கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 1 நவம்பர், 2008

உரிமைக்குரல்














இனவெறியரால் தமிழினம் படும் இன்னல்கள்........................


தமிழன் எங்கு அடிவாங்கினாலும் அது நன்முறை, தமிழன் எங்கு திருப்பியடித்தாலும் அது வன்முறை உலகத்திலே! வன்முறையா? வன்முறையா?

_ சீமான் _

சனி, 25 அக்டோபர், 2008

போர்ப்பொறிகள்

ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரை மதிற்பொறிகள்
1.வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய ( எந்திர ) வில்.
2.கருவிரலூகம் = கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
3.கல்லுமிழ் கவண்
4.பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவதாய நெய்.
5.பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா.
6.காய்பொன்னுலை = உருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலை.
7.கல்லிடு கூடை = இடங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங் கூடை.
8.தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி.
9.ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியை கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி.
10.தொடங்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி
11.கவை = கிடங்கிலேறின் கறியத்தள்ளும் இருப்புக்கவை.
12.கைபெயரூரி =மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி
13.சென்றெறி சிரல் =மாற்றார் மேற்சென்று கண்ணைக்கொத்தும் சிச்சிலிப்பொறி.
14.பன்றி =மதிற்றலையி லேறினா ருடலைக் கேட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி.
15.பிற = நூற்றுவரைக் கொல்லி (சதக்கினி), தள்ளிவெட்டி,களிற்றுப்பொறி,விழுங்கும்பாம்பு,கழுகுபொறி,புலிப்பொறி,குடப்பாம்பு,சகடப்பொறி,அரிநூற்பொறி முதலியன

சனி, 18 அக்டோபர், 2008

மாதவி காலத்து மகளிர் அணிகள்

விரலணி = கான்மோதிரம்
பரியகம் = காற்சவடி
நூபுரம் = சிலம்பு
பாடகம் = ஒருவகைக் காலணி
சதங்கை
அரியகம் = பாதசாலம்
குரங்கு செறி = கவான்செறி
விரிசிகை = முப்பத்திருவட மேகலை
கண்டிகை = மாணிக்க வளை
தோள்வளை
சூடகம்
கைவளை = பொன்வளை
பரியகம் = பாசித்தாமணி, கைச்சரி
வால்வளை =சங்கவளை,வெள்ளிவளை
பவழ வளை
வாளைப்பகுவாய் மோதிரம்
மணி மோதிரம்
மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி
சங்கிலி = வீரச்சங்கிலி
நுண்ஞாண்
ஆரம்
கயிற்கடையொகிய கோவை = பின்றாலி
இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை
தெய்வவுத்தி = சீதேவி
வலம்புரி
தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை
புல்லகம் = தென்பல்லியும், வடபல்லியும்

சனி, 13 செப்டம்பர், 2008

நூல் அறிமுகமும் வெளியீடும்

முருகர் குணசிங்கம் அவர்கள் வெளியிடும் கி.மு 300 இல் இருந்து இற்றைவரை சான்றுகளின் கொத்து வெளியிடப்பட்டுள்ளது. 14.09.2008 நோர்வே நாட்டிலும் வெளியிடப்படுகின்றது.

சனி, 31 மே, 2008

ஆறுவது சினம்

மனிதர்களால் காக்கப்பட வேண்டிய பண்புகளில் சினங்காத்தலும் ஒன்று. சினங்காத்தலைப் பற்றி பல சிறந்த புலவர்கள் தன் நூல்களில் எழுதியுள்ளனர்.உலகப் பொதுமறை என்னும் ஓர் நூலை இயற்றியவர் திருவள்ளுவராவார். இன்நூலின் மறு பெயர் திருக்குறள் ஆகும். திருக்குறளில் பல குறள்கள் சினத்தைப்பெற்றிக் கூறியுள்ளன.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏம்பு புணவைச் சுடும்

சொல்லிடத்துக் காப்பான் சினங்காபான்
னல்லிடத்துக் காக்கினென் காவாகா லென்மெலே

உள்ள இரு திருக்குறளும் சினத்தைப் பற்றிக் கூறியுள்ளது, இவை அதிகாரம் 31ல் எழுதப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தின் பெயர் "வெகுளாமை" ஆகும். பல புலவர்கள் சினத்தை தீயுடன் ஒப்புடுகின்றனர்; ஏனென்றால் தீ தீப்பிடித்த இடத்தை மட்டும் அழிக்காமல், சுற்றியுள்ளதையும் அழிக்கும்.
ஒளவையார் மூதுரையில் சினங்காதலைப் பற்றி எழுதியுள்ளார்.

உள்ளாங் கவர்ந்தெழுந்து ஓங்கு சினங்காத்து
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுதல் அரிதோ விளம்பு


ஒளவைப்புலவர் சினத்தை "மூன்டெழும்பும் வெள்ளம்" என்கிறார். இவருடைய சூடியிலும் "ஆறுவது சினம்" என்று எழுதுகிறார். சினத்தை தேவையில்லாமல் வெளிப்படுத்த வேண்டம்.
சர்மிலன்.குணபாலா