கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

யாம் பார்த்த இலண்டன்

உலகத்தையே ஓரளவு ஆண்ட ஒரு நாட்டுக்கானபயணம். பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. நோர்வேயில் இருந்து இலண்டன் இலண்டனில் இருந்து நோர்வே என அமைந்த பயணம் எட்டு நாள் வரை அமைந்தது. இறயன் என்ற விண்ணூர்தியில் ஏறி கிட்டமட்ட இருமணிநேர பயணத்தில் பின்னிரவு இலண்டனை யாம் வந்தடைந்தேம்.


நோர்வே நாட்டு விண்ணூர்ர்தி நிலையம் போலல்லாமல் மிகவும் பெரிதாகவும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் விண்ணூர்தி நிலையம். பேருந்துகளின் ஊழியம் மகிழுந்துகளின் ஊழியம் மிகவு அருமையாக இருந்தது. நிறைய மக்களைக்கொண்ட நாடான போதும் அந்த நாட்டின் ஒழுங்கமைப்பு  மிகவும் சிறப்பானது. உலகுக்கே நேர்த்தியைச் சொல்லிக்கொடுத்த நாடல்லவா!

நாடு நல்லது நம்மினம் கூடாது என்பதைப் போல  கரோ என்ற இடத்தில்
தங்கியிந்தபோது அறிந்து கொண்டேம். யாம் தங்கியிருந்தது தென்கரோவில் கூடுதலாக இந்தியர்களும் இலங்கையர்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட இடம் போல் இருந்தது இலண்டனின் பழைய நாகரிக நிலம் கரோ . குப்பை களுக்குக்குறைவில்லை அவற்றை வெள்ளையர்கள் துப்புரவு செய்வது அருது போலும்,நோர்வேயில் இருந்து போன எமக்கு இடத்தைப் பார்த்ததும் அருவருப்பாக இருந்தது.எச்சித்துப்பல்களையும் வெற்றிலைத்துப்பல்களையும் துப்புரவு இல்லாத்த குப்பைத்தொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக எம்மவர்களும் இடங்களே இப்படி இருக்கும் என்றல்ல சீக்கியர்களின் பொற்கோயிலுக்குச் சென்றிருந்தேன் என்ன எழில் தூய்மையின் இருப்பிடம். அதே நேரம் தமிழ்க் கோயிலுக்குச் சென்றிருந்தேன் பத்தி வருவதை விட வாந்தி வந்துவிடும் அவ்வளவு அழுக்கு நிறைந்த கழிவறைகள்.கருவறை மட்டும் துப்புரவாய் இருந்தால் போதாது இறைபத்தி நிறையவேண்டுமென்றால் சுற்றாடல் துப்புரவாக இருக்க வேண்டும்.

ஆனால், எம்மக்களின் வீடுகள் துப்புரவாகவும் கோயில்கள் போலவும் இருந்தன.ஆனாலும் ஒரு கவலை நிறைந்த்திருந்தது மூத்தோரின் நிலைதான் பிள்ளைகளின் வேலைப்பழுவும் பேரப்பிளைகளோடு ஒட்ட முடியாத மொழியும் அவர்களை புறம்பாக்கியே வைத்திருக்கிறது.பாழடைந்த கட்டிடத்தில் மூத்தோர் முற்றம் என்ன கொடுமை உலகத்திலேயே இரண்டாவது பணக்காரன் ஒரு தமிழன். இலணடன் மக்களிம் இல்லாத் பணமா? ஒற்றுமை இன்மையால் இந்த இனம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.ஆளாளுக்கு தமிழ்ப்பள்ளிகள் ஆளாளுக்கு வானொலிகள். ஒன்றுபடாத எதுவும் உருப்படியாகாது.

நிற்க,
இலண்டனின் நகரப்புறத்திலிருந்து நகருக்குச் சென்றிருந்தேன். பழைய வரலாற்றைப் பேணுவதோடு புதிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கிக்கொண்டு பிரித்தானியா என்ற நாட்டை மேம்படுத்தும் மக்கள். இதுதாம் பிரித்தானியர்களின் வெற்றி அவர்கள்  வெற்றிக்கு அனைத்து நாட்டு அறிவாளிகளும் தம் மூளைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பணம் கிடைத்தால் போதும் தாம் வாழ்ந்தால் போதும் என்பதே வேற்று நாட்டு மக்களின் மோகம் அதை வெள்ளையர்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகம் என்றதும் தஞ்சைப் பெருங்கோயில் இந்தியா என்றும் தாச்மகால் இலண்டன் என்றது பெரிய மணிக்கூட்டுக் கோபுரம் தான் கண்ணில் வரும்.


காலை எழுந்து நண்பன் எழிலோடும் என் மகன் தாரகனோடும் இலண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டேம்.குகைவண்டி(Tube) பிடித்துக்கொண்டு புறப்பட்டோம்.ஒரு வண்டியில் ஏறி மாறி மற்ற வண்டியில் ஏறி முதலில் மெழுகுபொம்மைகள் வைத்துள்ள அருங்காச்சியத்துக்குச் சென்றடைந்தோம். ஆடி கால பள்ளி விடுமுறை விடாத்ததால் பெருங்கூட்டத்தில் இருந்து தப்பித்தோம்.அதிக நேரம் காவல் நில்லாது அருங்காச்சியில் உள்ள மெழுகு பொம்மைகளைக்(உலக சாதனை மாந்தரைக்) கண்டுகளித்தோம்.


அத்தனை பொம்மைகளும் அப்படியே அச்சொட்டாக அந்த மாந்தரைப் போலவே இருந்தன. பல ஆசைகளோடு வந்தத மக்காள் தம் விருப்புகளை நிழல் பிடித்துக்கொண்டனர்.அங்கு எனக்கு பிடித்தவர்கள் பலரிருந்தனர் முதலாம் எலிசபத்து,காந்தி,நெல்சன் மண்டேலா,ஒபாமா,நியுட்டன்,மைக்கல், உலக ஓட்டவீரர் இப்போதிருக்கின்ற உசைன் போல்த்து, இன்னும் பலர் எனக்குப் பிடித்தமானவர்களோடும் நிழல் பிடித்துக்கொண்டேன்.

முதலாம் எலிசபத்து இலண்டனில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய வணிக நாடக பிரித்தானியத்தை மாற்றியமைத்தார் அவரின் அந்த உறுதிக்குத் துணையாக நின்றவர் ஒரு கிறித்துவ பாதிரியார் ஆவார் 
உள்நாட்டுக் குறும்பரையும் வேற்றுநாட்டு ஒற்றரையும் வேரறுத்தாள்.


அவர்கள் குடும்பத்தினருக்கும் இடையூறில்லாமல் குற்றவாளிகளையே கொன்று முடித்தார். அதுவே அவ்வரசியின் வெற்றி அவரின் வரலாறு போல் தமிழருக்குத் தலைவர் மே.தகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சொன்னால் மிகையாகாது. 
பெரு மாந்தரை பார்க்காத நாம் நேரிலே அவர்களை பார்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஒரு பெண். சிந்தனையும் செயல் வடிவமும் கொண்டவர்கள் இங்கிலாந்துப் பெண்கள். இங்கிலாந்துப் பெண்ணே பெண்ணுரிமையைப் பாடுதற்கு வித்திட்டவர்."கேளடாமானிவா எம்முள் கீழோர் மேலோர் இல்லை"_மாகவி சுப்பிரமணிய பாரதியார்.ஐரோப்பிய பெண்களைப் போல தமிழீழப்பெண்களும் தரணியோங்க வாழ்ந்தனர் தலைவன் வேலன் மகன் காலத்தில்.
எத்தனை அடக்கு முறைகள் இருந்தாலும் அதிலிருந்து மீண்ட இலண்டன் போல் ஆபிரிக்க் அரிமா நெல்சன் மண்டேலாவுக்கு வந்தது. ஈட்டி முனை என்ற இயக்கத்தைக் கூட்டிப் போராடுகையில் வெள்ளையரால் சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் சிறைக்கோலம் கொண்டு இனத்தின் அமைதிக்காக வாழ்ந்து வருபவர் ஆவர்.

மெழுகு பொம்மைகளின் அருங்காட்சியம் உருவாக்குவதற்கு சிந்தனையும் செயல் வடிவமும் கொடுத்தவர் அம்மையார்
தொடரும்.....?





ஞாயிறு, 21 ஜூலை, 2013

கவிப்பெருவேந்தர் வாலி















வாலியின் இயற்பெயர் டி.எஸ்.இரங்கராஜன். தமிழ் மீது தீராத பற்று கொண்டிருந்த இவருக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்த மாலியைப் போல் சிறந்த ஓவியராக வேண்டும் என்பதற்காக இவருடைய பள்ளித் தோழர் பாபு, இவருக்கு வாலி என்று பெயர் சூட்டினார். அன்றிலிருந்து வாலி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
`"ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊங்குவிற்பவனும் தேக்குவிற்பான்"
என்பது கவிஞர் வாலியின் வரிகள்
1931 இல் இருந்து 2013 இவ்வாண்டு வரை வாழ்ந்தவர் வாலி.நான்கு தலைமுறைக்கும் பாட்டெழுதி வெற்றிகண்ட வாலிபக்கவிஞர் வாலி.முருகனை தன் வரிகளால் போற்றிப்பாடியவர்
"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" மனமுருகப் பாடிய இப்பாடல் முருகப்பக்தர் அனைவருக்கும் அமுதம்.

1958 ஆம் ஆண்டு அழகர்மலைக் கள்ளன் திரையில் தொடங்கி ஏராளம் பாடல்களை சாகும் வரை வடித்தார் நம் கவிப்பெரு வேந்தர் வாலி.

சிவாசிகணேசனின் 156 திரைக்கும் எம்சிஆர் அவர்களுக்கு 128 பாடல்களும் எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட 15000 பாடல்களை எழுதி பெயர் பெற்றார் என்று திரையுலகம் புகழாரம் சூட்டுகிறது.
வாலியவர்கள் அம்மாவுக்காக எழுதிய பாடல் அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

அவர் எழுதிய இறுதிப்பாடல்

அவன் அறிவான் எது தீமை
அவன் அறிவான் எது நன்மை
யார் அறிவார் அவன் தீர்ப்பு
அவன் கையில் நம் வாழ்கை

அவர் எழுதிய இறுதிக் கவிதை

நேற்றிரவு சுவாசம் மிகமோசம்
நரசிம்மனையே பயமுறுத்தி விட்டேன்
நன்றியுடன்
வாலி


சனி, 29 ஜூன், 2013

கிறிசியான் மாநிலம் (Kristiansand)

நோர்வேயின் தென்னகத்தே அமைந்துள்ளது கிறிசியான்சன்(Kristiansand) என்னும் இந்த நகரம் முன்பு இந்நிலத்தை ஆண்ட மன்னன் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் பல சிறப்புகள் உள. இந்நகரைச்சுற்றிக்கடல் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெருங்கப்பல்களின் இறங்கு துறையாக அமைந்துள்ளது.கணிசமான மழைவீழ்ச்சி காணப்படுவதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை இடருக்குள் தள்ளுவதுண்டு.
சாலையோர வழிகாட்டி
கிறிசியான் தலைமுறையில் இவர் நான்காம் அரசர்
இவள் பெயர் கமிலா
கமிலா.கொல்லத்து 1813 ஆம் ஆண்டு பிறந்து 1895 ஆம் ஆண்டு தமது எண்பதிரண்டாவது அகவையில் இயற்கையெய்தினார். இவருடைய தந்தையார் திறமையான ஓவியர் இவருடைய உடன்பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகையால் இவருக்கு இயல்பாக குடும்பச்சூழல் கலை சூழ்ந்ததாய் அமைந்ததால் மிகத்திறன்பட்டவராய் வளர்ந்து நோர்வேயின் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்திருக்கிறார். இவரைச் சிறப்பித்து நோர்வே நாட்டுப் பணத்தாளான 100 குறோனரில் திருவுருவைப் பதித்துள்ளனர்.இவரது பதினான்காம் அகவையில் இருந்து பதினாறாம் அகவை வரைக்குள் மொழியிலும் இசையிலும் மிகத்திரனுள்ளவராய்த் திகழ்ந்துள்ளார். கவிதாயினியாகவும் பாடலாசிரியராகவும் குமூக அக்கறையுள்ள எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.தம் கணவரின் பேருதவியோடு செல்லச்செழிப்போடு வாழ்ந்தவர் கணவர் தம் இறப்புக்குப் பின்னர் மிகவும் வறியவராக வாழ்ந்து இயற்கையெய்துள்ளார்.
இவர் வரலாற்றை மேலும் பிறமொழியில் படித்துக்கொள்ள
                                  http://en.wikipedia.org/wiki/Camilla_Colle



ஞாயிறு, 2 ஜூன், 2013

ஐம்பூதங்களே மன்பதை

மன்பதை எனும் சொல்லை பாவாணர் தேவநேயப்பாவாணர் அவர்களின் நூல் தொகுப்பிலிருந்து கற்றுக்கொண்டேன். மன்பதை எனும் மாந்த நேயம் இன்று நம்மிடை அற்றுப் பேவதற்கு என்ன கரணியம் என்று உலகம் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றது. மதத்தைத் தோற்றுவிக்காமல் மன்பதையைத் தோற்றுவிப்பதற்கே பல துறவிகள் முன்வந்துள்ளனர்.



சித்தார்த்தர்(புத்தர்),இயேசு,நபிகள்,வள்ளளார்,விவேகானந்தர் அவர் கிளைப்பிறப்பினர். ஒருவருடைய திறன் அவரோடு முடிவடையும் என்பதே உலகப் போக்கு.அவரைப்போல அவரே அவரைப் போல் வேறொருவரை உருவாக்க முடியாது. ஆனால் அவரைப் போல் உருவாகலாம் அவர் தாம்.  போதிதர்மர். மன்பதையை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் அதுவும் பொற்றோரில் இருந்தல்ல அவர் பரன் பரையில் இருந்து தொடங்க வேண்டும். அவர் தம் போக்குகளே செயல்களாக வடிவம் பெறுகின்றன.போக்குகளை செயல் வடிவமாக்குவது எவ்வாறு அதற்கு தமிழரின் பண்பாடும் அவர் தாம் அறிவியலுமே எடுத்துக்காட்டுகள்.

ஐம்பூததோடு ஒரு சேர வாழ்தல் அதற்கு உள்ளங்கையே எடுத்துக்காட்டு. ஐந்து விரலும் ஐம்பூதங்கள் அவற்றுள் கட்டவிரல் - தீ, சின்னிவிரல் - நீர், மோதிரவிரல் - காற்று , நீட்டுவிரல் - நிலம், சுட்டுவிரல் - வானம் இவற்றுள் ஒரு உண்மையைக் கவனியுங்கள் இந்த ஐந்து விரல்களையும் சேர்தே நாம் உண்ண வேண்டும் என்பதே நம் பெரியோரின் சட்டம்


தீயோடு சேரா நீர் அருகில் இல்லை ஆனால் காற்றோடு சேர்ந்திருக்கும் அதாவது இருபங்கு நீர்மம் ஒருபங்கு உயிர்மம் இவற்றோடு நிலம் நிலதோடும் வானத்தோடும் தீ சேர்ந்திருக்கும் என்பதே ஐந்து விரல்களின் ஐம்பூதம் காட்டும் உண்மை. இந்த ஐம்பூதங்கள் சரியாக செயற்பட வேண்டும் என்றே ஐந்து கோயில்களைத் தமிழகத்தில் நம்முன்னோர் கட்டிவைத்தனர் அந்தக் கோயில்கள் தனித்தனியே இருப்பது கண்டு நம் சத்குரு மனம் நோகுவர்.
சத்குரு ஜக்கி வாசுதேவன்

ஐம்பூதங்கள் சரியாக இயங்கவில்லையெனில் எந்தப் பயனும் இல்லை. அவை சரியாக இயங்கும் போது தான் இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டாக இருபத்தொராம் நூற்றாண்டின் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்

அவர்களைக் கூறலாம். ஐம்பூதங்கள் சரியாக நம்மூளையை இயக்கும் போழ்தே மனநிலை மன்பதையாக மாற்றம் பெறுகின்றது.

எழுதுனன்:
 கதிரவேலு பொன்னம்பலம் சத்தியானந்தன் உதயன்

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழக மாணவர்கள்



தமிழீழத்துக்காக தமிழக மாணவர்கள் வடக்கிருத்தலை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பெருஞ்சோழன் கத்தியின்றி அரத்தமின்றி நடத்திய இந்தப் பாடுகிடத்தல் என்னும் வடக்கிருத்தல் இந்திய மத்திய அரசை நோக்கியும் ஐநாவை உலுக்கவும் தொடங்கியிருக்கிறது. வெற்றி உறுதி தமிழீழம் அருகில் மலரும் நன்றி மாணவர்களே.http://youtu.be/sGj7LiiZVtA
அன்புடன்
தமிழாசான்.