கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 15 மே, 2007

செந்தமிழ்ப்பாட்டு

1
கடவுள் வணக்கம் ( படர்க்கைப் பரவல் )
' பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
இசைத்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை/ ஆதி
ப.
காலையிலே விழித்தெழுவோம் - முதற்
கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்
கைகுவித்தே தொழுவோம் ( நாளும்) ( காலை)
அ.
வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி
வினைகளை முறையே நிறைவேற்றி
மாலையில் நல்ல மனவமைதியுடன்
மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்) ( காலை)
*
நூல்>இசைத்தமிழ் கலம்பம்
ஆசிரியர்>'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
2
*
தமிழின் பதினாறு தன்மை
ப.
தொன்மையொடு முன்மை
தென்மையொடு நன்மை
தாய்மையொடு தூய்மை
தழுவிளமை வ்ளமை
அ.
எண்மையொடும் ஒண்மை
இனிமையொடும் தனிமை
செம்மையொடு மும்மை
திருமையொடும் அருமை
அ.
இங்ஙன்பதி னாறு
இலகுந் தமிழ்க் கூறு
எங்குமேயிவ் வாறு
எடுத்துமிகக் கூறு
*
நூல்> இசைத்தமிழ் கலம்பகம்
ஆசிரியர்> 'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
3
*
இதுவும் அது ( தமிழ நாகரிக முன்மை )
*
' கப்பற்பாட்டு' மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு
*
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
*
மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே
மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!
*
பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழே
பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!
*
பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழே
பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!
*
அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே
அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே!
*
அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே
அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே!
*
பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே
பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!
*
கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே
கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே!
*
வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே
வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே!
*
துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே
பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே!
*
இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே
ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!
*
கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே
கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே!
*
ஆசிரியர்>' மொழிஞாயிறு'

கருத்துகள் இல்லை: