கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

பழந்தமிழரின் கடல் மேலாண்மை”

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ்ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரி... 
ன் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.


தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும்கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம்கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின்பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா- மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் – மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி- ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும்பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமானவிஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தைதமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில்நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!! பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது. கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி - kalingatamil@yahoo.co.in
நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம்நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளிஅமைப்பாளர்கள்.

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும்குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம்இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.
நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.
Sam Mahenthirn

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஒரு தமிழன்.....!


உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....




எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க
ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல்

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.

‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.
 தமிழ் விழி

மனிதனின் மற்றுமோர் வெற்றி

மனிதனின் மற்றுமோர் வெற்றியாக செவ்வாயில் தரையிறங்கிய எந்திரன் மிகவும் திரம்பட இயங்கி மனிதனின் வெற்றியைப் பறைசாற்றியிருக்கிறது. செவ்வாய் பல ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் நிலவு போல் தெரிந்திருப்பின் செம்மையாக இருந்திருப்பின் செவ்வாய் என பெயரிட வாய்ப்பாக இருந்திருக்கும். இன்று மனித இனம் செவ்வாய் நோக்கி வீறுநடை போடுவதற்கு முன் அதன் தொழில் நுட்பம் வீறுகொண்டு செவ்வாயில் தரையிறங்கியுள்ளது. செவ்வாயில் எந்திரனைத் தரையிறக்கிய அனைத்துத் தேசியம் சார்பாக அமெரிக்காவுக்கு தமிழாசான் வாழ்த்தைத்
தெரிவிக்கின்றேன்.

வானியல் அறிவு

ஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்.

"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின...

மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்"

விளக்கம்:

பிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.

மாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார். ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது. அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது. அது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.

இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும்! ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.

இனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.

வான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? பூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும்(ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.

இதையே இராமாயணம் பாடிய கம்பர், வாலியின் இறப்புப் பற்றிப் பேசும் போது

"தன்னடி ஆழ்த லோடும் தாமரைத் தடங் கணானும்
பொன்னுடை வாளை நீட்டிப் நீயிது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்."

இதில் வாலி இறந்து, வானுலகத்திர்க்கும் அப்பால் உள்ள உலகத்திற்கு செல்கிறான் என்று குறிப்பிடுகின்றார். அது எந்த உலகம்?

அது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.

"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்
கட்புலம் காண விட்புலம் போயது
இறும்பூது போலும்"

"ஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது."
இது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி! இதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். இது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.

இவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை! பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை!

ஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழையும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம். அது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை-------
தமிழின் குர
ல்


தானி ஓட்டுனர் க. சி. வாசன்

                      
சென்னையில் ஆட்டோ  ஓட்டுனர் சங்கத்தை பார்த்திருப்பீர்கள் . எங்காவது அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை பார்த்ததுண்டா ? ஆட்டோவிற்கும் தானிக்கும் என்ன தொடர்பு என்று கேட்காதீர்கள். ஆட்டோ என்பதின் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி - AUTO) . இப்படி தன் வாழ்வியலை முழுவதும் தமிழாகவே தமிழ் தேசியத்தின் அடிப்படையில் கட்டமைதுள்ளார் தோழர் திரு .க
. சி. வாசன். இவரை பற்றி ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் . பிரபாகரன் என்னும் பெயரை தனது கையில் பச்சையாக குத்தியவர் இவர்.



இந்த திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை ஏற்படுத்தியவரும் இவரே. தானி ஓட்டுனர். இவரின் தானிக்கு தனிச்சிறப்பு உண்டு. தானி எங்கும் தமிழரின் குரலாக தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக் குமரன். திருவள்ளுவர் படங்கள் , உள்ளே பிரபாகரன் படம் (இடது புறம் தானியின் கண்ணாடியின் உள் எடுக்கப்பட்ட படம் )

பயணிகள் பலரும் உள்ளே ஏறியவுடன் ஒலிக்கும் பாடல் 'வருவாண்டா பிரபாகரன்' என்னும் பாடல் தான் . எல்லோரும் இவரை கேட்கும் கேள்வி பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தான். அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்பது தான் இவருடைய பதில்.

தானியில் தமிழ் ஈழ தேசிய, தமிழர் எழுச்சிப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதில் பயணம் செய்பவர்களுக்கு , இறங்கும் போது கொஞ்சம் தமிழ் உணர்வையும் ஊட்டி விடுகிறார் திரு வாசன். தன்னுடைய குழந்தைகளுக்கு தூய தமிழ் பெயர்களையே வைத்துள்ளார். தமிழ் தேசிய கருத்தில் ஆழமாக வேரூன்றியவர். இப்படி சில தமிழர்கள் இருப்பதால் தான் தமிழும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் படுகிறது.

இவர் சொல்லும் செய்தி : தமிழர் அடையாளங்களை , தலைவர்களை வெளியே பகிரங்கமாக பயன்படுத்துங்கள் . எல்லோரும் அறியும் படி செய்யுங்கள் . யாருக்கும் அஞ்சவேண்டாம் , அரசுக்கும் அஞ்சவேண்டாம் . நாம் தமிழர் என்பதில் கர்வம் கொள்வோம் என்பது தான். இவருக்கு நம் வாழ்த்துகளை பகிராலாமே அலை பேசி எண் : 9841399204


"தமிழின் வரலாறு"



தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இ

து குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

மொழி வரலாறு
இலக்கிய வரலாறு
இன வரலாறு
தமிழ் எழுத்து வரலாறு 

மொழியின் தோற்றம்
ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

இலக்கிய தோற்றம்

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.
இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.

"விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே"

என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

இனத் தோற்றம்


மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.
இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.
இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.
உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.

தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.

மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர்.

1.திராவிட இனம்
2.ஆப்பிரிக்க இனம்
3.மங்கோலிய இனம்
4.ஐரோப்பிய இனம். 


மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர்.
அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.

இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.

பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.

திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.
இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.
இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.

வரிவடிவ வரலாறு





தமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)
பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது

"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.
இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.

புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் ப்யூலர் எனும் அறிஞர்.

தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர். அதில் காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அதைப் பதிவு செய்யும் பொருட்களையொட்டி மாறுதலைக் கண்டே வந்துள்ளதை படத்தில் காண்க.

19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.
தூய தமிழ்ச்சொற்கள்