கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 16 பிப்ரவரி, 2013

வைத்திய குறிப்புகள்


நன்றி

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3௪ மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3௪ மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10௧2 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3௪ மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

"ஆங்கிலம் என்பது அறிவல்ல"



வழக்கம் போல் தமிழில் பெயர் பலகை இல்லாத ஒரு கடையின் முன் நின்றேன். அது வண்டிகளுக்கு பசை ஒட்டிகள் விற்பனை செய்யும் கடை. இரு நவீனத்துவ ஆண்களும் ஒரு நவீனத்துவ பெண்ணும் கடையின் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.

'யாருங்க கடை உரிமையாளர்' என்று கேட்டேன். 'நான் தான்' என்றார் அந்த இளைஞர். நம் அமைப்பின் அட்டையை கொடுத்து , 'உங்கள் கடைக்கு தமிழில் பெயர் இல்லை , உடனே மாற்றுங்கள்' என்றேன் . உடனே அருகில் இருந்த பெண் ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்டார். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது அரசாணை அதனால் மாற்ற வேண்டும் என்றேன்.

உடனே அந்த பெண் , ஏ மேன் ! இங்க எல்லோருக்கும் இங்க்லீஷ் தெரியும் எல்லோரும் படித்தவங்க அதனால் இங்கில்ஷ் மட்டும் இருந்தால் போதும் அது தப்பில்லை என்றார்.

நான் சொன்னேன் இது தமிழ் நாடு, இங்கிலாந்து இல்ல. இங்குள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் இருக்க வேண்டும் . ஜப்பான் போய் பாருங்க தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாடு . அங்கு எல்லா பெயர் பலகையும் அவர்கள் தாய் மொழியில் தான் உள்ளது . முதலில் தாய் மொழியை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் . படிப்பிற்கும் ஆங்கிலத்திற்கும் என்ன சம்பந்தம்? 'ஆங்கிலம் என்பது அறிவல்ல, அது வெறும் மொழி தான் ' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன். அந்த மூன்று நபர்களும் அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தனர் !
நன்றி.
பழனி

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மாமனிதர் பேராசிரியர் எலியேசர்



மாமனிதர் பேராசிரியர் எலியேசர்

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் (மார்ச் 10, 2001).

இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது “எலியேசர் தேற்றம்” பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது.

கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (“‘PhD”) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற விஞ்ஞானி போல் டிராக் (”Paul Dirac”) அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (”DSc”) பட்டமும் பெற்றார்.

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக ”அமைதிக்காக அணு சக்தி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (”La Trobe”) பல்கலைக்கழகத்தில் பயன்முகக் கணிதத்தில் (Appied Maths) பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்து 1983இல் இளைப்பாறினார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில ‘இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்’ தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் ”Order of Australia” விருது 1996இல் வழங்கப்பட்டது.

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் புகழ்பெற்ற தேற்றம்:

புரோத்தன் (நேர்மின்னி) ஒன்றின் மின்புலத்தினூடாக இலத்திரன் (எதிர்மின்னி) அந்த புரோத்தனின் மையத்தை நோக்கிச் (”radially”) செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த இலத்திரன் லோரன்ஸ்-டிராக் (”Lorentz-Dirac”) சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது இலத்திரனில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் ‘எல்லை அடைவாக அதிகரிக்கும்’ (”asymptotically”) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது ”எலியேசரின் தேற்றம்” எனப்படுகிறது.
[Eliezer, C.J., ''The hydrogen atom and the classical theory of radiation'', Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)]



விக்கிபீடியாவில் பேராசிரியர் சி. ஜே. எலியேசர்.

சி. ஜே. எலியேசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேராசிரியர் சி. ஜே. எலியேசர்

பேராசிரியர் சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 1918 – மார்ச் 10, 2001) பிரபல கணிதவியலாளரும் தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948 வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

எலியேசர் அவர்கள் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர்லண்டன் கேம்ப்றிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (PhD) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் போல் டிராக் (Paul Dirac, 1902-1984) அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (DSc) பட்டமும் பெற்றார்.

பேராசிரியராகப் பணி

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக அமைதிக்காக அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுழியம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படைத்தார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (La Trobe) பல்கலைக்கழகத்தில் பயன்முகக் (பிரயோக) கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார்.

தமிழ் ஆர்வலர்

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில ‘இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்’ தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

அவுஸ்திரேலியாவின் உயர் விருது

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது.

தமிழீழத்தின் உயர் விருது

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் தேற்றம்

நேர்மின்னி (புரோத்தன்) ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி (இலத்திரன்) ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் (radially) செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் (Lorentz-Dirac) சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் ‘எல்லை அடைவாக அதிகரிக்கும்’ (asymptotically) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் எனப்படுகிறது.

Eliezer, C.J., The hydrogen atom and the classical theory of radiation, Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)

எலியேசரின் ஆய்வுக் கட்டுரைகளில் சில

Eliezer, C.J. , The Interaction of Electrons and an Electromagnetic Field, Reviews of Modern Physics, 19 (3): 147-184 1947
Eliezer, C.J., On the Classical Theory of Particles, Proceedings of the Royal Soceity of London Series A – Mathematical and physical Sciences, 194 (1039): 543-555 1948
Prince, G.E., Eliezer, C.J., On the Lie Symmetries of the Classical Kepler- Problem, Journal of Physics A – Mathematical and General 14 (3): 587-596 1981
Prince, G.E., Eliezer, C.J., On Symmetries of the Time-Dependent N-Dimensional Oscillator, Journal of Physics A – Mathematical and General 13 (3): 815-823 1980
Eliezer, C.J., Note on Time-dependent harmonic oscillator , SIAM Journal of Applied Matethematics 30 (3): 463-468 1976
Eliezer, C.J., Wave Equation of the Electron, Nature, 167 (4237): 79-79 1951

Maamanithar Christie Jayaratnam Eliezer (1918-2001) A Conquering Scientist

தூதுவளை!


மூலிகைக் கீரைகள் !!!

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை!

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும். பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும் காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும்.

பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

நன்றி
பரமக்குடி சுமதி
பசுமைப் புரட்சி 

கருப்பட்டி



சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!
***********************************

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய காரைக்-குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்க-லிங்கம், ‘‘இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது... கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்... இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்... உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்... சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது’’ என்றார்.

நன்றி : பசுமை விகடன்