகிராலாமே அலை பேசி எண் : 9841399204


கருத்துகள் இல்லை: