திங்கள், 14 மே, 2007
தோப்பு
"பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிடனாக வுணர்வினின்
வல்லோர் அணிபெறச் செவ்வன செய்யுள்" ( நன்.268)
என்று பவணந்தி முனிவர் கூறினாரேனும், அணி செய்யுட்கே சிறப்பாக வுரியது என்பது அவர் கருத்தன்று. சில உடம்புகளில் இயற்கையாய் அழகு அமைந்து கிடப்பது போல , வல்லோர் செய்யுள்களிலும் இயல்பாக அணி அமைந்திருக்கும் என்பதே அவர் கருத்தாகும். அஃதாயின், அல்லோர் செய்யுளில் அணி இயல்பாய் அமைந்திராது என்பதும் பெறப்படும். இனி , வல்லோர் செயயுளில் மட்டுமன்றி அவர் உரைநடையிலும் அணி அமைந்திருப்பது இயல்பே, ஆகவே, அணியானது செய்யுள், உரைநடை ஆகிய இரண்டற்கும் பொதுவாம்.
பொருளை விளக்குவதும் அழகுபடுத்துவதுமே அணியின் நோக்கமாதலானும், செய்யுளிற் போன்றே உரைநடையியிலுமழகிய கருத்துகள் அமையுமாதலானும், கருத்தின் அழகே அணியாதலானும், உரைநடைக்கும் அணி உரித்தென்னும் கூற்றில் யாதொரு வியப்புமின்று. இதனாலேயே, தொல்காப்பியத்தில் செய்யுளிற்கு முன்னர், அணியியற்பாற்பட்ட உவமவியல் கூறப்பட்டதென்க.
ஒரு கருத்தைத் தெரிவிக்க ஒரு சொற்றொடரே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. ஒரு சொல்லாலும் ஒரு கருத்தைத் தெரிவிக்கலாம். ஆகவே, தனிச்சொற்களிலும் அணி அமைதற்கிடனுண்டு.
அணிகட்கெல்லாம் தாயானதும் தலைமையானதும் உவமையே யாதலானும், தொல்காப்பியத்துள்ளும் அஃதொன்றே கூறப்படுதலானும், இக் கட்டுரையில் பெரும்பாலும் உவமையணிச் சொற்களே, அவற்றுள்ளும் கவனிகத்தக்க ஒரு சிலவே, கூறப்படும்.
1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணையுவமம் பெண்ணியல்
2. மக்கள் உறவும் தொடர்ச்சியும்
3.அரசனும் குடிகளும்
4.வாழ்க்கையியல்பு
5.சில குணமும் செயலும்
6.நூலும் செய்யுளும்
7.கருமநிலை
8.வறுமை
9.நோய்
10.இறப்பு
11.அஃறிணைப் பொருளுக்கு உயர்திணை யுவமம்
12.உயர்திணை வினைக்கு உயர்திணை யுவமம்
13.அஃறிப் பொருளுக்கு அஃறியுவமம்
14.இருதிணைப் பொதுப்பொருளும் உவம்மும்
1.உயர்திணைப் பொருளுக்கு அஃறிணைவமம் பெண்ணியல்
பசுந்தமிழ்
வணக்கம்!
வாருங்கள் தமிழ் கற்போம்.
எண் - எண்ணுவது ( மனதால் எண்ணுவது எண் எனப்படுகிறது. எண்ணம் )
ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணப்பழகிய பின்னரே கணக்கில் மேம்பட்டார்கள் நம் முன்னோர் . கணிதம் - கண் + இதம் = கணிதம்
கண்ணும் எண்ணமும் கணிப்பு
1
ஒன்று : ஒல் - ஒ. ஒல்லுதல்(பொருந்துதல்). ஒத்தல் பொருந்தல்.
ஒல்+ து = ஒன்று= பொருந்தினது, ஒன்றானது.
2
இரண்டு : (இரள்) + து = இரண்டு. ஈரள் - ஈருள் - இருள் - இரவு
ஈரள் = ஈர்ப்பது(அறுப்பது)
இரவு இரண்டாக அறுக்கப்படுக்கப்படுகிறது
( முன்னிரவு/ பின்னிரவு)
3
மூன்று = ஒன்றுக்கு எதுகையாய் அமைந்தது.
மூன்று மூக்கைக் குறித்தது. மூக்கில் உள்ள மூன்று துளைகளை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மூசு(மூசுதல்) > மூஞ்சு >மூக்கு>மூ>மூன்று.
4
நான்கு = நால்+ கு ( நாலும் திக்குகள்)
நாலு>நாலுதல்>ஞாலுதல்( தொங்குதல்)
நால்>நாலம்>ஞாலம். ந - ஞ, போலி
5
ஐந்து = ஐ+ து= ஐது - ஐந்து
ஐ ( கை)
கையில் விரல்கள் ஐந்து
6
ஆறு = வழி, ஒழுக்கநெறி, சமயம். மார்க்கம் என்னும் வடசொல் இப் பொருளதாதல் காண்க. ஐந்திணை வழிபாடுகளும் இன் ( நாஸ்திக) மதமுஞ் சேர்ந்து ஆறாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது வேறொரு வகையாய் அறுசமயம் என்னும் தொகை வழக்கு மிகத் தொன்மை வாய்ந்தது.
7
ஏழு = ஏழ் - ஏழு - எழு.
ஏழ்= இசை
யாழ் என்னும் சொல் ஏழ் என்பதன் திரிபு. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையையெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்ப்டுவது ஏழ்.' ஏழிசைச் சூழல்' 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக.
8
எட்டு = எண் + து
எண் = எள். இப் பெயர் ஆகுபெயராய் உணவைக்குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும்; எள்ளைக்குறிப்பின், அதன் காயிலிலுள்ள பக்கங்களின் தொகைபற்றியதாயிருக்கலாம்.
நெல், புல்( கம்பு ) , சோளம், வரகு, திணை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்ற எட்டே முதலாவது எண்கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின்வகையா யடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்ப்ட்டிருக்கலாம்.
9
ஒன்பது
இந்த எண் தொளைகளைக் குறித்தது.
தொள் + து = தொண்டு. தொள் = தொளை. உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்த்லின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு - தொண்டி = தொளை. ஒ.நோ: தொண்டை = தொளையுள்ளது
10
பத்து
இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு.
பல் + து = பஃது = பத்து
******************************************************************************
*
திக்குகள்
*
திகை - திக்கு - திசை
திக்குகள் இரண்டாகி, நான்காகி, எட்டாக அழைக்கப்படுகின்றது.
*
எல்லைகள் இரண்டு
எல்லை என்பது கதிரவன் எழுந்த கரையில் இருந்து விழுகின்ற கரை வரை உள்ள திக்கு.
எல் + ஐ = எல்லை ( ஐ இரண்டாம் வேற்றுமை )
*
கிழக்கு , மேற்கு
கிழக்கு - கதிரவன் கீழே இருந்து மேலே எழுவதால் கிழக்கு எனப்பட்டது.
கீழ் + கு = கீழ்க்கு - கிழக்கு
மேற்கு - அதே கதிரவன் மேலே இருந்து கீழே விழுவதால் மேற்கு எனப்பட்டது.
மேல் + கு = மேல்கு - மேற்கு
*
வடக்கு , தெற்கு , கிழக்கு , மேற்கு
வடக்கு - வடமரங்கள் (ஆலமரம்) நிறைந்து காணப்பட்டமையால் வடக்கு எனப்பட்டது.
வடம் + கு = வடம்கு - வடக்கு { ( அக்கு என்ற ஒலி சேர்ந்து கொண்டது) , ( வடம் - கயிறு ) }
தெற்கு - தென்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டமையால் தெற்கு எனப்பட்டது.
தென் + கு = தெற்கு
( கு என்பது நான்காம் வேற்றுமை)
வடக்கு , வடமேற்கு , மேற்கு , வடகிழக்கு , கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , தென்கிழக்கு
*********************************************************************
அவை
தாய் மொழி என்கிறார் தமிழ் மொழியை
தன் குழந்தைக்கு அப்பனை காட்டுகிறாள்
dady என்று
அவை சிரிக்கிறது
ஆ...... ஆ........ ஆ........ ஆ.......
தமிழ்த்தூவல்> அரசன். தமிழரசன்
ஆசிரியர் : சிறுவன் ஒருவனை பார்த்து,
"உயிர் எழுத்து எத்தனையடா குழந்தாய் " என்று கேட்டார்.
மாணவன் :) " பன்னிரண்டு " என்றான்
ஆசிரியர் :) " எப்படி நினைவுபடுத்திக்கொண்டாய் " என்றார் .
மாணவன் :)" திலீபன் அண்னை உண்ணா நோம்பிருந்த நாட்களை நினைவுபடுத்திக் கொண்டேன் " என்றான் அவன்.
ஆசிரியர் :) " நன்றடா நன்று , நீ தமிழையும் காப்பாற்றுவாய் மண்ணையும் காப்பாற்றுவாய் " என்று அந்த மாணவனை உவந்து புகழ்ந்தார் ஆசிரியர்.
அவையில் தமிழ்ச்சேய் என்ற அறிஞன் கூறவும். அவை வியந்து நோக்கியது.
தூவல்> அரசன்.தமிழரசன்
3
திருமணத்தின் பின் கலந்த பிற்பாடு அடுத்த நாள் காலை.
கணவன் :) " மைவிழி, பெண்ணுக்கு அழகைக் கொடுப்பது கண் மை என்பார்.
நீ ஏன் இன்னும் மை பூசவில்லை.
மனைவி :) " எனது கண்ணில் நீங்கள் இருக்கின்றீர்க்ள். உங்களுக்கு கரியைப் பூச விரும்ப வில்லை. என்றாள் அவள்.
தன் மனைவியின் காதலைக் கண்ட கணவன் அமைதியானான்.
அவையில் பகல்வன் என்ற அறிஞர் கூறவும். தமிழ்ப் பெண்ணின் காதலைக்கண்ட அவையு சற்று நாழி அமைதியானது.
தூவல்> அரசன். தமிழரசன்
4
காதலன் :) "நிலா! நான் உன்னை பார்க்கும் போழ்து
நீ மண்ணைப் பார்க்கிறாயே கோபமா? நாணமா?"
காதலி :) "இந்த மண்ணுகாக என்ன செய்து விட்டோம்; இப்பொழுது நாம் காதலிப்பதற்கு" என்றாள் அவள்.
ஆணாக இருந்தும் மண்ணை எண்ண மறந்து விட்டேனே என நினைத்து வெட்கி நின்றான்.
அவையில் தாமரை என்ற அறிஞை கூறவும் பெண்ணின் பொது நலம் கண்டு உவகை கொண்டது அவை.
பதிவு> அரசன். தமிழரசன்
5
சிறுவன் :) " ஐயா! பெரியவரே கையில் தேங்காயை வைத்திருக்கிறீர்கள். இந்த கோயில் கல்லில் அடிக்கப்போகிறீர்களா?"
பெரியவர் :) "ஓம், தம்பி."
சிறுவன் :) "ஏன்? ஐயா தேங்காயை கல்லில் சிதறி அடிக்கிறார்கள்."
பெரியவர் :) "அது வந்து தம்பி. இந்த சிறட்டை போன்று மனதைச் சுற்றி தீய குணங்கள் மூடியுள்ளன. சிறட்டை போன்று அவை சிதறி உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் வெள்ளை மனத்தை அடையாளம் கண்டுவிடலாம்." என்றார் பெரியவர்
சிறுவன் :) "அதுதான் பொருள் தெரிந்து விட்டதே அதற்குப் பிறகு ஏன் உடைக்கிறீர்கள்." என்று கேட்டான்.
பெரியவர் தனது அறியாமையை எண்ணி மனம் கூனி நின்றார்.
' சிறியவரும் பெரியவராவார் நல்ல எண்ணம் இருந்தால், பெரியவரும் சிறியவராவார் அறியாமை குடியிருந்தால்'
தூவல்>அரசன்.தமிழரசன்
சனி, 12 மே, 2007
சமயம்
முருகன் என்ற வடிவமே கற்பனை வடிவம் தான் என்பதை முதலில் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
முருகன்
முள்-முரு-முருகு-முருகன்(அழகு,எழில்)
முள்-முளை-முளைத்தல்
முருகனின் கையில் வேல்
(முன்னை காலத்து மக்கள் பயன்படுத்திய கருவிகளில் ஒன்று வேல்)
முருகனின் ஊர்தி மயில்
(குறிஞ்சி நிலத்தில் வாழும் பறவை மயில்)
முருகனின் கொடி சேவல்
(சண்டைக் களத்தில் இறங்கினால் சாகும் வரை சண்டையிட்டுக் கொண்டே சாகும் பறவை சேவல் ) . இது மறத்தின் அடையாளம்.
எம் தமிழ் முன்னோர் தாம் கொண்ட அடையாளமே தான் அவை. முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் தோன்றவும் இல்லை. அவன் மயில் ஏறி உலகை
சுற்றவும் இல்லை. சூரனை கொல்லவும் இல்லை எல்லாம் பொய்.
தமிழ் நிலத்தை ஆண்ட பாண்டியனை முருகன் என்று முன்னோர் அழைத்திருக்கலாம். அவன் தமிழ் வளர்த்திருக்கலாம்.
தமிழ்த்தூவல்>அரசன்.தமிழரசன்
சிவனார் யார் ?
சுள்>செள்>செவ>சிவ>சிவம்>சிவன் ( நெருப்பு ).
நெருப்பை வணங்கும் பத்தியில் தமிழ் முன்னோர்களால் நெருப்புக்கு வழங்கிய பெயர் தான் சிவம் சிவன் என்ற பெயர்கள்.நெருப்பை வணங்கும் வழிபாடு கிட்டத்தட்ட 3000 ஆண்டு காலத்துக்கு முந்தியதை சிந்துவெளி அகழ்வாய்வுகள் வெளிப்படையாக காட்டுகின்றன. அதாவது சில சிற்பக்கலைகள் கொண்டுள்ள அமைவுகளைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. சிவன் தனாக தோன்றவுமில்லை அவன் முருகனை உருவாக்கவும் இல்லை சிவனும் முருகனும் ஒன்றுதான் இரண்டும் நெருப்பைத் தான் குறிக்கிறது.
திருமால் வழிபாடுதிருமால் வழிபாடும் சிவனார் வழிபாட்டைப்போல காலத்துக்கு முந்தியது இவ்வழிபாடு மழையை வணங்கும் வழிபாடு அதாவது மால்-மழை ( மால் என்பது கருமையைக் குறிக்கின்ற சொல். கரிய முகில்கள் ஒடுங்கி மழையைத்தருகின்றது. அதையே மால் வழிபாடு என்றனர் ந்ம் முன்னோர். 'திரு' என்பது சிறப்பாகவும் தெய்வத்தன்மை கொண்டவைகளுக்கும் திரு என்ற சிறப்பு அடை கொடுப்பது உண்டு. எடுத்துக்காட்டாக திருநீறு, திருச்சோறு( பிரஷாதம்), திருமணம், திருவாளன்,...........திருமால் என்று அழைத்தனர் மால் வழிபாட்டை.
