வியாழன், 27 ஜனவரி, 2022
ஞாயிறு, 10 அக்டோபர், 2021
இலைகொட்டும் காலம்
Spiterstulen Turisthytte
அனுசரணை வழங்கியவர் சாந்தக்குமார்
நன்றி.
மதியம் நண்பகல் நான்காம்திகதி கன்னி மாதம் ஐப்பசி எனது பயணம் தொடங்கியது.
Gjerdrum - Holter - Maura - Nannestad - Gjøvik - Lillehammer - Hammer - Oyer - Otta og Lom
எனது மின்னிவசந்தம் தோட்டத்திலிருந்து தொடங்கி இயற்கையின் உச்சி மலைவரை இலை அர்ப்பணிப்புக் காலத்தின் அழகை அளப்பதே நோக்கு.
காக்கை குருவி
எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும்
எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்
என
வெற்றிப்பேரிகை எழுப்புகிறான் ஞானச்சித்தன் பாரதி. அவனைத்தொடர்ந்து நானும் நானும் கூத்தாடினேன்
சக்தியின் கூத்து ஒளியாவது போல் பாரதியின் கூத்து மொழியாவது போல் எனது கூத்தும் எண்ணங்களின் இழைகளாக எண்ணற்ற மின்கம்பிகளை இணைத்தபடி மின்சாரம் பாய்கிறது. என் எண்ணத்திலிருந்தும் ஓட்டத்திலிருந்தும் ஒரு புதிய மின்கலத்தை நானே எனக்காக உருவாக்குகிறேன் அதுவுமே பராசத்தியின் கூத்தல்லவா
இருளாற்றலை ஒளியாற்றல் கவ்விச்சிறு காதல் செய்யலாமே அன்றி இருள்பருப்பொருளாற்றலை அடைவதென்பது இயலாதது.
ஒன்று
இன்னுமொன்றை
அடைவதற்குள்
அது
வேறு ஒன்றை
அடைந்திருக்கும்.
இப்படியாகத்தான்
அவனும் நானும்
அவளும் நானும்
அவனும் அவளும்
ஒளியும் இருளும்
'தமிழ்ச்சுடர்'
- கடம்பதாசன் -
தொடர்ந்து நிற்காமல் அறிவுமூப்பன் ஞானக்கலியின் தலைச்சன்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்
தொடர்ந்து வருக, இப்படியாக
இரவுப்பொழுதாகிறது Otta அல்லது ஒத்தாவை அடைய இரவாகிவிட்டது தோராயமாக ஒன்பது மணி
சூரியனை விட்டு புவி ஆண்டுக்கு ஆறுமாதம் தள்ளி விலகிச் சுற்றுகிறாள் போலும். அவளும் பெரியாரின் சுயமரியாதைக்காரியோ! சூரியனின் காலடி என்றதும் தொழமறுத்த காரணத்தாலோ ஊடலில் அவளின் உடையே சிவப்பும் மஞ்சளுமாய் ஒளியின் வாட்டத்தி்ல் மாறிவிட்டது. ஒளிக்கு ஒளியூட்டும் காலம் ஒளிக்குச்சத்தி ஊட்டும் காலம் இதுவே சத்தியானந்தம் ஆனந்த சக்தி
அடைமழைக்காலம்
மழையைப் போற்றுதூஉம்; மழையைப் போற்றுதூஉம்
ஒத்தாவிலிருந்து உலூமை அடைய இரவு பத்துமணி
இரவு+இ
இரவியின் வரவுக்கு மலைகள் காத்துக்கிடக்கின்றன
இங்கு
மலைகள் இருளாக இருளும் மலைகளாக வெளிச்சம் வாடியதால் மலைகளும் வாடிக்கிடக்கிறது இருளில் இருந்து விடுதலையை பெற்றுக்கொடுக்க. கிரேக்கருக்கும் யூதருக்கும் ஈராக்கியருக்கும் அகத்தியர் கலத்துக்கும் சக்தி போதவில்லை. தெசுலாவும் சக்தி ஊட்டத்தில் சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டாலும் முதலாளித்துவம் இருளாக்கியே வைத்திருக்கிறது.
ஆற்றின் கரையோரம் அலாதியாகத் தூங்கியெழுந்து காலை ஆறுமணிக்கெல்லாம் மலையடிவாரத்திலிருந்து ஒருமணிநேரம் ஊர்தியில் செலவளித்து தங்குமிடத்தை அடைந்து ஆனந்தமாக சத்தியை ஊட்டினேன்.
கூடாரப்படுக்கையில் உறங்கி தீவளர்த்துச் சூடாக்கி ஏணைகட்டியாடித் தூங்கி பயண அலுப்புக்குத் தீர்வுகண்டேன். பின் கட்டுச்சோற்றைச் சூடாக்கி உண்டு களித்துவிட்டு நண்பகல் ஒரு மணியளவில் பொடி நடைக்கு ஆயத்தமாகி காலாற அருவிகளோடு அளவளாவி ஆற்றோடும் அத்திணைகளோடும் உறவாடிவிட்டு இருப்பிடம் திரும்பினேன்
......தொடரும்
கடம்பதாசன் நினைவலைகள்
வெள்ளி, 11 ஜனவரி, 2019
தமிழாசான் பதிவேடு விருது 2019
௨) செந்தமிழ் வாணருக்கான விருது சாந்தக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௩) சிறந்த தமிழாசியருக்கான் விருது வனிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௪) கலைவாணருக்கான விருது சுதன் அவர்களுக்கு வழங்கப்பது.
௫) தலைக்கோல் விருதுகள் சமந்திக்கும் சப்தகிக்கும் வழங்கப்பட்டன.
௬) தற்காப்புக்கலைர் சாதனையாளருக்கான விருது சிவகணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௭) சிகரச்செல்வருக்கான விருது தாரகன் பாவலன் கோவேரன் மூவருக்கும் வழங்கப்பட்டன.
திங்கள், 27 ஆகஸ்ட், 2018
நோர்வே நாடும் இயற்கையும்( Noreg og Natur )
பார்வைக்குச் சில படங்களுடன் பயணக்குறிப்பு.






















