கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 3 அக்டோபர், 2012

உயர் திரு பெருந்தலைவர் காமராஜர்

ஒரு அருமையான தலைவரை இழந்த தினம் இன்று (உயர் திரு பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினம் இன்று )


1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார
். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:

மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை


அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் சவகர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது
இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

இப்படி ஒரு அருமையான தலைவரை இழந்த தினம் இன்று ...

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

சாம் மகேந்திரன்



நாகராஜன்


இவர் பெயர் நாகராஜன். கடலூரைச் சேர்ந்த இவர் சிதம்பரத்தில் MSc, Software Engineering final year படிக்கிறார். இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றியைத் தந்திருக்கின்றது. 

தவுட்டிலிருந்து எரிவாயு(gas) உற்பத்தி செய்யலாமெனக் கண்டுபிடித்துள்ளா
ர். இரண்டு பக்கம் அடைக்கப்பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அதைச் சூடு படுத்தினால், அங்கு எரிவாயு உருவாகி அந்த டப்பாவிலிருந்து சின்னக் குழாய் மூலமாக வெளிவருகின்றது. அதைத் தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிறத்தில் அழகாகப் பிரகாசமாக எரிகின்றது. இந்த எரிவாயுவைச் சிலிண்டரில் அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியுமென நாகராஜன் கூறுகிறார்.

ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவைக் கண்டுப்பிடித்த நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி. இப்படியான சிறிய வாழ்க்கைக்கு உதவக்கூடிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்துவோம். நன்றி.

கிருஷ்ணவேணி

கொசுங்கள விரட்ட நாம் என்னலா செய்வோம்? hit அல்லது beygon spray உபயோகிப்போம் இல்லனா allout liquid, goodknight liquid அப்படி எதாவ்து ஒரு இரசாயன பொருள உபயோகிப்போம், நம்ம கிட்ட இருக்குர இயற்கை பொருள வைச்சு எதாவது உபயோக படுத்தி இருக்கரோமானு? கேட்டா, பதில் வந்து இல்லை. ஏனா காசு இல்லாதவந்தா இயற்கையான் பொருள உபயோகிப்பா, காசு உல்லவங்க கஸ்ட்ட பட்ரதே இல்ல கடையிலேயே வாங்கிடலாம், 

இயற்கை பொருள உபயோகிசா கவுரவ க
ுறைவுனு நிரைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க, அதுனாலத்த ந்ம்ம நாட்டுல இயற்கையோட மகதுவமே நிரையப்பேருக்கு தெரியாம போய்டுச்சி...

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரில M.Phil., படிக்கிர மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுவ விர்ட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வு பனியில இடுப்பட்டிருந்தாங்க, ஈரோட்ல நடந்த இளைஞர் அறிவியல் விழாவ்ல, கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது, அதுக்கு அவங்களுக்கு முதல் பரிசும் கிடைச்சுது. இந்த விசியம் தமிழ்நாட்ல இருக்ர நமக்கு எத்தன பேருக்கு தெரியும்?




ந்ல்ல விசியங்கல தெரிஞ்சிக்கோங்க, புதுமைய கண்டுபிடிங்க, மத்தவங்களுக்கு உதவுங்க.



செவ்வாய், 2 அக்டோபர், 2012

பிட்டங் கொற்றன்


புறநானுற்று பாடல்களின் ''பிட்டங் கொற்றன்'' எனும் குறுநில மன்னனைப் பற்றி ஒரு பாடல் இருக்கின்றது.சங்கக் காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வியலை அப்படியே நம் கண்முன்னே நிறுத்துகின்றது .அதே நேரத்தில் நம் முன்னோர்கள் இயற்கையோ
டு சேர்ந்து செய்த விவசாயம் முறை நமை ஆச்சரியப்பட வைக்கின்றது.அப்பாடலின் எளிய உரை:-

‘''''அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168'''''

''அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச்சாரலில் காந்தள் மலர்கள் மலர்ந்து இவ்விடத்தில் மனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த காந்தள் மலர்களின் கொழுந்த கிழங்குகளைக் கிளறித் தின்னுவதற்காக காட்டுப் பன்றிகளின் கூட்டம் அங்கு வருகின்றன. தங்களின் கூரிய கொம்புகளால் (பற்கள்) நிலத்தைக் குத்தி,கிளறி,நொண்டி காந்தள் மலர்களின் கிழங்குகளை வெளிய எடுத்து தின்று விட்டு செல்கின்றன.இப்பொழுது அந்த நிலம் பார்ப்பதற்கு ஏர் கொண்டு உழுந்த வயல்க்காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது.இதைப் பார்த்த அந்த மலைவாழ் மக்கள் நிலத்தின் மேலிருந்த காந்தள் தழைகளை எடுத்து வீசி விட்டு அதன் மீது தினையை விதைக்கின்றார்கள்.விதைத்த தினை கதிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் அணியமாகின்றன.தினை கதிர்களை அறுவடை செய்ய அந்த மலைவாழ் மக்கள் ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருந்தனர்.நல்லநாளும் வந்தது.அறுவடை செய்ய முதல் விளைச்சலை கடவுளுக்குப் படைப்பது அவர்களின் மரபு.சந்தனக் கட்டைகளால் அடுப்பில் தீ மூட்டி அதன் மீது காட்டு ஆமாக்களிடமிருந்து (மாடு) நுரை தளும்ப கறக்கப்பட்ட புதிய பால் உற்றப் பட்ட பானையை வைக்கின்றார்கள்.பால் நன்றாக கொதித்ததும் அதில் தினையை போட்டு பொங்கல் சமைத்து கடவுளுக்குப் படைக்கின்றனர்.''

இப்பாடல் நமக்கு பல வரலாற்று செய்திகளை சொல்கின்றது.ஒன்றாவது பண்டைய தமிழர்கள் இயற்கையை அழித்து விவசாயம் செய்யாமல் இயற்மையோடு சேர்ந்து விவசாயம் செய்திருக்கின்றார்கள்.இப்போது இருகின்ற இயற்கை அறிஞர் நம்மாழ்வார் போன்றவர்கள் இதுப் போன்ற வியசாய முறைகளைக் கடைப்பிடிக்க வழியுறுத்துகின்றனர் .இரண்டாவது பொங்கல் சங்கக் காலத்திலேயே கொண்டாடப்பட்டிருகின்றது இப்பாடல் உறுதிப்படுத்துகின்றது.மூன்றாவது இப்பாடல் பாடப்பட்ட இடம் குதிரை மலை .நம் தமிழ் பாட்டனான பிட்டங்கொற்றன் ஆண்ட மலை.ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் தற்போது குதிரை மலை தமிழகத்தின் பகுதியில் இல்லை .மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட்ப் பொழுது குதிரைமலையை கன்னட மாநிலத்திடம் இழந்தோம் .தற்போது இந்த குதிரை மலை தென் கன்னட நாட்டில் உள்ளது.இதன்வழி பண்டைய தமிழக இப்பொழுது இருப்பதை விட பரந்து விரிந்து இருந்தது என்பதை தெரிந்துக் கொள்ள முடிகின்றது.இப்பொழுது நம் உரிமைகளை இழந்து எப்படி சுருங்கி விட்டோம் என்றும் உணர முடிகின்றது.


தகவல் - தமிழன் வள்ளுவம்.

இலையுதிர் காலம்


 நன்றி பால் அமரேந்திரன்!!
வாப்பிட்டி என்னும் பெரிய வகை மான் (Elg-எல்க்கு என்றும் சொல்வார்கள்). இது கலை (ஆண்மான்); பிணைக்குக் 'கொம்பு' இருக்காது!


இலையுதிர் காலம் வந்துவிட்டால் மான் வேட்டை தொடங்கிவிடும்.அதிலும் வாப்பிட்டி வேட்டைக் காலம் து.   வேட்டையில் பல வேட்டைகள் உள.தாரா வேட்டை,முயல் வேட்டை,நரி வேட்டை,பன்றி வேட்டை மான்  வேட்டை என்று வேட்டையை வகைப்படுத்தலாம்.  வேட்டையில் ஒன்று பறவை வேட்டை ,           
பறவைக்கு வெடி வைப்பது பற்றிய கூற்று பாரதத்தில் காணலாம். மிகப்பழைய காலத்தில் கண்ணால் கூட கொக்கை வீழ்த்தியுள்ளனர். அவர்களே பெண்களையும் மயக்கித் தம் பாலியலை மேற்கொள்வர்.
இப்படித்தான் ஒருநாள் வள்ளுவரின் வீட்டுக்கு கொங்ணவன் சென்றிருந்தான். வந்தோரை வரவேற்பது தமிழர் சால்பு. அப்படியே வள்ளுவரின் இல்லாள் நாகியார் வந்தவருக்கு வாழையிலை போட்டுப் பரிமாறினார்.கொங்கணவன் கொக்கு சுடுபவன்.தன் நோக்கு பலிக்குமென்று நினைத்தான். அவன் நோட்டத்தை குறிப்பால்  அறிந்து கொண்ட அம்மையார் 
"எனைக் கொக்கென்று 
நினைத்தனையோ கொங்கணவா"என்று
அவர் சொன்னதை கோட்ட கெட்டவன் ஏதும் கூறாமல் எழுந்து சென்றானாம்.வள்ளுவன் தன் மனையாட்டியின் இல்லறத்தைப் புகழ்ந்து ஒரு குறள் எழுதியுள்ளான் .அதில் தன் மனையாளைப் போற்றியும் உள்ளான்.    

 தமிழர் நம் பண்பாட்டைப் பேணுபவள் பெண் என்பதனாலோ பெண் என்பவள் தலைவனால் பேணப்பட்டாள்.பேண் - பெண்/ பேடு என்று முன்னோர் அழைத்திருந்தனர்.இந்தப் பேடு என்ற சொல்லைத்தான் ஆங்கிலேயர் BIRD என்று அழைத்தனர் அதாவது பெண்பறவையை என்று முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் பேசும் போழ்து கூறியிருந்தார்.  

  நிற்க,
வேட்டை தமிழருக்குப் புதிதல்ல. திருவிழாக்களில் வேட்டைத் திருவிழாவென்றாலே களைகட்டிவிடும். அந்தக் காலத்தில் பகைவேட்டையாடுவது மறவருக்குப் பிடித்தவொன்று நறவம் குடித்துவிட்டுச் சென்று  போர்வெறி பிடித்துக் களமாடிய காட்சிகளைப் புறநாநூற்றில் காணலாம்.அந்த மரபில் பிறந்ததனாலோ என்னவோ வேட்டைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பிருந்தது. அதால் நாம் நாளுலாச் சென்றோம்.அது எங்கேயென்றால் நோர்வேயில் உள்ள மவுரா என்ற இயற்கை வளம் நிறைந்த வாப்பிட்டி ஓடித்திரியும்    ஊர்.
மலையும் காடும் வயலும் நிறைந்த வளம் மிக்க மவுரா
மவுரா நோர்வே நாட்டு பெரிய விண்ணூர்தி நிலையம் அமைந்த இடத்திலிருந்து சிற்றூர்தியிற் சென்றால் கால் மணிநேர எடுக்கும் மவுராவை அடைய; குதிரைச் சவாரியும் நடக்கும் வழியாதலால் அளவான வேகத்தில் ஓட வேண்டும். நாம் இளமாலை நேரம் சென்றிருந்தோம். தனி வீட்டில் இருக்கும் எம் நண்பர் தன் குடும்பதினரோடு வாழ்ந்து வருகிறார். துமுக்கியை வைத்திருக்கும் அடையாள அட்டை அவரிடம் இருப்பதால் அவரோடு தாரா வேட்டைக்குச் சென்றிருந்தோம்.ஆற்றில் மீன் பிடிக்க வரும் தாராக்கள் கிட்டமட்ட இருபது தாராக்களைப் பார்த்தோம். இருமுறை வெடிவைத்தார் ஆனால் படவில்லை.அவை சற்று விலகியே பறந்ததால் சுடும் தூரத்தில் எட்டவில்லை.வேட்டையின் குதுகலத்துக்காகச் சென்றிடுந்தோம்;உயிரைப் பறிப்பதுதான் முக்கியமல்ல  என்பதால் மகிழ்வு. சற்று இருளும் நேரமாகியதும் மீண்டும் திரும்பிவிட்டோம்.
மீண்டும் வேறொருநாள் சென்ற போது பழங்களையும் பறிதுண்டோம்.  




இவற்றோடு நில்லாது மீன்பிடிக்கவும் சென்று சின்ன ஓரத்து என்ற மீனைப்பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டோம். மீனுக்கு வலியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் மனிதர்களாகிய நாம் எம் மகிழ்வை மட்டுமல்லவா எண்ணுகிறோம். 

வேட்டைக்கு சென்ற அந்த நாள் சிறப்பானது. உயிர்களைக் கொல்லுதல் தவறு ஆயினும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு.
உயிர்களிடத்தில் அன்பு காட்டுவது தமிழர் சால்பல்லவா!அதனால் மனித உயிர்களையும் காவு கொள்ளாது வாழ்ந்தால் உயிர்கள் உம்மை வணங்கும்.