கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 15 டிசம்பர், 2007

இலகுதமிழில் இலக்கணம்

எழுத்துகளின் பிறப்பு என்பது யாது ?
எழுத்துகளை ஒலிக்கும்போது, உள்நின்ற காற்று விசையுடன் எழுவதால் ஒலியணுக்களின் கூட்டம் ஒலியாகச் செவியில் புலனாகிறது. இவ்வொலி மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்னும் இடங்களில் பொருந்தி நாக்கு, மேல்வாய், பல், உதடு ஆகியவற்றின் முயற்சி வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்துகளாக ஒலிக்கிறது. இதுவே எழுத்துகளின் பிறப்பாகும்.

எழுத்து பிறக்கும் இடங்கள் யாவை ?

எழுத்து கழுத்து, மூக்கு, மார்பு, தலை ஆகிய இடங்களில் பிறக்கின்றன.

எவ்வெவ்வுறுப்புகளின் முயற்சியால் எழுத்துகள் பிறக்கின்றன ?

மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய இடங்களில் பொருந்தி எழும் ஒலி, வாயைத் திறத்தல் , இதழைக் குவித்தல், நாவின் நுனி, அடிப்பகுதிகள் பற்களோடும், மேல்வாயிலும் பொருந்துதல், உதடுகள் ஒன்றொடொன்று பொருந்துதல் ஆகிய முயற்சியால் வெவ்வேறு எழுத்துகளாய்ப் பிறக்கின்றன.

கீழ்வருக் எழுத்துகள் எவ்விடத்தில் பிறக்கின்றன ?

ஆ-கழுத்து , ர-கழுத்து , ம-கழுத்து , க-மார்பு , ய- கழுத்து , ஐ- கழுத்து , ற-மார்பு, ந-மூக்கு

கருத்துகள் இல்லை: