கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்

யப்பானியார்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள்..!

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில், அனாதைகளாக இறந்த அடிமைத் தமிழ்த் தொழிலாளர்க்கு எமது அஞ்சலி !1942 - 1945 ஆண்டுகளில் ஜப்பானியர்களால் 2- வது உலகப் போரின்போது தாய்லாந்து - பர்மா தொடர்வண்டி போடப்பட்டது. இதில் அனாதைகளாக இறந்த 90000 - பேரில் பலர் தமிழர்கள் என்பது உலகறியாத உண்மையாகும். அவர்கள் நோயினாலும், பட்டினியாலும் அனாதைகாளாக இறந
்து அழிந்தது, மலேயாவிலிருந்த அவர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பது கொடுமையல்லவா ? அந்த வலி பட்டவருக்கே புரியும் !

இங்கிலாந்து, கனடா, டச்சு , ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து இந்த மரண ரயிலில் இறந்த தன், நாட்டு படை வீரர்களின் உறவினர் இன்றும் வந்து அஞ்சலி செய்கிறார்கள் ! ஆனால் அநாதை தமிழன் அழிந்ததை தமிழராகிய நாம் அறிவோமா ? நாம் தான் அறியாதவர்கள் ஆயிற்றே ! எதைப் பற்றியும் கவலைப் படாதவர் ஆயிற்றே ! என்று தனது மனப் புலம்பலை வெளியிட்டுள்ளார் தஞ்சையில் இருந்து கே.கண்ணன் அவர்கள்.

1942 ஆம் ஆண்டு யூன் மாதம் ஜப்பானின் இராணுவ ஜெனரல் ஒருவர், 250 கிலோமீட்டர் நீளமான ரயிவே பாதை ஒன்றை நிர்மாணிக்க உத்தரவிட்டார். தாய்லாந்தில் இருந்து பர்மா வரை இந்த ரயில்வே பாதையைப் போட சுமார் பதினாறாயிரம்(16,000) பேர் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் பலர் தமிழர்கள். இவர்கள் பின்னர் சிறைக்கைதிகள் போல நடத்தப்பட்டனர். ரயில்வே பாதை கட்டி முடிக்கும் வரை அவர்களை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இக் கைதிகளில் சீனர்கள், தமிழர்கள், மலேசியர்கள், பர்மியர்கள், ஜாவா தீவு மக்கள் மற்றும் டச் மக்களும் அடங்குவர். கொத்தடிமைகளாக இவர்கள் பல ஆண்டுகள் நடத்தப்பட்டனர். போதிய உணவை உண்ணாமலும், சத்தில்லாத உணவுகளை அவர்கள் உட்கொண்டதாலும் அவர்களில் 9,000 பேர் படு பயங்கரமாக மரணமடைந்தனர்.

கடும் நோயல் பாதிக்கப்பட்டும், சத்தான உணவின்றியும், மிகவும் பரிதாபமாக இறந்த தமிழர்கள் குறித்து இதுவரை பலர் அறிந்திருக்கவில்லை. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அனாதைகளாக இறந்த இத் தமிழர்கள் தொடர்பாக அதிர்வுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை நாம் தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். தாய்லாந்து நாட்டில் காஞ்சனாபுரி என்னும் இடத்தில் இவர்களுக்கான நினைவுத் தூபி இருக்கிறது. அங்கே சீனர்கள் , டச்சுக்காரர்கள், அமெரிக்கர்கள், மற்றும் கனடா நாட்டு மக்கள் சென்று தமது உறவினர்களுக்கு மலர்வளையங்களை வைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழர்கள் சிலர் அங்கே சென்று, அனாதைகளாக உலகமே அறியாத நிலையில் இறந்துபோன எமது தமிழ் மக்களுக்கு ஒரு அஞ்சலியை ஏன் செய்யக்கூடாது ?

நன்றி: Mathivathanan Amirthanathan





கருத்துகள் இல்லை: